Wednesday, September 14, 2005

வாறாரு வாறாரு வந்துட்டாரு

மதுரை திருநகரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.கப்டன் கட்சியின் புதிய பெயர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.




விஜயகாந்த் புதிய கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்: ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்

தமிழ் திரை உலகின் முன்னணி நடி கர்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்க போவதாக கூறி வந்தார். இதனை தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டில் வெளியிடபோவதாகவும் அறிவித்தார்.

அதன்படி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரை திருநகரில் செப்டம்பர் 14-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருநகர் தோப்பூரில் பிரமாண்ட பந்தலும், தஞ்சை தோரணவாயிலும் அமைக்கப்பட்டன. பந்தலுக்கு முன்பு கொடிக்கம்பமும் நடப்பட்டது.






மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்தார். பசுமலை ஓட்டலில் தங்கி இருந்த அவர் குடும்பத்துடன் வந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டார்.

இன்று காலை மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் பசுமலை ஓட்டலில் இருந்து தனி பிரசார வேனில் மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். அவர்களை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.



பின்னர் விஜயகாந்த் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார். அங்கு ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே காலை 7.20 மணிக்கு கொடி ஏற்றி வைத்தார். உடனே 14 வென்புறாக்களை வானில் பறக்க விட்டார்.

அதன் பின்னர் ரசிகர் மன்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன், கார்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர். காலை 9 மணி வரை சுமார் 1 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர்.

பலத்த கரகோஷத்துக்கு இடையே நடிகர் விஜயகாந்த் 9.35 மணி அளவில் "தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்'' என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

புதிய கட்சியின் பெயரை மாநாட்டு மேடையில் அவர் அறிவித்ததும் தொண்டர்கள் `தலைவர் கேப்டன் வாழ்க' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கை தட்டினர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முன்வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

வேட்டி துண்டு வாங்க போட்டா போட்டி

விஜயகாந்த் கட்சி கரை போட்ட வேட்டி, துண்டுகள் விற்பனை மாநாட்டு பந்தலில் `களை' கட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டனர்.

ராட்சத பலூன்

மாநாட்டு பந்தலில் விஜயகாந்த் கட்சி கலரு டன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு இருந்தது. அது வழக்காக பார்க்கும் பலூன்களை விட மிக பெரியதாக இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் அந்த பலூனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

டிக்கெட் வாங்க குவிந்த கூட்டம்

மாநாட்டில் பங்கேற்க ரசிகர்கள் ரூ.5 கொடுத்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் முன்பு 4 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக ரசிகர்கள் நீண்ட கிï வரிசையில் காத்து நின்றனர்.

முதல்வர்கள் பட்டியலில் விஜயகாந்த் பெயர்

தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பெயர் பட்டியல் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் கடைசியாக 2006 என்று எழுதப்பட்டு அதற்கு நேராக உள்ள கட்டத்தில் விஜயகாந்தின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

பிரசார வேனின் முன்னும், பின்னும் எம்.ஜி.ஆர். படம்

மாநாடு முடிந்ததும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக விசேஷ பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அந்த வேனில் தான் விஜயகாந்த் மாநாட்டு பந்தலுக்கு வந்தார். வேனின் முன்புறம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படம் ஒட்டப்பட்டு இருந்தது. வேனின் பின்புறம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் இணைந்து இருக்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

அலங்கார நாற்காலியை மறுத்த விஜயகாந்த்

மாநாட்டு மேடையில் தலைவர்கள் இருக்க பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மட்டும் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. இதை கண்ட விஜயகாந்த் அந்த நாற்காலியில் இருக்க மறுத்து விட்டார். தனக்கும் எல்லோரையும் போல பிளாஸ்டிக் நாற்காலியே போதும் என்று கூறினார். உடனே அலங்கார நாற்காலி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டது. அதில் விஜயகாந்த் அமர்ந்தார்.

எல்லோரும் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்: பெண்களை நம்பிதான் கட்சி தொடங்கினேன்- மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு

மதுரை, செப். 14-





கட்சி பெயரை அறிவித்து விஜயகாந்த் பேசியதாவது:-

எனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் இந்த மாநாடு ஒரு சவால்.

இந்த சவாலை நீங்கள் எப்படி முறியடிப்பீர்கள் எப்படி அமைதி காப்பீர்கள் என்பதில்தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களும் இங்கு இருப்பார்கள். அவர்கள் தப்புத்தப்பாக வெளியே போய் சொல்ல காரணம் ஏற்பட்டு விடக்கூடாது.

