Friday, June 08, 2007

மூத்த பதிவராகிய நான்

அண்மையில் 1944 ல் பிறந்த என்னை யார் அந்த மூத்த பதிவர் எனக் கேட்பதும் சாடை மாடையாக பின்னூட்டமிடும்போது மூத்த பதிவர் என விமர்சிப்பதும் கொஞ்சம் கூட நல்லாயில்லை.


நாடோடி மன்னனை(எம்ஜிஆர் படம் சரத் படமல்ல) முதல் நாள் முதல் show பார்த்த என்ன கிண்டலடிப்பதும்(முடிந்தால் சிவாஜி படம் முதல் நாள் முதல் show பார்த்து பதிவில் விமர்சனம் எழுத தில் இருக்கா?) யார் நீ மூத்த பதிவர் எனக் கேட்பதும் ரொம்ப ஓவராக உங்களுக்கே படவில்லையா?


ஒரு மூத்த பதிவருக்கு தமிழ்மணம் செய்யும் கைமாறு இதுதானா? அட்மின் இதை தட்டிக்கேட்க வேண்டாமா?இதை தட்டிக்கேட்க ஒருவருமில்லை.காசிக்கும் போக வழியில்லை.


ஆ ஊ எனன்றால் செய்வினை வைப்பதுபோல் க்ளாசிக்கல் லாங்கியூஜ் செந்தமிழில் ஒரு பதிவு எனது பெயரிலேயேவைத்து ஒரு வலைப்பக்கம் திறக்கிறீர்கள்.

இதை விட வேறென்ன உங்களால் செய்ய முடியும்?


என்னை மதித்து ஒரு சிலை வைக்கும் காரியத்திற்கு இது ஈடாகுமா?

தமிழில் வலைப்பதிவில் முதன் முதல் மண் தோன்றாக் காலத்து மூத்த பதிவர் நான் என்ற பெயரைநீங்கள் இருட்டடிப்பு செய்தாலும் நான் கவலைப்படமாட்டேன்.

நான் தான் இணையத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முதல் தோன்றிய முதல்வன்.

என் அப்பன் கொழுவிகுருநாதன் என் சாதனையை அறிந்து கொ(ல்)ள்வான்.

என் படத்தை தமது பதிவில் வெட்டியாய் உழைத்து ஒடாய் போனதற்காக படமாக போடும் அன்பர்கள் அதற்கு பதிலாக ஒரு பாயும் புலியோ அல்லது ஒரு புளியோ(ஓரு புளியமரத்தின் கதை) போட்டால் சந்தோஸமடைவேன்.

பெயர் கூட தேவையி்லலை.நான் ராம பக்தன் ராம்வோச்

எத்தனை நூலகம் தவழ்ந்து எகத்தனை பத்திரிகை மேய்ந்து எத்தனை பதிவு போட்டிருப்பேன்.எல்லா விதயமுமே பலனளிக்காமல் வேஸ்ற்.

அதனை விடுத்து மூத்த பதிவாளர் யார் எனக் கேட்பது ரொம்ப இன்ஸல்ட்.

சுடசுட எத்தனை பதிவுகள் இட்டிருப்பேன்..எல்லாமே ஓஸியில் வாசித்துவிட்டு சற்றுமுன் கூட இட்டிருந்தேனே..நான் சுடுவதும் பதிவதும்சுட்டுவதும் என்று எத்தனை பதிவுகள் ஐயா?

ஒட்டக்கூத்தரே என் வாசல் வழியாகத்தான் வெளியேறவேண்டும்

யார் அந்த மூத்த பதிவர் என கேட்டீரே ஒரு கேள்வி.

நான் மூக்கை நாசி என்றுதான் பின் நவீனத்துவமாக எழுதுவேன்.
அது உங்களுக்கு புரியாவிட்டால் அது எனது தப்பல்ல..எனக்கு இந்த கும்மி கோலாட்டம் பின்னூட்டம் எல்லாம் ஒத்து வராது. நான் தனீீீீீீ வழி. கிழக்கு வழி..


