Friday, April 21, 2006

அதிமுக வெல்லும் தீவாரின் கருத்துக் கணிப்பு


லயோலா கருத்துக்கணிப்பு உளவுப்படை கருத்துக்கணிப்பு என வெளியாகும்போது தீவாரின் கருத்துக்கணிப்பு இது.

தமிழகத்தில் எந்த அனுதாப அலையும் இம்முறை வீசாவிட்டாலும் பல கூட்டணிகளை எதிர்க்கும் நோஞ்சான் திமுக என ஒரு அனுதாப அலையை உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள் போலிருக்கிறது.

எனினும்

கருணாநிதி டால்மியாபுரத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தென்ன இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாயிருந்தென்ன.. எம்ஜிஆர் தோஷம் இருக்கும்வரை இரட்டை இலைக்குத்தான் வெற்றி!

5 comments:

ஜெயக்குமார் said...

/கருணாநிதி டால்மியாபுரத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தென்ன /

எல்லாம் ஒரு நம்பிக்கைதாம்பா. 2 ரூபாய்க்க்கு அரிசின்னா நீங்கள் நம்பி ஓட்டுப்போடுவதில்லையா, அது மாதிரிதான் இதுவும். எப்படியும் ரயிலை நிறுத்திவிடுவார்கள் என்கிற ஒரு நம்பிக்கைதான். இவரு என்ன காந்தியா? வெள்ளைக்காரன் காலால மிதிச்சாலும், அவன் காலத்தடவி எனக்கு பல் உடையிர அளவுக்கு உதைச்ச உன் காலு வலிக்குதான்னு கேட்க்கப்போறாரு. போலிஸ் இழுத்துகிட்டு போகும்போதே "அய்யோ கொலை பன்னுறாங்களே, காப்பாத்துங்க! காப்பாத்துங்க"-ன்னு டப்பிங் கொடுத்தவருதான கருணாநிதி

Vassan said...

வணக்கம்.

தீவார் என்பது முதலில் புரியவில்லை.

நிற்க.

இந்தி மொழியில் தீவார் என்றால் குட்டிச் சுவர் என்பதாக ஞாபகம்.

Anonymous said...

ஜெயா கட்சியின் லண்டன் பிராஞ்சு தலைவர் ஜெயக்குமாரு கெளம்பிட்டாருய்யா.

2ரூபாய்க்கு அரிசி போடுவேன் என்றதும் எதிர்க்கேள்வி கேட்ட வைகோ அண்ணாத்தை, ஜெயா ஒன்னேமுக்கா ரூபாக்கி அரிசி போடுவேன் என்றதும் ப்ளேட்டை திருப்பி ஜால்ரா அடிச்சாரே வைகோ ஞாபகம் இருக்குதாங்ணா?

அந்தே சிஞ்வைத்தான் நீங்களும் போடுறீங்க ஜெயக்குமாரு.

theevu said...

வாசன் வணக்கம்
தீவார் என்பது நாட்டார் என்பது போல தீவிலிருந்து வந்தவன் அல்லது வாழ்பவனைக் குறிக்கும்.இடுகுறிப்யெர்.

ஜெயக்குமார் மற்றும் நண்பர் வெங்காயம் கருத்துக்கு நன்றி.
நீங்கள் இருவரும் ஆளுக்கொரு கட்சி க்கருத்து சொன்னபடியால் கணிப்பை உறுதிப்படுத்திசொல்லமுடியவில்லை.

ஜெயக்குமார் said...

/அந்தே சிஞ்வைத்தான் நீங்களும் போடுறீங்க ஜெயக்குமாரு./

வெங்காயம், நான் என்ன சொன்னேன்னு மறுபடியும் ஒரு தடவைப்படிச்சுப்பாருங்க. நான் என்னுடைய பதிவுகளிலும் சரி, பிண்ணூட்டங்களிலும் சரி 2 ரூபாய் அரிசியை ஆதரிச்சு ஒரு முறைகூட சொல்லியது இல்லை. இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் அதிமுக-வையும் ஆதரிச்சது கிடையாது. 2 ரூபாய் அரிசியெல்லாம் 2 மாதத்துக்குதான். தீபாவளி, பொங்கல் சிறப்புத்தள்ளுபடி மாதிரி, இது தேர்தல் தள்ளுபடி. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதைதான் செய்வாங்க.

ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு பேச்சுக்கு கூட இந்த வெங்காயம் 2 ரூபாய்-ன்னு சொல்ல மாட்டேங்கிறாங்கப்பா!