இன்னும் சிறிது நேரம்தான் நீங்கள் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து கூடி இருக்கிறீர்கள். எல்லோரும் நம்மை திருப்பி பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அப்படி எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இங்கே கூடி இருக்கிறீர்கள்.

நான் மாலை 5 மணிக்குத்தான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேச இருக்கிறேன். உள்ளே ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறீர்கள். வெளியேயும் ஏராளமான ரசிகர்கள் நிற்கிறார்கள். எல்லோரும் மாநாட்டுக்கு உள்ளே வந்து அமர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

வெளியே நிற்கிற ரசிகர்களும் மாலையில் உள்ளே வந்து அமரும் வகையில் போலீஸ் உதவியுடன் ஏற்பாடு செய்வேன். நாம் யார் எப்படிபட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். இதற்குதான் இந்த மாநாடு.

கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும், என் மனைவியும் அடிக்கடி சிந்திப்போம். எனது நண்பர் பாலசுப்பிரமணியமும் இது பற்றி கடந்த 2 மாதங்களாக எழுதி, எழுதி பார்த்தார். ஆனாலும் சிலர் விஜயகாந்த் கட்சி பெயர் முடிவு செய்து விட்டு அதை அறிவிக்காமல் இருப்பதாக கூறினார்கள்.

உண்மையிலேயே நேற்று இரவுதான் இந்த பெயர் முடிவு செய்யப்பட்டது. மேலே உள்ள தெய்வம், உங்களது ஆசி ஆகியவற்றால்தான் இது முடிந்தது.

உண்மையிலேயே எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதுவரை பெயர் முடிவு செய்யாமல் இருக்கிறோமே என்று குழம்பிதான் போனேன்.

ஆனாலும் எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குலதெய்வம், திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரின் கருணையினால் நம் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அந்த பெயரை இதோ அறிவிக்கிறேன். (இவ்வாறு கூறியப்படி `தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்' என்று விஜயகாந்த் `மைக்'கில் மும்முறை உரக்க சத்தமிட்டு கூறினார்)

எத்தனையோ பெயர்களை வைத்து பார்த்தேன். ஆனாலும் இதுதான் சிறப்பாக இருந்தது. நான் தமிழக மக்களை நம்பி இருக்கிறேன். 90 சதவீதம் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிலும் 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம்தான் உள்ளது.

அந்த நம்பிக்கையில்தான் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறேன். மாநாட்டை 2 நாட்கள் நடத்த வேண்டியதுதானே என்று சிலர் கேட்டனர். எனது ரசிகர்கள் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள். அதனால்தான் ஒரு நாள் மாநாட்டை கூட்டி இருக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் கூறினேன்.

நாள் முழுவதும் மாநாட்டில் அவர்கள் இருப்பார்களா? என்று கேட்டனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், எனது ரசிகர்கள் நிச்சயம் என்னோடு இருப்பார்கள். அவர்கள் ராணுவம் போன்றவர்கள். எப்போதும் நான் சொல்வதை கேட்பவர்கள்.

"வீழ்வதும் நாமாக இருப்பினும் வாழ்வது தமிழகாக இருக்கட்டும்.''

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மதுரையிலிருந்து நேரடி ரிப்போர்ட் மாலைமலர்.:)

வந்துட்டோம்ல

3 comments:

Anonymous said...

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.

/எதற்காக முற்போக்கு?
எதற்காக திராவிடம்?
/

குமரேஸ்.

திராவிடம் பேசாமல் தனியே தமிழ் மட்டும் பேசி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிடமுடியாது.தமிழ்பேசும் தெலுங்கர்கள் மலையாளிகள் எல்லோரையும் அரவணைத்து செல்ல திராவிடம் என்று ஒரு சொல் எப்போதும் பாதுகாப்பானது..தேசியம் கூட தேசிய நீரோட்டத்தில் டெல்லியில் கலக்க உபயோகப்படும்..

இந்த முற்போக்குத்தான் புரிபடுகுதில்லை..

neyvelivichu.blogspot.com said...

muRpokku manja kalarukkaaga.. sinnatha vibuthi vachirukkaru paarunga.. thiraavidar kazhagam muRpokkaanathaala adhu..

anbudan vichchu

கிவியன் said...

நடந்ததை நடந்தபடி கவர் செய்து எழுதியதற்க்கு ரொம்ப நன்றிங்க. மக்களே இந்த முக்கியமான போட்டவையும் பாருங்கோ.