Friday, September 23, 2005

வாலு போயி கத்தி வந்தது..

பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவுகொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சென்னை, செப். 23 குஷ்புக்கு சரமாரி கண்டனம்!http://www.tamilmurasu.in/(மாலைப்பத்திரிகை)

‘’தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார். தனது சொந்த வாழ்க்கையைப் போல மொத்த சமுதாயமும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். தனது, கொச்சையான கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்‘’ என்றும் எதிர்ப்புக் குரல் கிளம்பி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்தியா டுடே இதழில் செக்ஸ் பற்றி குஷ்பு கூறிய கருத்து இதுதான்:‘’பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்துக்கு மு ன் பு ª ச க் ஸ் வைத்துக்கொள்ளும்போது கர்ப்பம் ஆகாமலும். பால்வினை நோய் வராமலும் பெண் தன்னை
தற்காத்துக்கொள்ள வேண்டும்‘’

குஷபுவின் இக்கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்:

நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க. கொள்கைப்பரப்பு செயலாளர்): தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்துகிற விஷயம் இது. நடிகை குஷ்பு, தன்னுடைய நீதியை பொது நீதியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உயிரைவிடவும், கற்பை மேலாக மதிப்பது தமிழ்க்கலாசாரம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,ஒழுக்கம் தேவையே இல்லை என்பது சிலரின் வாழ்க்கை முறையாக இருக்கலாம். மொத்த சமுதாயமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது சுத்த அபத்தம். பெண், எல்லா வகையிலும் உரிமை பெற்றவளாக மாற வேண்டும், வாழ வேண்டுமென்பதே எங்களின் லட்சியம். அது ஒழுங்கீனத்தில் போய் விட்டுவிடக்கூடாது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துதான்.

பிரவீன்காந்த் (இயக்குநர்): குஷ்பு தமிழ்நாட்டுக்கு தெரியாத நடிகையே இல்லை. அவருக்கு இங்கே கோயில் கட்டி கும்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இப்படி ஒரு கேவலமான, கலாசார சீரழிவான கருத்தை சொல்லி இருப்பதால் கழிவறையில் ஆண் பெண் என்று வித்தியாசம் காட்டும் படமாக இவர் படத்தை ஒட்ட வேண்டும். அந்த அளவுக்கு இந்தக் கருத்தின் மூலம் தரம் தாழ்ந்துவிட்டார். நடிகை என்பதால்தான் அவர் இப்படி « ப சு கி றார் . அ வ ¬ ர பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை. தனது கருத்துக்கு குஷ்பு நிச்சயம் ம ன் னி ப் பு க் « க ட் க வேண்டும்.

இல.கணேசன் (பா.ஜ.க. அகில இந்திய செயலாளர்): குஷ்புவின் கருத்து கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்த ச மு தாய « ம இ த ற் கு கவலைப்பட வேண்டும்.

தேன்மொழி (ஐகோர்ட் முன்னாள் அரசு வழக்கறிஞர்): கு ஷ் பு த ன் ன ¬ வ த் து க் ª க £ ண் டு எல்லோரையும் மட்டமாக « ப ச க் கூ ட £ து .

இ ந் து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் கருத்து இது. குஷ்பு எல்லா ª ப ண் க ¬ ள யு ம் இழிவுபடுத்துகிறார்.

உமா மகேஸ்வரி (கவிஞர்): படித்தவனோ படிக்காதவனோ த ன் ம ¬ ன வி யி ட ம் க ன் னி த் த ன் ¬ ம ¬ ய எதிர்பார்க்காமல் இருப்பான் எ ன் ப ¬ த எ ன் ன £ ல் ஏ ற் று க் ª க £ ள் ள முடியவில்லை.

சினேகன் (பாடலாசிரியர்): தமிழச்சிகளுக்கு தனி வரலாறு உண்டு. அதை ஓடி வந்தவர்கள் அசிங்கப்படுத்த வேண்டாம்.

சுந்தர்.சி. (குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? அசிங்கமான விஷயத்தைப் பற்றி நான் பேசுவதே இல்லை-. இ ¬ த வி ட் டு « வ று விஷயத்தைக் கேளுங்கள்.

http://www.tamilmurasu.in/

Read More...

