பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.
முதல் பகுதி
இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.
அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.
விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.
Anita Pratap
Island of Blood
இந்திய பெண் பத்திரிகையாளர் அனிதா ப்ரதாப்பின் நூலிலிருந்து
அனிதா பிரதாப்பின் இரத்தத்தீவு-20
இலங்கை - இந்திய உடன்படிக்கை வரலாற்றில் குருதி தோய்ந்த அத்தியாயம்
வந்த நோக்கம் எதுவும் நிறைவேறாமல் திரும்பிச் சென்ற அமைதிகாக்கும் படை நாங்கள் இருந்த பெரிய அறையில் நிசப்தம் நிலவியது.
பிரபாகரனின் சீற்றவொலியைத் தவிர வேறொரு சத்தமும் கேட்கவில்லை.
நான் கூச்சலிடவேண்டிய அவசர நிலைக்குத் தள்ளப்பட்டேன். பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.
எனக்கு திகிலூட்டும் விடயங்களில் ஒன்று பாம்பைப் பார்ப்பதாகும். இதுவொரு நினைத்துப் பார்க்கமுடியாத பயம். ஸ்தம்பிதமடைய வைக்கும் பீதி. பாம்புகள் தீங்கற்றவையெனவும் அவற்றைத் தாக்காவிடின் அவை தாக்கமாட்டாது எனவும் சூபினும்,எனது நண்பர்களும் அடிக்கடி கூறுவார்கள். ஆனால், பாம்பைக் கண்டால் அலமலத்துப் போவது வழக்கம். அவை தீங்கு விளைவிப்பவை என்ற ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையில் நான் ஊறியிருந்தேன்.
எனது சிறிய கண் இமைகளும், சற்றுக் கூர்மையாகப் பார்க்கும் பார்வையும் நான் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கவேண்டுமென என் சிறிய வயதில் சிலர் என்னிடம் கூறியிருந்தார்கள். எனக்குச் சிறிய கண் இமைகள் இருந்தால் பிரபாகரனுக்கு அது இல்லையெனக் கூறலாம். அப்படிப் பார்த்தால் அவர் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கலாம்.
இந்த வாழ்விலும் பாம்பு போன்றே பார்ப்பதற்குத் தோன்றினார். உப்பிய தலை, அசைவற்ற தன்மை, கூர்மையான கண்கள் பாம்பைப் போன்று இருந்தன. அவரின் கருமையான முகத்தில் கண்கள் கோபமாக விழித்தன. மிகவும் கீழ் ஸ்தாயில் அபாயகரமான ஒலியை எழுப்பினார்.
பாயவிருந்த பாம்பு போய்விட்டது.
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு முழுச்சக்தியையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. நான் வாய்விட்டு வார்த்தைகளை வெளிவிட்டபோது பிரபாகரன் ஆறுதலாக மிக சாவகாசமாகக் காணப்பட்டார். அவரின் கண்கள், மூக்கு, வாய் யாவுமே சாதாரணமான நிலைக்கு வந்தன. நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் வழமை போன்று மென்மையாகப் பேச ஆரம்பித்தார்.
உடன்படிக்கை முறிவடையும் என்பதை அத்தருணத்தில் நான் உணர்ந்து கொண்டேன்.
ஒரு மாதத்திற்குப் பின்னர் புலிகளின் சினைப்பர் தாக்குதலையடுத்து இந்தியத் துருப்புகள் மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்ட சமயம் நான் பிரபாகரனைச் சந்தித்தேன்.
துயரந்தோய்ந்த அந்தத் தேசத்தின் வரலாற்றில் அதுவொரு குருதி தோய்ந்த அத்தியாயமாகும்.
அந்த யுத்தம் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டது. பலரை அங்கவீனமாக்கியது, மண்ணை அழித்தது, இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
புலிகளை நிலை குலையச் செய்தது. பீதி, வன்செயல் நெருக்கடிக்குள் தமிழரை மேலும் தள்ளியது.
ஆனால், உயிர் தப்பினார். முன்னரை விட மிகவும் வலிமை பெற்றவராக மாற்றம் பெற்றார்.
ஆயினும், மிகவும் மறைவான இடத்தில் வாழ வேண்டி ஏற்பட்டது. அவருக்குரிய தூர நோக்கம், தந்திரோபாய திட்டம் தீட்டுதல் என்பவற்றால் பிரமாண்டமானதும், இரகசியமானதுமான யுத்த அமைப்பொன்றைக் கட்டியெழுப்ப முடிந்தது.
