Monday, December 10, 2007

பட்டறை போதுமப்பூ

தமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் வலியம் குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.



காலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.



அதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது



ஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்



செம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்

முதல் போணியும் வலைப்பதிவாயிற்று.





பதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.



இப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்



பதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.



அதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.



அதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.



அதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்

வைத்து எழுதவேண்டியுள்ளது.





இந்த திறத்தில்





இத்தனையாயிரம் போட்டிகளுக்கு மத்தியில்



வலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு

வேறை



முந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து

அவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்



எல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.



சாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..



சென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்





இந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.



என்ன கொடுமை இது..



இப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து

வலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்?





இப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.



எனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்
படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.





லேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,தல மிஸ்ஸிங் ஏன்? மற்றும்
தமிழ்வெளி பொலிட்டிக


தவிக்க விட்டுட்டியே ராசா..

Read More...

Monday, December 03, 2007

நான் நித்திரையாகிப்போனேன்




டொக்டரை பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைப்பு ஏதோ காரணங்களால் எப்போதும் தள்ளியே போய்க்கொண்டிருந்தது.

நேற்று எப்படியும் எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பது என முடிவெடுத்தேன்.

டாக்டர் விஜய் நடித்த அழகியதமிழ்மகன் படம் இணையத் தியேட்டரில் ஆசுவாசமாக இருந்து பார்த்தேன்.

நான் சாதாரணமாக விஜயின் ஓகே ஓகே டாக்கடர் விஜயின் படங்கள் விரும்பிப் பார்ப்பேன்.அடிதடி குத்துவெட்டு குத்தாட்டம் வடிவேலு அப்படி இப்படி என்று ஒரு களிப்பூட்டும் படமாக இருக்கும்.

இது என்னடாவெண்டால் ..என்னத்தை சொல்ல எல்லாரும்தான் இதைப் பற்றி எழுதிவிட்டார்களே..

ஒருவனுக்கு தனக்கு இதுதான் சரிவரும் எனத் தெரியவேண்டும்.

அதைவிட்டுவிட்டு தல யின் படத்திலை பாதி
காலின் படத்திலை பாதி என்று ஒரே சொதப்பல்.

அண்ணா பழையபடி வாளோ அருவாவோ தூக்குங்கண்ணா..


யாருப்பா இப்ப அந்த அருவா வைச்சிருக்கிறது..முந்தி பாண்டியன் கொண்டுதிரிந்தார்.பிறகு நெப்போலியன் இப்போ யாரிடம் அருவா?

வேலுவிடமா பொல்லாதவனிடமா?

சரி இனி முக்கியமான விடயத்திற்கு வருகிறேன்.

படம் பார்த்த அரைவாசியில் படம் பார்த்தபடியே தூங்கிவிட்டேன்.அரைவாசி படம் பார்த்து அதைப்பற்றி விமர்சனம் எழுதும் ஆள் நானாகத்தானிருப்பேன்.

படத்தில் விஜயுடன் ஜோடியாக வருவது அசின் இல்லையாம் அது ஸ்ரேயாவாம் இன்று காலை நண்பன் ஒருவன்
கூறியது.

அப்போ அது அசின் இல்லையா?

Read More...

Monday, November 12, 2007

சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)




பிரபல வல்லரசு நாடொன்றின் அரசியல் ஆய்வுப்பணியின் ஆய்வு நிமித்தமாக சோதனைக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள்


அதுவும் வேட்டி கட்டிய தமிழக தமிழ்ப்புலிகள்


பின்வரும் தகமைகளை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.


ஆயுட்கால அரசியல் வாழ்வு சேமப்பத்திரம் இறுதியில் கையளிக்கப்படும்.


தகுதி கல்வி நிலை:-


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது விரும்பத்தக்கது.


அந்த தகுதி இல்லையாயினும் ஏதாவது ஒரு

பத்திரிகையை தமிழில் அரசியல் நையாண்டி என்று சொல்லி நடாத்தி கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.


அல்லது முன்னாள் வாராந்தப்பத்திரிகை ஆசிரியராகவாவது இருந்திருத்தல் வேண்டும்.


இந்த தகைமைகள் எதுவுமே இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கடசியில் தொண்டராகவோ அல்லது தலைவராகவோ இருக்கவேண்டும்.


யாவும் பொருந்தாத பட்சத்தில் ஆதித்தமிழர் கோட்டா முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விதிவிலக்காக இந்திய பிரதமருக்கோ அல்லது இந்தியப்பிரதமரை நிர்ணயிக்கும் அம்மையாருக்கோ பதிலை எதிர்பார்க்காமல்

ஈழத்தமிழருக்கு இந்தியா ஆயுத உதவி செய்யாதே என கடிதமாவது எழுதியிருக்கவேண்டும். (கவிதைகள் இங்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டா)


லங்கா ரத்னா பட்டம் பெற்றிருந்தால் தேர்வு இல்லாமல் தெரிவு செய்யப்படுவீர்கள்.


கல்லக்குடி போராட்டத்தில் கதாநாயகனாக நீங்கள் கலந்துகொண்டிருந்தால்

அதை மறந்துவிட்டிருத்தல் வேண்டும்.



உங்கள் விண்ணப்பத்திற்கான முடிவு திகதி


தமிழீழ பிரகடனத்திற்கு முன்னர்



விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி


தீவு தமிழ்மணம்.டொட் காம்


முகவரி அடிக்கடி மாறும் விண்ணப்பதாரர்கள் கவனத்திலெடுக்கவும்.



லேபிள்:- டால்மியாபுரம் வைகோ கலைஞர் சுப்பிரமணியசுவாமி துக்ளக் காங்கிரஸ்








Read More...

காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!

பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால் குத்து சரமாரியாக வெட்டு .ஓட ஒட விர்ட்டு போன்று பல சரமாரியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன் காண்பித்தார்.

இதோ அந்த படம்.


காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்


ஆனால் எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்
இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.

தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு சாபமிட்டீர்களா??:)


லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்



தமிழுக்கு தீவின் அஞ்சலி


Read More...