Wednesday, July 26, 2006

ஓடவிட்டு உதைக்கணும்

புலிகேசி சொல்லுறாரு நான் ஆமோதிக்கிறேன்.

பல காலத்திற்கு பிறகு நல்ல தகுதரத்தில் இணையத்தில் இருந்து ஒரு படம் இறக்கிப் பார்த்தேன்.படத்தின் பெயர் உயிர்.ஒரு விதமான சைக்கோ படம்..அண்ணிக்காரி மைத்துனனை ஆணாள நினைக்கும் ஒரு படம்..

.என்னடா இப்படியெல்லாம் படமெடுத்திருக்கிறார்களே என நினைக்க நம்ம புலிகேசி இதுபற்றி பாய்ந்திருக்கிறார் எனது கருத்தும் அதுதான்.

தமிழ்முரசில் வந்த அந்த செய்தி இது..

புனிதமான அண்ணி உறவை சீரழிப்பதா?

'உயிர்' படம் எடுத்தவன ஓடவிட்டு உதைக்கணும்

சென்னை ஜூலை 26-ÔÔ

அண்ணி என்ற புனிதமான உறவை சீரழித்த உயிர் படம் எடுத்தவர்களை ஓடவிட்டு உதைக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறியுள்ளார்.
சீமான் இயக்கிய தம்பி படத்தின் 110-வது நாள் வெற்றி விழா நேற்று இரவு சென்னையில் நடந்தது. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திரைப்பட கலைஞர்களுக்கு செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கேடயம் வழங்கினார்.

விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது:சினிமா என் வீடு. ஆனா அது இப்போ அசுத்தமாயி கிடக்கு. அத சுத்தம் பண்ண வேண்டியது எம் பொறுப்பு, இப்பல்லாம் என்ன படம் எடுக்றாய்ங்க உயிரு .....ன்னு, இவங்கெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா...அண்ணி உறவ பாத்ததில்லயா? அண்ணி கொழுந்தன் மேல ஆசப்படுறாளாம், கொழுந்தியா அக்கா புருஷன்மேல ஆசப்படுறாளாம், படமா எடுக்றாய்ங்க இவுங்கள எல்லாம் தூக்கிப்போட்டு அடிக்கலாம்போல இருக்கு. ஓடவிட்டு உதைக்கணும்போல இருக்கு.நல்ல குடும்பமா, கூட்டுக்குடும்பமா ஒண்ணுமண்ணா பழகிக்கிட்டிருக்கிற குடும்பத்துல சபலத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குற அளவுக்கு படம் எடுக்கலாமா?ஏன் நல்ல படமே எடுக்க முடியாதா.

இப்ப இம்சை அரசன்னு ஒரு படத்தை நான் கொடுக்கலையா, குழந்தைங்க கொக்கி போட்டு பெத்தவங்கள கூட்டிக்கிட்டு கொத்து கொத்தா தியேட்டருக்கு போறாங்களே...

சினிமால இசட்டுல ஆரம்பிச்சு ஏ வரைக்கும் எல்லாம் பாத்தாச்சு. இப்படி சொன்னா, ஒரு படம் ஜெயிச்ச கொழுப்புல பேசுறான் பாருய்யாம்பாய்ங்க. இவனெல்லாம் பேசி நாம கேக்கவேண்டியிருக்கும்பாய்ங்க.

படத்துலதான் நான் காமெடியன். நிஜத்துல நானும் உங்கள மாதிரி உணர்ச்சியுள்ள மனுஷந்தேன்.
சினிமால தப்பு தப்பா படம் எடுத்தா தட்டிக் கேக்க ஒரு குழுவ போடுங்கன்னு அமைச்சர கேட்டுக்றேன்.
அப்பதான் இவிங்க திருந்துவாய்ங்க.
இப்ப ஆட்சிக்கு வந்திருக்கிற கலைஞர் அய்யா இத செய்யணும். ஏன்னா சினிமாக்கு நிறைய செஞ்சிக்கிட்டிருக்கிய. மாபெரும் நடிகன் சிவாஜிக்கு சிலை வச்சு பெருமை படுத்தினீங்க. தமிழ் பேரு வச்சா வரி கட்ட வேண்டான்னு சொல்லிட்டிங்க.இவ்வாறு வடிவேலு பேசினார்.

விழாவில் 'தம்பி' படத்தின் திரைக்தை வசன நூலை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன் பெற்றுக் கொண்டார். இயக்குனர்கள் பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் அருள்மொழி, தமிழச்சி, சுப.வீரபாண்டியன், இசை அமைப்பாளர் வித்யாசாகர், நக்கீரன் கோபால், நடிகர் மாதவன், நடிகை பூஜா உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக கவிஞர் அறிவுமதி வரவேற்றார். சீமான் நன்றி கூறினார்.

Read More...