Monday, November 12, 2007

சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)
பிரபல வல்லரசு நாடொன்றின் அரசியல் ஆய்வுப்பணியின் ஆய்வு நிமித்தமாக சோதனைக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள்


அதுவும் வேட்டி கட்டிய தமிழக தமிழ்ப்புலிகள்


பின்வரும் தகமைகளை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.


ஆயுட்கால அரசியல் வாழ்வு சேமப்பத்திரம் இறுதியில் கையளிக்கப்படும்.


தகுதி கல்வி நிலை:-


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது விரும்பத்தக்கது.


அந்த தகுதி இல்லையாயினும் ஏதாவது ஒரு

பத்திரிகையை தமிழில் அரசியல் நையாண்டி என்று சொல்லி நடாத்தி கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.


அல்லது முன்னாள் வாராந்தப்பத்திரிகை ஆசிரியராகவாவது இருந்திருத்தல் வேண்டும்.


இந்த தகைமைகள் எதுவுமே இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கடசியில் தொண்டராகவோ அல்லது தலைவராகவோ இருக்கவேண்டும்.


யாவும் பொருந்தாத பட்சத்தில் ஆதித்தமிழர் கோட்டா முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விதிவிலக்காக இந்திய பிரதமருக்கோ அல்லது இந்தியப்பிரதமரை நிர்ணயிக்கும் அம்மையாருக்கோ பதிலை எதிர்பார்க்காமல்

ஈழத்தமிழருக்கு இந்தியா ஆயுத உதவி செய்யாதே என கடிதமாவது எழுதியிருக்கவேண்டும். (கவிதைகள் இங்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டா)


லங்கா ரத்னா பட்டம் பெற்றிருந்தால் தேர்வு இல்லாமல் தெரிவு செய்யப்படுவீர்கள்.


கல்லக்குடி போராட்டத்தில் கதாநாயகனாக நீங்கள் கலந்துகொண்டிருந்தால்

அதை மறந்துவிட்டிருத்தல் வேண்டும்.உங்கள் விண்ணப்பத்திற்கான முடிவு திகதி


தமிழீழ பிரகடனத்திற்கு முன்னர்விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி


தீவு தமிழ்மணம்.டொட் காம்


முகவரி அடிக்கடி மாறும் விண்ணப்பதாரர்கள் கவனத்திலெடுக்கவும்.லேபிள்:- டால்மியாபுரம் வைகோ கலைஞர் சுப்பிரமணியசுவாமி துக்ளக் காங்கிரஸ்
Read More...

காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!

பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால் குத்து சரமாரியாக வெட்டு .ஓட ஒட விர்ட்டு போன்று பல சரமாரியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன் காண்பித்தார்.

இதோ அந்த படம்.


காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்


ஆனால் எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்
இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.

தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு சாபமிட்டீர்களா??:)


லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்தமிழுக்கு தீவின் அஞ்சலி


Read More...