Wednesday, July 26, 2006

ஓடவிட்டு உதைக்கணும்

புலிகேசி சொல்லுறாரு நான் ஆமோதிக்கிறேன்.





பல காலத்திற்கு பிறகு நல்ல தகுதரத்தில் இணையத்தில் இருந்து ஒரு படம் இறக்கிப் பார்த்தேன்.படத்தின் பெயர் உயிர்.ஒரு விதமான சைக்கோ படம்..அண்ணிக்காரி மைத்துனனை ஆணாள நினைக்கும் ஒரு படம்..

.என்னடா இப்படியெல்லாம் படமெடுத்திருக்கிறார்களே என நினைக்க நம்ம புலிகேசி இதுபற்றி பாய்ந்திருக்கிறார் எனது கருத்தும் அதுதான்.

தமிழ்முரசில் வந்த அந்த செய்தி இது..

புனிதமான அண்ணி உறவை சீரழிப்பதா?

'உயிர்' படம் எடுத்தவன ஓடவிட்டு உதைக்கணும்

சென்னை ஜூலை 26-ÔÔ

அண்ணி என்ற புனிதமான உறவை சீரழித்த உயிர் படம் எடுத்தவர்களை ஓடவிட்டு உதைக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறியுள்ளார்.
சீமான் இயக்கிய தம்பி படத்தின் 110-வது நாள் வெற்றி விழா நேற்று இரவு சென்னையில் நடந்தது. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திரைப்பட கலைஞர்களுக்கு செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கேடயம் வழங்கினார்.

விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது:சினிமா என் வீடு. ஆனா அது இப்போ அசுத்தமாயி கிடக்கு. அத சுத்தம் பண்ண வேண்டியது எம் பொறுப்பு, இப்பல்லாம் என்ன படம் எடுக்றாய்ங்க உயிரு .....ன்னு, இவங்கெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா...அண்ணி உறவ பாத்ததில்லயா? அண்ணி கொழுந்தன் மேல ஆசப்படுறாளாம், கொழுந்தியா அக்கா புருஷன்மேல ஆசப்படுறாளாம், படமா எடுக்றாய்ங்க இவுங்கள எல்லாம் தூக்கிப்போட்டு அடிக்கலாம்போல இருக்கு. ஓடவிட்டு உதைக்கணும்போல இருக்கு.நல்ல குடும்பமா, கூட்டுக்குடும்பமா ஒண்ணுமண்ணா பழகிக்கிட்டிருக்கிற குடும்பத்துல சபலத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குற அளவுக்கு படம் எடுக்கலாமா?ஏன் நல்ல படமே எடுக்க முடியாதா.

இப்ப இம்சை அரசன்னு ஒரு படத்தை நான் கொடுக்கலையா, குழந்தைங்க கொக்கி போட்டு பெத்தவங்கள கூட்டிக்கிட்டு கொத்து கொத்தா தியேட்டருக்கு போறாங்களே...

சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா, ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் பாருய்யாம்பாய்ங்க. இவனெல்லாம் பேசி நாம கேக்கவேண்டியிருக்கும்பாய்ங்க.

படத்துலதான் நான் காமெடியன். நிஜத்துல நானும் உங்கள மாதிரி உணர்ச்சியுள்ள மனுஷந்தேன்.
சினிமால தப்பு தப்பா படம் எடுத்தா தட்டிக் கேக்க ஒரு குழுவ போடுங்கன்னு அமைச்சர கேட்டுக்றேன்.
அப்பதான் இவிங்க திருந்துவாய்ங்க.
இப்ப ஆட்சிக்கு வந்திருக்கிற கலைஞர் அய்யா இத செய்யணும். ஏன்னா சினிமாக்கு நிறைய செஞ்சிக்கிட்டிருக்கிய. மாபெரும் நடிகன் சிவாஜிக்கு சிலை வச்சு பெருமை படுத்தினீங்க. தமிழ் பேரு வச்சா வரி கட்ட வேண்டான்னு சொல்லிட்டிங்க.இவ்வாறு வடிவேலு பேசினார்.

விழாவில் 'தம்பி' படத்தின் திரைக்தை வசன நூலை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன் பெற்றுக் கொண்டார். இயக்குனர்கள் பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் அருள்மொழி, தமிழச்சி, சுப.வீரபாண்டியன், இசை அமைப்பாளர் வித்யாசாகர், நக்கீரன் கோபால், நடிகர் மாதவன், நடிகை பூஜா உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக கவிஞர் அறிவுமதி வரவேற்றார். சீமான் நன்றி கூறினார்.

11 comments:

மு. மயூரன் said...

உயிர் பார்க்க கிடைத்தது. நல்லபடம்.
ஓட விட்டு உதைக்கவேண்டியவர்கள் பட்டியலில் வடிவேலுவுக்கு முதன்மையான இடம் உண்டு.

பார்க்கப்போனால் இந்திய வர்த்தக சினிமா தொழிற்றுறையையே ஓட விட்டு உதைக்கணும்.

இவர்கள் போன்றவர்கள் நடித்து வெற்றிபெறும் படங்களில் வரும் மூன்றாந்தர ஆபாசத்தோடு ஒப்பிடுகையில், உயிர் எவ்வளவு அழகான, அழுத்தமான நல்ல படம்?

கேடுகெட்ட சினிமாவில் பொறுக்கித்தின்று பிழைக்கும் கூட்டம் பேச வந்திட்டுது.

வசந்தன்(Vasanthan) said...

//சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா, ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் பாருய்யாம்பாய்ங்க//

நானும் அதைத்தான் சொல்கிறேன்.
இம்சை அரசன் தந்த திமிர்தான் இப்படிப் பேசச் செய்கிறது.
ஏன் இவ்வளவு நாளும் இவர் கொட்டிய குப்பை பற்றி மறந்துபோச்சோ? அவையெல்லாம் சின்னப்பிள்ளைகள் கொக்கிபோட்டு பெற்றோரை அழைத்துவந்து பார்க்கும் தரமாகவா இருந்தன?
தமிழ்ச்சினிமாவை சிறுவர்கள் பார்ப்பது பற்றி யோசிக்க வைக்கும் காட்சிகள் முக்கால்வாசி நகைச்சுவையென்ற பெயரால் வழங்கப்படுபவைதாம். ஆம், பாடல்களை விடவும் ஆபாசமான, அருவருப்பான காட்சிகள் நகைச்சுவை நடிகர்கள் வழங்குபவைதாம்.

ஒலிவாங்கியும் மேடையும் கிடைத்துவிட்டால் அரசியல்வாதிகளையும் மிஞ்சிவிடுவர் எங்கள் திரையுலகத்தினர்.

உங்கள் நண்பன்(சரா) said...

நாமும் அப்படியே "தலை"க்கு ஆதரவுக்"கரம்" நீட்டலாம்னு வந்தா இங்க ஒரு குரூப் கையை ஒடிக்க ரெடியா இருக்கு,
ஆத்தாடி.. நமக்கு எதுக்கு வம்பு, வழக்கம் போல நடுநிலைமை(வி)யாதியாவே போய்டுவோம்.

அதே :D



அன்புடன்...
சரவணன்.

கசி said...

படத்தைத் தயாரித்தது சிங்கப்பூர் சரவணனாம். செருப்பாலயே அடிக்கனும் அவனை!

கசி said...

படத்தைத் தயாரித்தது சிங்கப்பூர் சரவணன் என்பவனாம். செருப்பால் அடிக்கனும் அந்த நாயை!

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா... இப்போ இது வேறயா..?(இதுல 2 பின்னூட்டம் வேற)நல்லவேலை "சிங்கப்பூர்" சரவணன் என்று குறிப்பிட்டமைக்கு நன்றி.எதுவா இருந்தாலும் பேசி தீர்துக்கலாம்,


படத்தை தயரித்தவருக்கு செருப்புன்னா, அதில் நடித்த,இயக்கிய,இசை அமைத்தவர்களுக்கு..?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

"Uyir" storey is o.k, but screen play only confused. Vadivel comments on this is film is too much.Vadivel was nothing 10 years before.Presently all the films or serial is taken only based affair with ladies.You should not make any stupid speech when somebody gives mike to you.You can make comments in general and not on particular person.

Mistakes happen when wife or husband is not smart enough to tackle the life in present generation.In this case husband do not have commandable position neither in house nor in office to impress wife and office.Anni told to her husband that why she did not like him. Every lady expects that her husband must be smarter than anybody.She gives following reason to marry her husmand's brothter.

1)She feels her life not better after coming out from her family. That means he has not satisfied his wife after marrigae.

2)She need safe and secure life which can be given only by him.

2) Only he can be more affection with his brother daughter.

சின்னக்குட்டி said...

வாய்ஸ் விட்டால் பவர் எப்படி ஈக்குது என வடிவேலு கூட டெஸ்ட் பண்ணி பாக்குது.... இதையெல்லாம்...கண்டுக்காதை நயினா...

மாயவரத்தான் said...

ஆரம்ப கால கட்டங்களில் (அதாவது கவுண்ட்ஸ் கூட்டணியை விட்டு தனியாக வந்த நேரத்தில்) இதே வடிவேலு, கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களில் காமெடி என்ற பெயரில் விரசம் எப்படி இருந்தது என்பது தெரியாததாக்கும்?

இன்றைக்கு வடிவேலு ஒரு சிறந்த காமெடி நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதற்காக, அடுத்தவரை ஓட விட்டு உதைக்கணும் என்றால், முதல் உதை யாருக்கு விழுந்திருக்க வேண்டும் தெரியுமா?!

பொன்ஸ்~~Poorna said...

//இன்றைக்கு வடிவேலு ஒரு சிறந்த காமெடி நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை.//

தெரியலீங்க.. இதைக் கூட ஒத்துக்க முடியலை.. இப்போ எல்லாம் நல்ல காமெடியே இல்லாமல் போய் விட்டது..

உயிர் நான் பார்க்கவில்லை.. கலாபக் காதலன் பார்க்கக் கிடைத்தது.. பத்திரிக்கைகளில் படித்தது போல் அத்தனை மோசமாக இல்லை.. அறிவு, மூளை எல்லாம் மூட்டை கட்டி வீட்டில் வைத்து விட்டால் இந்தப் படம் எல்லாம் பார்த்துட்டு வரலாம்..

Udhayakumar said...

//'உயிர்' படம் எடுத்தவன ஓடவிட்டு உதைக்கணும்///

தீவு, உங்க கருத்துலயும், வடிவேலு கருத்துலயும் எனக்கு உடன்பாடு இல்லை...

வடிவேலு சந்திரமுகியில பண்ணுனது காமெடியா? நீங்க வடிவேலு இப்போ சொன்னதை ஒத்துகிட்டீங்கன்னா அதை கண்டிச்சும் ஒரு பதிவு போட வேண்டியதுதானே...