நிலத்தின் கீழ் பல தளங்களைக் கொண்ட பதுங்கு குழிகளை அமைத்தார். பாரிய தாங்கிகளை அமைத்து எரிபொருளை சேமித்தார். மெதுவாகவும், திடமானதாகவும் பாரிய போர் முயற்சிக்கான திட்டங்களை வகுத்தார்.
சகல தேவைகளையும் இறக்குமதி செய்யப்படும் புலிகளின் சீருடை உட்பட மிகக் கவனமாக ஆயத்தப்படுத்த முடிந்தது.
இலங்கையை விட்டு இந்தியத் துருப்புகள் வெளியேறிய பின்பே திரும்பவும் பிரபாகரனை சந்திக்கும் முயற்சியில் நான் வெற்றி காண நேர்ந்தது. 1987-1990 காலப்பகுதியில் இந்திய சமாதானப் படையினருடன் அவர் போரிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவரைச் சந்திக்க முடியாமல் போனது.
கடைசி இந்தியப் படைவீரனும் சென்ற பின் அவர் தனது முதல் பேட்டியை எனக்குத் தந்தார்.
இலங்கை அமைச்சரவை உறுப்பினரான ரஞ்சன் விஜயரட்ண மற்றும் சில இந்தியர்களுடன் திருகோணமலை கடற்கரையில் நானும் ஒருத்தியாக நின்று இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட கடைசி இந்தியப் படையணி புறப்பட்டுச் சென்றதைக் கண்டேன்.
அதுவொரு துக்ககரமானதும், சங்கடத்துக்குரியதுமாகும். அவர்கள் புறப்பட்டு இலங்கைக்கு வந்து சேர்ந்ததற்கு முற்றிலும் முரண்பட்ட நிகழ்வு அது.
அவர்கள் இலங்கைக்கு வந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரிசையாக நின்று அவர்களை வாழ்த்தி மாலை சூட்டினர். 1500 இந்தியப் படையினர் இறந்தும் பலர் முடமாக்கப்பட்டும் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேற்றப்படாமலும் தீவில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக குருதி தோய்ந்த அத்தியாயத்தை உருவாக்கியும் இலங்கையில் இந்தியா மேற்கொண்ட தலையீடு பாரியதொரு தவறான நடவடிக்கையாகும்.
இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முதல்நாள் இந்திய மேஜர் ஜெனரல் ஒருவர் வரலாற்றியலாளர் 'பார்பரா துச்மானின்" நூலின் பிரதியொன்றைப் பற்றிக் குறிப்பிட்டார். 'த மார்ச் ஒவ்ஃபோலி: ட்ரம்ட்ரோய் ரு வியட்நாம்" (வுhந ஆயசஉh ழக குழடடல: குசழஅ வுசழல வழ ஏநைவயெஅ) என்ற நூல் அது. அதில் நாம் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
துறைமுகத்தில் நான் அமர்ந்திருந்து, பார்வையிலிருந்து இந்தியப் படையினர் சென்ற படகு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த காலம் நான் அக்கறை கொள்ளும் கால எல்லையை விட்டு விலகியது. எதிர்காலத்தை நோக்கி நடந்தேன்.
பிரபாகரனைச் சந்திக்க வேண்டியிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் அதாவது 26 மார்ச் 1990 இல் அவரைச் சந்திக்க முடிந்தது.
நான் அவரை 24ஆம் திகதி சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தேன். ஏனெனில் 26இல் கொழும்புக்கு திரும்பிச் சென்று அந்த வாரப்பதிப்பிற்கு எனது செய்தியை அனுப்பவேண்டியிருந்தது.
ஆனால், என்னை 26ஆம் திகதி தான் சந்திக்க முடியுமென பிரபாகரனால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் சந்திக்குமாறு அவரைத் தூண்ட முடியவில்லை. இறுதியாக அவர் எனது பிரச்சினையை விளங்கிக் கொண்டார்.
அதாவது இந்தியப் படையினர் இறுதியாக இலங்கையிலிருந்து வாபஸ் பெற்றமை தொடர்பான எனது கட்டுரையுடன் அவரது பேட்டி இடம்பெறவேண்டியிருந்தது. பேட்டியும் ஒருவாரம் கழித்து பிரசுரிப்பது சிறப்பானதாகத் தோன்றவில்லை. பின்னர் 25ஆம் திகதி நள்ளிரவில் என்னைச் சந்திப்பதற்கு அவர் சம்மதித்தார்.