Thursday, September 22, 2005

காரை.சுந்தரம்பிள்ளைகாலமானார்

கலாநிதி (கவிஞர்) காரை.சுந்தரம்பிள்ளை நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் காலமா னார். சிறுநீரகக் கோளாறினால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை இந்தமாதம் முற்பகுதியில் மோசமடையத் தொடங்கியது.இறக்கும் போது அவருக்கு வயது 66.லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமும் நாடகவியல் டிப்ளோமாவும் இரண்டு முது மாணிப்பட்டங்களும் நாடக ஆய்வுக்கான கலாநிதிப் பட்டமும் பெற்ற இக்கல்விமான் நான்குமுறை சாகித்திய மண்டலத்தின் இலக் கியப் பரிசுபெற்றார்.பலாலி ஆசிரிய கலாசாலையின் விரி வுரையாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற சுந்தரம்பிள்ளை "சங்கிலியம்' , "தேனாறு', "வள்ளி', "பாதைமாறியபோது' முதலிய கவிதை நூல்களையும் "ஈழத்து இசை நாடக வரலாறு'"நடிகமணி வி.வி வைரமுத்து வாழ்வும் அரங்கும்', "இந்து நாக ரிகத்தில்கலை', "சிங்களப் பாரம்பரிய அரங்கு', "மலையகத்துக் காமன் கூத்து' ஆகிய ஆய்வு களையும் செய்தவர்.கலாநிதிப் பட்டத்துக்காக அவர் செய்த "வட இலங்கையின் பாரம்பரிய அரங்கு ' என்ற ஆய்வு பாராட்டுப் பெற்றது; தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது.அறுபது, எழுபதுகளில் கவியரங்கு என்ற இலக்கிய வடிவத்தை யாழ்ப்பாணத் தில் மக்களிடையே கொண்டு சென்ற முன் னோடிகளில் காரை. சுந்தரம்பிள்ளை குறிப் பிடத்தக்கவர்
-uthayan-

Read More...

Monday, September 19, 2005

குருபார்வை

குரு பெயர்ச்சி வந்தாலும் வந்தது.பத்திரிகைகள் பலனைப்போட்டுகுழப்பி விட்டன.ஒரு இராசிக்கு இரு பெரும் பிரபல பத்திரிகைகள் எழுதியஇராசி பலன் கீழ்வருமாறு.

உதாரணம் விருச்சிகராசி

தினத்தந்தியின் பலன் பணம் கொட்டும் என்கிறது.

தினமணிப்பலன்பிச்சைக்காரன் ஆவாய் என்கிறது..

தினத்தந்தி:-
குரு பகவான் இப்போது பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரித்துப் பார்வை பலத்தால் பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகிறார். மன்னவன் பனிரெண்டில் சஞ்சரிக்கும் பொழுது மங்கல ஓசையும் இல்லத்தில் கேட்கும். மழலையின் ஓசையும் இடையறாது ஒலிக்கும். தங்கமும், வெள்ளியும் தானே வந்து சேரும். தைரிய மும், தன்னம்பிக்கையும் கூடும். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உலகத்தாரே ஆச்சரியப்படுவர்! குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவை வழிபட்டு கூடுதலான நன்மையைக் காணுங்கள்.

தினமணி:-
கடந்த வருடம் முழுவதும் லாபத்திலிருந்து விருச்சிக ராசி அன்பர்களுக்கு நன்மைகளையே வழங்கிக் கொண்டிருந்த குரு பகவான், தற்போது விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு சங்கடங்களும், தடைகளும் ஏற்படும். சேமிப்பெல்லாம் கரைந்துவிடும் சாத்தியக்கூறு உண்டு. சம்பாத்தியத்திலும் தடை ஏற்படலாம். பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருக்கும். கடன்பாக்கி வசூலாகாது. கேட்ட இடத்தில் கடனுதவியும் கிடைக்காது. அரசாங்க உதவி, உற்றார் உறவினர்களின் உதவி ஏதும் தற்போது இருக்காது. எனவே சிக்கனம் மிகவும் அவசியம். வாங்கிய கடன்களையே சரிவர திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானத்திற்கும் மனச்சங்கடத்திற்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். சுபகாரியங்களையும் தள்ளிப்போடுங்கள்.

மொத்தத்தில் கோள் என் செய்யும் நாளென் செய்யும் என்று ஆறுதலடையவேண்டியதுதான்.


Read More...

Sunday, September 18, 2005

செவியின்பம் 1

என்னைப்போல் மேடைபபேச்சை தமிழை இரசிக்கும் வலைப்பதிவர்களுக்காக திருவாசகம், வெரித்தாஸ் புகழ் கஸ்பர் அடிகளாரின் நோர்வே உரை.

நன்றி தமிழ்நாதம்.

Read More...