குத்தாட்டம் ஆடுவதற்கு உங்களுக்கு மூத்த பதிவர்தான் கிடைத்தனரா?

நாம் என்ன தீமை உங்களுக்கு செய்தோம்

பின்னூட்டமிட மறுத்தோமா..

கும்மியை ரசிக்க மறுத்தோமா?

என்னையா செய்தோம்?

மூத்த பதிவரை தேடி தேடி குமட்டில் குத்துகிறீர்களே...

6 comments:

Anonymous said...

வணக்கம் ஐயா.இது மக்கள் தொலைக்காட்சி

சின்னக்குட்டி said...

வீணாக என்னுடன் போட்டியிட வேண்டாம் தீவு......... நானே மூத்த பதிவர்(வயதில்) நானே மூத்த பதிவர் மூத்த பதிவர் மூத்த பதிவர்..(எக்கோ பண்ணுதாம்)

நாமக்கல் சிபி said...

நான்தான் மூத்த பதிவரென்று இங்கே ஒரு அனானி அன்பர் ஆதாரத்துடன் கொண்டாடிவிட்டுப் போயிருக்கிறார்
என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்!

Anonymous said...

சமீபத்தில்தான் பிறந்த என்னையும் இந்த வம்புச் சண்டையில் இழுத்துவிட முயற்சிகள் நடந்து வருகின்றன.
என்னை விட்டு விடுங்கள்.

நான் இளைஞன்.நான் இளைஞன்.நான் இளைஞன்.

:(

பின் குறிப்பு :
அந்த வேலையைச் செய்வது யார் என்பது நான் வணங்கும் அந்த வட திருப்போரை கும்ப சிறுங்குழை நாதனுக்கே வெளிச்சம். உங்களுக்குப் புரியவில்லை எனில் எலிக் குட்டி சோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

selventhiran said...

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து சில நாட்கள்தான் ஆகிறது என்றாலும், வலை உலகத்தில் நடந்து வரும் சிலவற்றைக் கணிக்க முடிகிறது. வலை திரட்டிகள் வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்கிறது. பதிவர்களுக்கிடையே மூர்க்கத்தனமான அரசியல் இருக்கிறது. சில மூத்த பதிவர்கள் 'க்ளாஸ் லீடர்' போல நடந்து கொள்கிறார்கள். கொள்கைகளில் முரண்பட்டவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்களாக அறியப்படும் பெரியாரிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தங்களது வலைப்பூவை படிக்க வைக்க சிலர் அடிக்கும் குரங்கு பல்டிகள் நகைக்க வைக்கிறது. 'ஹிட்ஸ்' களுக்காக அபத்தமாக தலைப்பு வைக்கிறார்கள். அளவுக்கதிகமான பதிவுகளை போட வேண்டும் என்பதற்காக 'இன்று மூத்திரம் மஞ்சளாக போனது' என்றெல்லாம் எழுதி இம்சிக்கிறார்கள். கொஞ்சம் முரண்பட்டு பின்னூட்டம் இட்டால், அவர்களை ஒழித்துக்கட்ட ரகசிய கூட்டம் போடுகிறார்கள். கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் என சுஜாதா, தனக்கு நேர்ந்தது, உணர்ந்தது, ரசித்தது எல்லாம் கலந்து கட்டி எழுதும் கட்டுரைகளின் அப்பட்டமான பாதிப்புகள் கிட்டத்தட்ட எல்லாரிடமே இருக்கிறது. வலையின் ஓரே பலம் அதன் சுதந்திரம்; பலவீனம் கட்டுபாடற்ற எதேச்சதிகாரம்

theevu said...

சின்னக்குட்டி

// நானே மூத்த பதிவர்(வயதில்) நானே மூத்த பதிவர் மூத்த பதிவர் மூத்த பதிவர்..(எக்கோ பண்ணுதாம்)//

தியாக உள்ளம் உங்களது.வாங்கி கட்டிக்கொள்ளுங்கள். :)