கோவை வலைப்பதிவர் பட்டறையில் கலந்து கொள்ள நீங்கள் தகுதி பெற்றவரா?
நீங்கள் வலை பதிந்து மாமாங்கம் ஆகியிருக்கலாம்.ஆனால் ஒழுங்காக வலை மேய்பவரா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் நீங்கள் பாஸ்.
இது வேந்தன் டுயுட்டோரியலோ,சீமான் ரியூட்டரியோ அல்ல.
ஆனால் 99 வீதம் பாஸ் மார்க் நிச்சயம்.
பார்த்து பிட் அடித்து கூகிள் மூலமும் சரியான விடையை சொல்லலாம்.
தேர்வுத்தாளுக்காக பொலிசாரிடம் தடியடி வேண்டத்தேவையில்லை.
வினாத்தாள் இதோ.
கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே குறிக்கலாம்.
முதல் வினா
சிம்பு என்றால் ஞாபகம் வருவது யார்?
1.ரோசா வசந் 2. நமீதா
பூனை சிலசமயம் இவர் சொல்லும் கேட்கும்
1.சயந்தன் 2. எலி
மகரஇலைகுழைநாதனை அறிவீரோ?
1.டோண்டு 2.பாண்டியமன்னன்
பொட்டி வந்துடுச்சு என்பவர்
1.பயாஸ்கோப்பு சின்னக்குட்டி 2.எடிசன்
குறி சொல்பவர் யார்? (உதவி:-நீட்டலளவை குறைத்தலளவை)
1.ஸ்பாம் 2.வெங்கட்
பிசினாக ஒட்டிக்கொள்ளும் அசின் நினைவு இவர் மனதில்
1.டீசே 2.கானா பிரபா
வலைப்பதிவர் அகராதியில் இன்னமும் விளக்கம் கொடுக்கப்படாத சொல்
1.பாசிசம் 2.சாகசம்
தமிழ்மணத்தின் தற்சமய சுடுசொல்
1.கழுகு 2 தயாநிதிமாறன்
கலவரபூமி எனப்படுவது
1.இலங்கை 2.தமிழ்மணம்
பட்டை என்றால்
1.நாமம் 2.தண்ணி அடிப்பது 3.அது பெரிய தொழில்நுட்பம்
வலைப்பதிவர் சந்திப்பில் முக்கிய அம்சம்
1.தாகசாந்தி 2.போண்டா 3.மனம்விட்டுப்பேசுதல்
எந்த வலைப்பதிவில் இந்த வரிகள் வந்தன? சந்தர்ப்பம் கூறுக.
1 ஹிஹிஹி நான்லாம் ஒரு "வீக் டார்கெட்டுண்ணா" என்னை போயி ஹிஹி உங்களுக்கே அசிங்கமா இல்லை
2. இது எல்லாம் யாரு பண்ணுவான்னு கேக்குறவுங்க...கலர் பார்த்துட்டே கூட இது எல்லாம் பண்ணலாம்.
3.தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை.. என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள்.
4 அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.
5.விட்டுக்கு உள் புகைந்துகொண்டிருந்த புகை சிம்னி வழியாக இப்போது வந்திருக்கிறது அவ்வளவு தான்.
6.பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது
7.சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?
7."செற்றியுக்குள்ளை கிடந்து என்னத்தைப் பாக்கப்போறாய்? மோட்டிலை சிலந்தியும் நுள்ளானும் எப்பிடிப் பிடிபடப்போகுதெண்டோ?"
8.மேசராசிக்கார நேயர்களே இன்று மஞ்சள் துண்டு போட்டு வெளியில் செல்லுங்கள். இன்றும் கூவும் ஒரு கேவலமான வியாபார நிறுவனத்தை மாபெரும் அரசியல் இயக்கத்தோடு தொடர்பு படுத்துவது அவசியமா?
9.நாடு இருக்கிற இருப்பிலை நாய் நாலு நாள் லீவும் ஒரு நாள் போனசும் கேட்டதாம்
10.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு கணினி இருக்கும் என்பது புது மொழி
இதில் முன்றில் ஒரு பாகத்திற்கு நீங்கள் விடையை சரியாக சொல்லியிருந்தால் நீங்கள்
தமிழ்மணத்தில் குடித்தனமமே நடாத்தலாம் .நீங்கள் பாஸ்.