Tuesday, October 18, 2005

ஸ்ரீராம ஜெயம்

தலைக்கவசம் இல்லாத பயணம் யாழ்.நீதிபதி விநோத தீர்ப்பு!

யாழ்.நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணி யாத ஒருவரை ஏற்றிச் சென்ற மோட் டார் சைக்கிள் சாரதிக்கு ஆயிரம் தட வைகள் மோட்டார் சைக்கிளில் வேறு நபரை தலைக்கவசம் அணியாமல் ஏற்றிச்செல்லமாட்டேன் என எழுதி வழங்குமாறு யாழ்.மேலதிக நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார்.யாழ்.குடாநாட்டில் மோட்டார் சைக்கிளில் சாரதியுடன் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கமைய பொலி ஸார் யாழ்.குடாநாட்டில் திடீர் வாகனப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய சாரதி அனுமதிப் பத் திரம் இல்லாத நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அமர்த்தி பய ணம்செய்த மேற்படி மோட்டார் சைக் கிள் சாரதிக்கு எதிராக பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.மேற்படி வழக்கை விசாரித்த நீதிவான் ரூபா 3500 தண்டம் விதித்த துடன் ஆயிரம் தடவைகள் நான் இனிமேல் தலைக்கவசம் அணியாது எந்த நபரையும் ஏற்றிச் செல்ல மாட் டேன் என்று எழுதி நேற்றைய தினமே சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட் டார்.

-eelanatham-

1 comments:

Anonymous said...

நன்றி கஜனி

புலிங்களோட நீதிபதிக்கு இப்படியான கேசுகள் வராது..அவங்க ரேஞ்சே வேற..