Thursday, June 14, 2007

சிவாசி ஓசியில் பார்க்க..






விடியக்காலை கருக்கலில் 3 மணி காட்சிக்கு முதல்நாள் இரவு 9 மணிக்கு எல்லாம் கியூவில் நின்று படம் பார்த்த இரசிக அனுபவங்கள் நிறையவே உண்டு.

அது அந்தக் காலம்


இப்ப என்னடாவெண்டால் காலம் மாறிப்போச்சு..ரெக்னிக்கல் பல கல் தூரம் முன்னேறிவிட்டது.

ஒன்லைன் புக்கிங் எண்டுறாங்கள் முதல் காட்சி எண்டுறாங்கள்.ஆனால
நாயுடு பாக்கிறார் தனுஸ் பாக்கிறார்.

இரசிகன் மட்டும் வழமைபோல் அண்ணாந்து பாக்கிறான்.


எல்லாவற்றையும் கபளீகரம செய்வதுபோல் இணையத்திலும் அந்தா வருது விரைந்து வருது என்று விளம்பரம் வேறு காட்டுறாங்கள்.இந்த திறத்திலை படத்தை தியேட்டரிலை போய் பாப்பம் எண்டால்

ஒரு 20 யூரோ வைத்தால் தான் சிவாசி படம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

கோடி கோடியாய் பணம் கொட்டி ஸ்பெயினில் மாடு பிடித்ததற்காக நான் ஏன் 20 யூரோ கொடுத்து பார்க்கவேண்டும்?

சந்திரமுகிக்கு எவ்வளவு பணம் செலவளித்தார்கள்?

ஏன் அது 800 நாட்கள் தாண்டி ஓடவில்லையா?அல்லது இது 800 கடந்து ஓடுமா?

இரஜினி நரைத்த தலையுடன் வந்தாலே கூட்டம் சேருமே..பிறகேன் இந்தச் செலவு?

சரி
நான் ஒருவன் மட்டும் தியேட்டருக்கு போவதானால் 20 யூரோ கொடுத்து பார்க்கலாம் வீட்டில் உள்ள
எல்லோரையும் அழைத்து சென்று இந்த விலைக்கு படம் பார்ப்பதானால் கடைசியில் மொட்டைதான்..(இரஜனி கூட படத்தில் மொட்டைதானாம்.)

பேசாமல் ஓஸியில் படம் க்ளியராகப் பார்ப்பதற்கு ஒரு வழி உண்டு.சத்யராசுக்கு பிடிக்காத வழி .

சண் ரீவியில் ரொப் 10 என்று கிட்டத்தட்ட படத்தில் 90 வீதமும் காட்டுவார்கள் .அப்போ பார்த்துக்கொள்வோம்.

படத்தில் சந்தேகம் வந்தால் இணையம் கைகொடுக்கட்டும்.

8 comments:

G.Ragavan said...

நெதர்லாந்துலயும் 20 யூரோதானாம். ஆனா எங்க ஊர்ல இல்ல. அவ்வளவு தூரம் பஸ் பிடிச்சிப் போகனும் வேற. நானும் போக மாட்டேன்னுதான் நெனைக்கிறேன்.

வவ்வால் said...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ஆஹ், சிவாஜினு தலைப்பு வைத்து தூண்டில் போட்டா மீன் மாட்டுரா போல பின்னூட்டம் குவியும்னு ஒரு அதிதீத ஆசை போல. எப்படியோ நாசமாக போக நானும் பின்னூட்டம் போட்டாச்சு :-))
( நிறைய பேர் இப்படி மொக்கைகளை பார்த்துவிட்டு சத்தம் போடாம போய்டுராங்க )

முகமூடி said...

தீவு... இது என்ன சின்னபுள்ளதனமா... என்னவோ அவங்க எகனாமிக்கல் ஸ்ட்ராட்டஜி எல்லாம் போட்டு பாத்து டிக்கட் விலை வச்ச மாதிரி இல்ல பேசுறீங்க. பட தயாரிப்பு விலை கம்மியா இருந்தா அதுக்கேத்த மாதிரி டிக்கட் விலைய கம்மியா வப்பாங்கன்னா நினைக்கிறீங்க... அதெல்லாம் வினியோகஸ்தருங்களுக்கு மட்டும்தான் சாமி.. ஹய்யோ ஹய்யோ...

theevu said...

G.Ragavan
//அவ்வளவு தூரம் பஸ் பிடிச்சிப் போகனும் வேற//

பார்த்தால் விமர்சனம் எழுதிப் போட்டுடுங்க ராகவன்

வவ்வால்

//எப்படியோ நாசமாக போக //

எத்தனைபேரைத்தான் தமிழ் மணத்தில்
இப்படி நீங்கள் சபிக்கமுடியம்.

மொக்கை கிங் கிங்கொங் எல்லாம் இருக்காங்க..நான் அவங்க முன்னாலை சும்மா ஒரு தூசு :)

முகமூடி
//பட தயாரிப்பு விலை கம்மியா இருந்தா அதுக்கேத்த மாதிரி டிக்கட் விலைய கம்மியா வப்பாங்கன்னா நினைக்கிறீங்க... //

சும்மா ஒரு நப்பாசைதான்.

SurveySan said...

20 யூரோவா அங்க?

இங்க $16.

பொறுத்தார் பூமி ஆள்வார். நாம ஆள்வோம்!

இம்சை said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சின்னக்குட்டி said...

தீவு.. உண்மையாய் சிவாஜி பட முக்கியமான பாட்டு காட்சி ஓசியிலை போகுது பார்க்கில் பாருங்க இதிலை sivaji video song

Anonymous said...

படம் வெளிவந்து 24 மனித்தியாலம் ஆகிவிட்டது இன்னமும் இணையத்தில் வரவில்லை, என்னய்யா இணையம் நடத்துறாங்கள், ரெம்ப மட்டமான சர்வீசா இருக்கு:-((

கடுப்புடன்
இணையத்தில் மட்டும் படம் பாப்போன்.