Wednesday, April 25, 2007

ஆசிய ரசிகர்கள் கொண்டாட்டம்


ஆசிய ரசிகர்கள் கொண்டாட்டம்




உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகள் வெளியேறிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள 4வது ஆசிய அணி இலங்கை பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆசிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெளியேறியதால் வெறுப்படைந்த ரசிகர்கள், உலகக் கோப்பை போட்டியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். முதல் அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இலங்கை, அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம் ஆசிய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

இலங்கை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நியூசி. அணியுடனான அரை இறுதியின் போது, இலங்கை அணிக்கு அந்நாட்டு ரசிகர்களுடன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களும் உற்சாகமாக ஆதரவு அளித்தனர்.

கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் போட்டி தொடங்கி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஸ்டேடியம் அமைதியாகவே இருந்தது. ஜெயவர்த்தனே விளாசத் தொடங்கியதும், ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். சகலவிதமான வாத்தியக் கருவிகளுடன் ரசிகர்கள் உற்சாகக் கூக்குரல் எழுப்பி, இலங்கை வீரர்களை ஊக்குவித்தனர்.

இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து விளம்பர நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பைனல் நெருங்கிவிட்ட நிலையில் உலகக் கோப்பை போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா விளையாடாததால், நள்ளிரவு வரை கண்விழித்துப் பார்க்கத் தயாராக இல்லாத இந்திய ரசிகர்கள் கூட இலங்கை விளையாடும் பைனலை ஆர்வமுடன் ரசித்துப் பார்க்க தயாராகிவிட்டனர். உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பரவிக் கிடப்பதால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி பல நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dinakaran.TN

7 comments:

VSK said...

Go SriLanka!

Anonymous said...

உலகெங்கும் இருக்கும் இலங்கைத் தமிழர்களில் பலர் சிறீ லங்கா அணிக்கு ஆதரவு தரமட்டார்கள். சிறீ லங்கா இலங்கைத் தமிழரை உள்ளடக்கவில்லை. அத்துடன், சிறீ லங்கா மனித உரிமை மீறலில் முதலாம் இடத்தில் இருக்கும் ஒரு சனநாயக நாடு(என்று கூறிக் கொள்ளும்). அந்த நாட்டிற்கோ அந்த அணிக்கோ மனித நேயமுள்ள எவரும் ஆதரவு தர மாட்டார்கள். தரவும் கூடாது.

கானா பிரபா said...

வாற திங்கள் இலங்கையில பொதுவிடுமுறையாம் உண்மையே?

Pot"tea" kadai said...

AUSSIE RULES>>>

theevu said...

நன்றி vsk ,pot tea kadai,annonym

நான் அவுஸ்திரெலியாவிற்குத்தான் சப்போர்ட்.அநேகமாக நான் சப்போர்ட் பண்ணும் ரீம் தோற்றுவிடும்.:)

theevu said...

//வாற திங்கள் இலங்கையில பொதுவிடுமுறையாம் உண்மையே?//

பிரபா லீவு அனுபவிக்கிறதெண்டால் இலங்கையில் பிறந்திருக்கவேண்டும்..வாழவேண்டும்.ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லீவு..பிறகு வெள்ளம் புயல் பிறகு கிரிக்கெட்டுக்கும் லீவெண்டால் பிறகென்ன..

அது சரி நீங்கள் எந்தப் பக்கம் விளையாட்டிலை?

கானா பிரபா said...

//theevu said...
அது சரி நீங்கள் எந்தப் பக்கம் விளையாட்டிலை? //

நான் ஜெயிப்பவன் பக்கம்
இப்பிடியெல்லாம் டயலாக் சொல்லமாட்டன் ;-)

எனக்கு கிட்டிப்புள்ளும் கிளித்தட்டையும் தவிர ஒண்டும் ஏறாது.