Thursday, November 10, 2005

ஆரம்பிச்சுட்டாங்கையா

‘கற்பு பற்றி துணிச்சலாக பேசிய குஷ்புவை கண்டித்த தமிழர்கள், தலை குனிய வேண்டும்’ என்று கூறிய சுகாசினிக்கு கண்டனம் குவிகிறது.

தமிழர்கள் தலைகுனிய வேண்டுமா? சுகாசினி பேச்சுக்கு கண்டனம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்

திருமணம் ஆகும்வரை பெண்கள் கன்னியாகத்தான் இருப்பார்கள் என நம்பும் ஆண்கள் முட்டாள்கள் என்று குஷ்பு கூறியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென குஷ்புவுக்கு ஆ த ர வ £ க சுகாசினி கிளம்பியிருக்கிறார். ‘‘குஷ்பு சொன்னது சரியான கருத்து. துணிச்சலாக கருத்து கூறிய அவரை இங்கே இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

குஷ்புவுக்கு எதிராக பேசிய தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழக மக்கள் அனைவரின் சார்பிலும் நான் குஷ்புவிடம் மன்னிப்புகேட்கிறேன்’’ என்று சுகாசினி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் சுகாசினி இவ்வாறு பேசியுள்ளார். இதே விழாவில் பேசிய குஷ்பு, ‘‘நான் சொன்னதில் தப்பு இல்லை. அப்படி சொன்னதற்காக நான் வெட்கப்படவில்லை. இன்னமும் என் கருத்து அதுதான்’’ என்று கூறினார்.

அவரை ஆதரித்து சுகாசினி பேசியதும் குஷ்பு அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்றி தெரிவித்தார்.

சுகாசினி பேசியதற்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், திரையுலகினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:


திருமாவளவன்: ‘என்னை கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்’ என்று சுகாசினி கூ றி யு ள் ள £ ர் . குஷ்புவைகண்டித்தவ ர்களைத்தான் சுகாசினி இப்படி கூறியிருக்கிறார். ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்புகேட்க இவர் யார்? தமிழர்கள் எல்லாரும் வெட்கித் தலைகுனிய « வ ண் டு ம் எ ன் று சு க £ சி னி கூறியிருக்கிறார்.

எந்த செயலுக்கும் வெட்கப் படாதவர்கள் இப்படி சொல்வதில் ஆச்சர்ய மில்லைதான். ஆனாலும், சுகாசினிதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஷ்பு செய்த சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்க சுகாசினி வேண்டுமானால் சிபாரிசு செய்யட்டும். அதில் முதல் ஆளாக கையெழுத்து போட தயாராக உள்ளேன். ஆனால், தமிழ் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால், குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலையை சுகாசினிக்கும் தமிழ் பெண்கள் ஏற்படுத்துவார்கள்.

தி.மு.க.பேச்சாளர் வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பூ, சுகாசினி ஆகியோர் தயாராகி விட்டனர். இவர்களை திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதை காட்டினால் அதை அவர்களால்தாங்கமுடியாது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன்: தமிழர்களை பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாக பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்பூவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சு க £ சி னி « ப சி யு ள் ள த £ க கருதுகிறேன்.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேசசிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு ª க £ ம் பு மு ¬ ள த் தி ரு ப் ப து உண்மைதான்.

நடிகை மனோரமா: முதல்வரும் ஒரு நடிகைதான். அவரும் குஷ்பு சொன்னது த வ று எ ன க் கூ றி யி ரு க் கி ற £ ர் . முடிந்துபோன விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். நான் படித்தவள் கிடையாது. எய்ட்ஸ் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.


கவிஞர் மேத்தா: குஷ்பு, விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி, கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அ ¬ ண க் க ப £ ர் ப் ப து த £ ன் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது. இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.


