Thursday, September 22, 2005

காரை.சுந்தரம்பிள்ளைகாலமானார்

கலாநிதி (கவிஞர்) காரை.சுந்தரம்பிள்ளை நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் காலமா னார். சிறுநீரகக் கோளாறினால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை இந்தமாதம் முற்பகுதியில் மோசமடையத் தொடங்கியது.இறக்கும் போது அவருக்கு வயது 66.லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமும் நாடகவியல் டிப்ளோமாவும் இரண்டு முது மாணிப்பட்டங்களும் நாடக ஆய்வுக்கான கலாநிதிப் பட்டமும் பெற்ற இக்கல்விமான் நான்குமுறை சாகித்திய மண்டலத்தின் இலக் கியப் பரிசுபெற்றார்.பலாலி ஆசிரிய கலாசாலையின் விரி வுரையாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற சுந்தரம்பிள்ளை "சங்கிலியம்' , "தேனாறு', "வள்ளி', "பாதைமாறியபோது' முதலிய கவிதை நூல்களையும் "ஈழத்து இசை நாடக வரலாறு'"நடிகமணி வி.வி வைரமுத்து வாழ்வும் அரங்கும்', "இந்து நாக ரிகத்தில்கலை', "சிங்களப் பாரம்பரிய அரங்கு', "மலையகத்துக் காமன் கூத்து' ஆகிய ஆய்வு களையும் செய்தவர்.கலாநிதிப் பட்டத்துக்காக அவர் செய்த "வட இலங்கையின் பாரம்பரிய அரங்கு ' என்ற ஆய்வு பாராட்டுப் பெற்றது; தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது.அறுபது, எழுபதுகளில் கவியரங்கு என்ற இலக்கிய வடிவத்தை யாழ்ப்பாணத் தில் மக்களிடையே கொண்டு சென்ற முன் னோடிகளில் காரை. சுந்தரம்பிள்ளை குறிப் பிடத்தக்கவர்
-uthayan-

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி.

Anonymous said...

ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள...