Friday, October 21, 2005

கொல்லவல்ல கொல்லவல்ல!

காசியுடன் முரண்படுபவர்களுக்கான வழிகாட்டல்.

வலை பதியும் ஆனால் தமிழ்மணத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகாதவர்களை நாம் விலக்கி வைத்துவிடமுடியாது.




உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படாமல் ஆனால் மக்கள் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும்.

அதே நேரம் அங்கே பதியவெண்டும் இங்கே இதை கவனிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்ககூடாது.

தனிப்பட்ட தலையீடுகளோ அல்லது வேறு 3 மாத அல்லது 4மாத இடைவெளி என்ற பழு இல்லாமல் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட முறையின்படி இலகுவாக செய்யலாம்.


உங:கள: ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு இடத்தில்(சொல் உதவி Voice on Wings) தமிழ்ப்பதிவுகள் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்துவிடுங்கள் வேறு ஒன்றுமே பிரத்தியேகமாக பண்ணத்தேவையில்லை. (http://technorati.com/ல் அந்த வலைப்பக்கத்திற்கு போய் புதுப்பிக்கும்போது ஒவ்வொருமுறையும் அறிவிக்கவேண்டும்.இங்கு அது தேவையில்லை.)

தேதி வாரியாக நீங்கள் பதிந்து 20 நிமிடத்திற்கு முன்னதாகவே திரட்டி தரப்படும்.

இதுவே அந்த உரல் :-

http://search.blogger.com/?ui=blg&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+&scoring=dஇதனை உங்கள் விருப்பு பக்கமாக ஆக்கிகொள்ளுங்கள்.

இந்த உரலை தமிழ்மணத்தில் சேர்த்தாலே வலைப்பதிவிற்கு புண்ணியமுமாச்சு.சுமை இறக்கியதுமாச்சு..

முயன்று பாருங்கள்.

பி.கு அதற்காக இதை தமிழ்மணத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.தமிழ்மணம் ஒரு தனி மனிதனின் மொத்த உழைப்பு.தேடி தேடி புது உத்திகளை கையாண்டு நெறிப்படுத்திய ஒரு வலைப்பதிவனின் தேடல்.எனவே அதற்கென்று சில அனுகூலங்கள் இருக்கும்.

காசியின் முடிவுபற்றி தீவின் கருத்து.-
“நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல.”

Read More...

Wednesday, October 19, 2005

ஒரு ரதியும் வேண்டாம்

தமிழ்ப்பதிவுகள் ,இது ஒரு சோதனை முயற்சி வராதீங்க,தமிழ்ப்பதிவுகள்..

Read More...

Tuesday, October 18, 2005

ஸ்ரீராம ஜெயம்

தலைக்கவசம் இல்லாத பயணம் யாழ்.நீதிபதி விநோத தீர்ப்பு!

யாழ்.நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணி யாத ஒருவரை ஏற்றிச் சென்ற மோட் டார் சைக்கிள் சாரதிக்கு ஆயிரம் தட வைகள் மோட்டார் சைக்கிளில் வேறு நபரை தலைக்கவசம் அணியாமல் ஏற்றிச்செல்லமாட்டேன் என எழுதி வழங்குமாறு யாழ்.மேலதிக நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார்.யாழ்.குடாநாட்டில் மோட்டார் சைக்கிளில் சாரதியுடன் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கமைய பொலி ஸார் யாழ்.குடாநாட்டில் திடீர் வாகனப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய சாரதி அனுமதிப் பத் திரம் இல்லாத நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அமர்த்தி பய ணம்செய்த மேற்படி மோட்டார் சைக் கிள் சாரதிக்கு எதிராக பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.மேற்படி வழக்கை விசாரித்த நீதிவான் ரூபா 3500 தண்டம் விதித்த துடன் ஆயிரம் தடவைகள் நான் இனிமேல் தலைக்கவசம் அணியாது எந்த நபரையும் ஏற்றிச் செல்ல மாட் டேன் என்று எழுதி நேற்றைய தினமே சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட் டார்.

-eelanatham-

Read More...

Monday, October 17, 2005

அந்தப் பெண்ணை விடுங்கய்யா.

நச்சென்று தமிழ்முரசு மீண்டும் ஒரு தலைப்பிட்டு பிரச்சனையை ஊதிப்பெரிசாக்குகிறது.

பல கேள்விகளுடன் வந்த ஒரு கேள்விக்கு தமிழ்முரசு இப்படி தலைப்பிடுகிறது..


கற்பு விவகாரம்
குஷ்புக்குஜெயலலிதாகண்டனம்..
பண்பாட்டுக்குவிரோதமாகபேசுவதா?

தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிய குஷ்புக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கண்டனம் தெரிவித்தார்.


அ.தி.மு.க.வின் 34வது ஆண்டு தொடக்க விழாவுக்காக இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டனர். அவர் கோட்டையில் பேட்டியளிப்பதாக கூறிச் சென்றார். பகல் 12 மணியளவில் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியது சரியா, தவறா?பதில்:அவர் அப்படி பேசியிருக்கவே கூடாது.
தமிழ் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் முரணாக யாரும் கருத்து தெரிவிப்பது நல்லதல்ல.

கேள்வி:துணைமேயர் கராத்தே தியாகராஜனை கட்சியில் நீக்கியது ஏன்?
பதில்:அது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: சென்னை மாநகராட்சி கலைக்கப்படுமா?
பதில்:அதற்கு அவசியமில்லை. மாநகராட்சியில் பணிகள் முழு வீச்சில் ந ¬ ட ª ப ற் று வ ரு கி ன் ற ன .« க ள் வி ..


பல கேள்விகளுடன் வந்த மற்றைய பதில்களை விட்டுவிட்டு குஸ்பு விடயத்தை மட்டும் தூக்கிப்பிடித்து காவடி எடுக்கும் இந்தப் பத்திரிகைகளை என் சொல்வது..

Read More...