இயக்குநர் கேயார்: குஷ்பு பேசியதும் சுகாசினி பேசியதும் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை வரவேற்க முடியாது. காரணம் கண்ணகி வா-ழ¢ந்த நாடு இது. விளம்பரமே இல்லாமல் இருப்பதைவிட தவறான விஷயங்களை பேசி இப்படிப்பட்ட விளம்பரமாவது கிடைக்கட்டுமே என அவர்கள் விரும்புகிறார்கள்.

http://www.tamilmurasu.in/2005/nov/10/2.pdf

8 comments:

கொழுவி said...

இப்பதிவுக்கு நீர் கொடுத்திருக்க தலைப்பைத்தான் உம்மைப்பாத்துச் சொல்ல வேண்டியிருக்கு.

ஆரம்பிச்சிட்டாங்கையா.....

Anonymous said...

//தி.மு.க.பேச்சாளர் வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பூ, சுகாசினி ஆகியோர் தயாராகி விட்டனர். இவர்களை திருத்த முடியாது.//

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்களின் மேடைப்பேச்சை இரண்டு நிமிடம் கேட்டாலே போதும், இவர்களது யோக்கியதை எந்த அளவு என்று தெரியும். எல்லாம் நேரம் ;-)

Anonymous said...

கொஞ்ச நாள் சும்மா இருக்க மாட்டாங்களே. வலைப்பதிவுகளில் குத்து வெட்டு தொடரும் என்று
போட வேண்டியதுதான். அடுத்த ரவுண்டுக்கு வலைப்பதிவாளர்கள் தயாரா? :)

Anonymous said...

சுகாசினி பாப்பாத்தி அல்லவா! அவள் சொன்னாள் சரியாகத்தான் இருக்கும்.

அடுத்தது பட்டு மாமி கிட்டு மாமால்லாம் கிளம்பிடுவோ.

Anonymous said...

நன்றி கொழுவி.
நீங்கள் அந்த நீர்ப்பாஷையை விடமாட்டியள் போலை..:)

சன்னாசி
தீபபொறி ஆறுமுகம் செந்தமிழ்ப்பேச்சு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.இரு கட்சிகளிலும் இருந்தவரல்லவா?



//குஷ்பு தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளதாய் படித்தேன். அது உண்மையானால் தொலைக்காட்சியில் தமிழ் பெண்களுக்காக உருகி கண்ணீர் வடித்தது மண்ணிப்பு கேட்டு பேட்டி கொடுத்தது இயலாமையா //

இதுதான் எனது சந்தேகமும்..தங்கர் மன்னிப்பும் குஸ்பு மன்னிப்பும் சரியாகிவிட்டது என்று நினைத்தேன்..

ஆனால் மனோரமா ஆச்சி கூறியதுதான் விளங்கவில்லை

//நடிகை மனோரமா: முதல்வரும் ஒரு நடிகைதான். அவரும் குஷ்பு சொன்னது த வ று எ ன க் கூ றி யி ரு க் கி ற £ ர் . முடிந்துபோன விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். நான் படித்தவள் கிடையாது. எய்ட்ஸ் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.
//

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I think all the parties to the controversies i.e. Kushboo, PMK, DPI, media have a vested interest
in keeping it alive so that they can use it for fulfilling their
objectives.Othwerwise why should Kushboo talk about this topic in
that function.In which way that
function was related to her views
on pre-marital sex etc. People have almost forgotten Sushasini.
Hence perhaps she wants some
publicity.So she has used this
ocassion to air her views.She
could have issued a ststement
from abroad supporting Kushboo
when the controvesy was at its
peak.

வெளிகண்ட நாதர் said...

ஆரம்பிச்சுட்டாங்கையா.... ஆரம்பிச்சுட்டாங்கையா.... (வடிவேலு ஸ்டைலு)

Anonymous said...

ravi srinivas :-
//She
could have issued a ststement
from abroad supporting Kushboo
when the controvesy was at its
peak. //
அதுதானே..


வெளிகண்ட நாதர்.-

//(வடிவேலு ஸ்டைலு) //

சத்தம்போட்டு சொல்லாதீங்க வடிவேலுக்கு இங்கு எதிரிகள் அதிகம்.