அது உசிதமென்றால் பகலில் கொழும்புக்குப் பயணத்தை மேற்கொண்டு இரவு கொழும்பை அடையமுடியும். அது நடந்தால் காலக்கெடுவுக்குள் எனது கட்டுரை, பேட்டியை நான் அனுப்பிவிடமுடியும்.
இருபத்தாறாம் இலக்கம் பிரபாகரனுக்கு குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அவர் நவம்பர் 26ஆம் திகதி பிறந்தவர். இருபத்தாறும் அதனுடன் எந்த இலக்கத்தையாவது கூட்ட எட்டு வருமாயின் அது தமக்கு அதிர்ர்;டமற்றது என்று அவர் கண்டுள்ளார்.
மாதத்தில் வரும் 26ஆம் திகதிகளில் எந்தவொரு யுத்த நடவடிக்கையும் அவர் நடத்துவதில்லை. அந்த நாளில் போர் நடவடிக்கைகளைத் தவிர்த்து வேறு கருமத்தில் ஈடுபடுவதற்கே அவர் முன்னுரிமை கொடுப்பார். பேட்டி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். மற்றைய நாட்களை இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலுமே செலவிடுவார்.
அவருடைய பிறந்ததினம், வருகின்ற வாரம் இறந்த விடுதலைப் புலிகளை கௌரவிக்கும் மாவீரர் வாரமாக அனுர்;டிக்கப்படுகிறது.
நானும் 'ரைம்" சஞ்சிகையின் புகைப்படப்பிடிப்பாளர் ரொபேர்ட் நிக்கலஸ் பேர்க்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வன்னிக் காட்டுக்குள் புலி உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.
'பொப்" என்று நாம் அவரை அழைப்போம். என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் அவர் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவரும், திடசிந்தை கொண்டவருமான புகைப்படப்பிடிப்பாளராவார். சிறந்த நிருபர்கள் போன்றே அவருக்கு செய்திகள் பற்றி நன்கு தெரியும். அவரின் கண்களைப் போலவே மூளையும் கூர்மையாக இருந்தது.
எம்முடன் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கமும், சிரேர்;ட உறுப்பினர் திலீப் யோகியும் உடன் பயணம் செய்தனர். நாம் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினோம். பிரபாகரன் சமாதானமாக வருவதற்கு உகந்த நேரம் எனவும், தீர்வுப்பொதி தனிநாடு இல்லாமல் சுயாட்சி, பாதுகாப்பைத் தருவதாக நான் குறிப்பிட்டேன்.
தனித்துவமான சூழ்நிலைகளால் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாக அது காணப்பட்டது. வரலாற்று ரீதியான பகைவர்களான விடுதலைப் புலிகளும், ஜனாதிபதி பிரேமதாசவின் இலங்கை அரசாங்கமும் தமது பொது எதிரியான இந்திய சமாதானப் படையினரை வெளியேற்றுவதற்காக ஐக்கியப்பட்டனர்.
இந்தியர்களை வெளியேற்றுவது இருசாராரைப் பொறுத்தவரையும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான தேவையாக இருந்தது.
அதனால், இருசாராரும் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தியர்களுடன் மோதலில் ஈடுபடுவதற்காக புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்கள், தளபாடங்களை வழங்கினார்.
இந்தியப் படையினர் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் துரிதமாக புலிகளால் நிரப்பப்பட்டன.
தனது இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே பிரேமதாஸ தொடர்ந்து முடக்கிவைத்தார். இது ஈழத்தை பிரபாகரனிடம் பிரேமதாஸ சரணடையச் செய்ததாகவே காணப்பட்டது. இதைவிட வேறெதனை அதிகமாக அவர் கேட்கக்கூடும்?
அதிகாலை 2 மணியளவில் அடர்ந்த காட்டிற்குள் இருந்த பாதுகாப்பான இல்லத்தை நாம் அடைந்தோம்.
வானிலிருந்து நாம் கால்களை நீட்டி வெளியேற சில நிமிடங்கள் எடுத்தன. யுத்த சீருடை அணிந்திருந்தவாறு விறாந்தையில் எமக்காக பிரபாகரன் காத்திருந்தார்.
தொடரும்..
Read More...
Summary only...