Friday, August 31, 2007

12 மணி சுடுகாடு நான் திரும்பி வந்தேன்.

சுடுகாடு இடுகாடு என லக்கிலுக் ஒசை செல்லா பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த நாகரீக உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சகஜமாயிற்று.

நானும் சுடுகாடு சென்றிருந்தேன்.அதுவும் 12 மணிக்கு..எப்படி இருந்திருக்கும் என கற்பனை பண்ணிப்பாருங்கள்.


மதியம் 12 மணி .ஒரே வெயில் வெக்கை காடே சூடாக இருந்தது.இதைத்தான் சுடுகாடு என்பார்களோ??

Read More...

Tuesday, August 28, 2007

திருவெம்பாவை ஆரம்பம் தமிழ்மணக்காரரே இன்னுமா தூக்கம்?

Read More...

Monday, August 27, 2007

எனக்கெதுக்கப்பூ டாக்டர் பட்டம்/நம்ம விஜய்க்கு ஒண்ணு கொடுப்பா






A.C.SanMugam சண்முகம் சார் நன்றி நன்றி.விஜய் மற்றும் விகடன் Boys புகழ் ச்சீய் சங்கருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்ததற்காக திரையுலகமும் வலையுலகமும் உங்களை நெஞ்சார வாழ்த்துகிறது.

யாரங்கே தீவு அண்ணனுக்கு ஒரு சோடா கொடு.

சோடா கொடுத்த தம்பிக்கும் எனக்கு கலைமாமணி விருது தந்த ஆஸ்திரேலிய வட்ட தல கானாபிரபா அவர்க்ளுக்கும் நன்றி கூறி டாக்டர் பட்டம் பெறும் சங்கர் மற்றும் வாள் விஜய்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி எனது சிற்றுரையை முடிக்கிறேன்.

புகைப்படம் விளக்கம்:-

திரைப்பட ரீ மேக்கில் மட்டுமல்ல புகைப்பட போஸ் ரீமேக்கில் கூட அசத்துவேன் எனக்கூறும் விஜய் அபிசேக் பச்சனின் போஸை காப்பிசெய்த

புகைப்படம் மேலே


செய்தி

கலைஞானி கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் ஒரு இன்ப அதிர்ச்சியை திரையுலகத்திற்கு கொடுத்தார் ஜேப்பியார். இவர் நடத்தும் அன்னை சத்யபாமா நிகர் நிலை பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பின் ஒவ்வொரு வருடமும் இந்த பல்கலைக்கழகம் திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகமும் திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க துவங்கியிருக்கிறது. இந்த வருடம் இந்த பட்டத்தை பெறுகிறார்கள் நடிகர் விஜயும், டைரக்டர் ஷங்கரும். இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 27-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பத்மபூஷண் சி.மாதவன் நாயர் இவர்கள் இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறார்.

திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க விஜயை தேர்ந்தெடுத்தது ஏன்? காதலுக்கு மரியாதை படத்தில் காதலை விட பெற்றோர்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை சொன்னதற்காகவும், லவ் டுடே, சிவகாசி போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த ரோல்களுக்காகவும்தான் என்றார் ஏ.சி.சண்முகம். அரசியல் அல்லாத நடுநிலையாளர் என்ற முறையிலும் அவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுகிறது என்றார். அதே போல் இதுவரை தமிழ்ப்படங்கள் எதுவும் செய்யாத சாதனையை செய்த சிவாஜி படத்தின் இயக்குனர் என்ற முறையில் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஷங்கரின் மற்ற படங்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டனவாம்.

இதற்கென்று ஒரு தேர்வுக்குழுவை அமைத்து பட்டம் பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இனி திரையுலகை சேர்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றார் ஏ.சி.சண்முகம்.

tamilcinema













Read More...