Sunday, November 06, 2005

பசு நேசன்

இலங்கை அதிபர் வேட்பாளர் அதிரடி பிரசாரம் வீட்டுக்கு ஒரு பசு
10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார்.

இலங்கையில் வரும் 17-ந்தேதி அதிபர் தேர்தல். பிரசாரம் இப்போதே சூடு பிடித்துவிட்டது. தேர்தல் என்றால் வாக்குறுதி இல்லாமலா?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான விக்டர் ஹெட்டிகொட என்பவர் இலங்கை மக்கள் என்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் வீட்டுக்கு ஒரு பசுவை இலவசமாக தருவேன் என்று பிரசாரம் செய்து கலக்கி வருகிறார்.

அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்கள் நமக்கும் பசு உண்டா? இல்லையா? என்று பயப்படவேண்டாம்.

பசுவை வைத்துக் கொள்ள தொழுவம் ஏற்பாடு செய்து தந்தால் அவர்களுக்கும் பசு உண்டு. நான் தரப்போகும் பசு ஒவ்வொன்றும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார் ஹெட்டி கொட. இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டுக்கு ஒரு பசு தரும் ஐடியாவை கொண்டு வந்திருக்கிறேன்.

மிச்சமாகும் பாலை வெண் ணெயாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்கிறார் இவர். இந்த வேட்பாளர் 3500 பேர் பணிபுரியும் மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் என்பதுடன் பெரும் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்.http://www.newstamilnet.com/

0 comments: