Saturday, May 13, 2006

தற்ஸ்தமிழ்

திண்ணை பற்றி நேசகுமார் எழுதியிருந்தார்.
நானும் இதே நேரம் தற்ஸ்தமிழ் பற்றியும் எழுதியாகவேண்டும்.
ஈழத்து செய்திகளை உடனுக்குடன் சுட சுட தருவதற்கு பல இணையத்தளங்கள் இருக்கின்றது.ஆனால் இந்திய செய்திகளை உடனுக்குடன் பார்க்க நான் மட்டுமல்லாது பலர் நாடுவது இந்த தளத்தைதான். பல வருடங்களுக்கு முன்னர் மகேஸ் என்பவர் இந்த தளத்தை மகேஸ் கொம் என்று நடாத்தி வந்தார் .முன்னரும் பல இணைப்புக்களுக்காக இந்த தளத்திற்கு சென்று வந்தேன்.பின்னர் அவர் நடாத்திய தளம் விரிந்தே இந்த தற்ஸ் தமிழ் மற்றும் திராவிட மொழிகளில்பெருகிற்று என நினைக்கிறேன்..

இதே போல் வேறு தமிழ்தளங்களும் செய்திகளை உடனுக்குடன் அப்டேற் செய்கிறதா எனத்தெரியவில்லை.

தளம் யுனிகோடில் இல்லை என்ற குறையை தவிர,திறமையாக செயல்படுகிறார்கள் பாராட்டுக்கள்.

Read More...

Wednesday, May 10, 2006

தாய்சொல்லைத்தட்டாதே

புத்தம் புதிய பிரதிகளாய் விரைவில் தீவு திரையரங்கில் காட்சிக்கு வர இருக்கும் சில திரைப்படங்கள்..காணத்தவறாதீர்கள்..

தாய்சொல்லைத்தட்டாதே
புதியவார்ப்புக்கள்
ஐயா
தம்பி
இணைந்த கைகள்
தவமாய் தவமிருந்து
காப்டன் பிரபாகரன்

Read More...

Monday, May 08, 2006

திமுக தோல்வி

திமுகவின் தோல்விகான காரணம் என்ன? வைகோவை வெளியேற்றம் செய்தது..சரத்ததை வெளியேற்றி அவரது சமூகத்தை பகைத்தது..விஜயகாந்துடன் சமரசம் பண்ணாது கல்யாணமண்டபத்தை இடிக்க முற்பட்டது.கலைஞர் கிள்ளியும் கொடுக்கமாட்டார் என்ற ராஜேந்தரை
அரவணைத்தது..தயாநிதி மாறனின் சதுரங்கம் ..ஜே க்கு போட்டியாக கலர் ரீவி விவசாயக் கடன் இரத்து என திட்டங்களை அறிவித்தமை போன்றவை மக்கள் மனதில் திமுக பற்றி இருந்த ஒரு கலக்கம் கலைந்து ஒரு தெளிவு பிறந்து வாக்களித்தார்கள்.

இதுவே திமுகவின் தோல்விக்கு ஓரு காரணம்..


இப்படி நாளைக்கு அரசியல் ஆய்வாளர்கள் திமுக தோற்றால் பிளந்து கட்டப்போகிறார்கள்..

வென்றபின்னும் தோற்றபின்னும் காரண காரியம் கணடுபிடிப்பது சுலபம் .

அதற்கு முதலே தீவு தனது ஆய்வை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக நாளை வென்றால் வென்றதற்கும் மேலே குறிப்பட்ட காரணங்களைத்தான் ஆய்வாளர்கள் பத்திரிகையாளர்கள் சொல்லப்போகிறார்கள்..:)

நமக்கு
இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன...
ராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்கொத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார்.

Read More...

Sunday, May 07, 2006

புதையுங்கள்...

ஒருமுறை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், "மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" என்றார்.


பரப்புரைப் போரினூடாக சிங்களத்துக்கு இதுவரை உலகம் கொடுத்த ஆதரவை முற்றாக இழக்கச் செய்வதற்கான பணிகளில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஈடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (06.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

புதைகுழிகளும் படுகொலைகளும் எழுதும் வரலாறு பற்றி இம்முறையும் பேசுகிறோம்.

உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் செய்ததைப் போல- அவர்கள் செய்ததை வரலாறுகள் கூறியது போல-

பொதுமக்களைக் கொல்வதற்கு ஊடாகத் தாங்கள் பெறுகிற மகிழ்ச்சியை-

தங்களுடைய தூக்குத் தண்டனையாக மக்கள் மேல் விதிக்கிற அந்த படுபயங்கரமான- மோசமான-தண்டனை முறைமையை தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மீண்டும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வரலாற்றை மீண்டும் கூறுகிறோம்.

கடந்த வாரம் உதயன் பணிமனைக்குள் சென்று ரஞ்சித் மற்றும் சுரேஸ் என்ற இரு இளைஞர்களைப் படுகொலை செய்தனர்.

அவர்களுடைய சடலங்கள் புதைக்கப்பட்ட ஒரு சில மணிநேரங்களிலேயே மீண்டும் "துப்பாக்கிச் சூட்டில் 7 இளைஞர்கள் பலி" என்ற செய்தியைக் கேட்கிறோம்....

மணியம் சுபாஸ் (வயது 19)

நவரத்தினராசா நரசன்னா (வயது 19)

தாமோதரம்பிள்ளை மஞ்சு (வயது 17)

பாலச்சந்திரன் கிரிசாந்தன் (வயது 18)

நாகரட்ணம் நகுலேஸ்வரன் (வயது 18)

கோவில்மணி சின்னமணி (வயது 21)

சுமன் (வயது 22)

என்று அந்தச் செய்தி நீள்கிறது.

எங்கள் மக்கள் மீது தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் மகிந்தரின் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இப்போது ஒரு மிகப்பெரிய கதவு திறந்துள்ளது.

புலம்பெயர் வாழ்க்கை வாழும் எமது உறவுகள்- மக்கள் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. அது குறித்து பேசுவதற்கு முன்னர் சில விடயங்களைப் பார்க்கலாம்.

உலகம் இப்போது ஒரு பெரு நெருக்கடியில் நிற்கிறது. ஒருபொழுதும் எதிர்பார்க்காத ஒரு நெருக்கடியை- குட்டித்தீவான சிறிலங்காவில் அதுவும் குட்டித் தாயகமான எங்கள் தாயகத்தில் தொடர்புபடுத்திக் கொண்ட சர்வதேசம் இன்று குழம்பி நிற்கிறது.

ஒருமுறை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், "மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" என்றார்.

புதையுங்கள்...

இன்னும் புதையுங்கள்....

ஆழங்கிடங்கெடுத்து அத்தனையையும் புதையுங்கள்....

ஆனால்

வானம் பொழிகின்ற

பூமி விளைகின்ற

வளமான ஒருநாளில்

எங்கள் வரலாற்றை

புதைகுழிகள் எழுதும்"

என்று இன்று நாங்கள் கூறுகிறோம்.

மனிதகுல வரலாற்றை படுகொலைகளும் புதைகுழிகளும்தான் எழுதி நகர்த்தியுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஹிட்லருடைய 60 இலட்சம் யூத மக்கள் படுகொலை-

திமோரில் நடந்த பல இலட்சம் படுகொலை-

பொஸ்னியாவில் கொத்து கொத்தான முஸ்லிம் மக்கள் படுகொலை-

ருவாண்டாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை

சூடானின் தர்வூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் இப்போது நடைபெறுகிற படுகொலைகள்

இவற்றைவிட

சிறிலங்காவில் நடக்கிற படுகொலைகள் என்கிற புதிய வரலாற்றை நாங்கள் எழுத வேண்டியுள்ளது.

உலகத்தை உலுக்கிய வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவூட்டுகிறோம்.

1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் நாள் தென்வியட்நாமின் மைலாயில் நடைபெற்ற படுகொலையானது உச்சகட்டமான ஒரு படுகொலை.

400 வியட்நாமிய பொதுமக்கள் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டதுமான அந்த சம்பவத்தின் போது முற்றாக அந்தக் கிராமம் எரித்து அழிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்மூர் கேஸ் என்ற ஊடகவியலாளர் இது தொடர்பிலான தகவல்களைத் திரட்டி உலகத்துக்கு முன்வைத்தார். அப்போது உலகம் முழுமையும் துக்ககரமான-குழப்பகரமான-அதிர்ச்சியான சூழ்நிலை உருவானது.

அதையடுத்து மைலாய் படுகொலை விசாரணைகள் நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

இந்தப் படுகொலையை நடத்திய படையணிக்குத் தலைமை தாங்கிய லெப். வில்லியம்ஸ் கலி என்பவர் தனது இறுதிக் காலத்தில் மனம் கலங்கி- பேதலித்து உளறிய வார்த்தைகளும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

அதுபோலவே வியட்நாம் போரின் உச்சகட்டத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் றொபோர்ட் மக்னமாரா. 1961 ஆம் ஆண்டுக்கும் 1968 ஆம் ஆண்டுக்கும் இடையே அவர் நீண்டகாலம் அந்தப் பதவி வகித்தார். விமானக் குண்டுகளை வீச உத்தரவிட்ட பெரிய மனிதர் இவர். காலையில் விமானக் குண்டு வீச்சுக்களைத் தொடங்கி மாலையிலே வியட்நாமியப் போராளிகளைக் கொன்றுவிட்டதாக பொய் கூறி அதிர்ச்சியூட்டிய மனிதர். அவர் பதவிக் காலம் பெப்ரவரி 1968 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட பிரியா விடையின் போது முற்றாக அவர் உடைந்து போனார். கண்களில் நீர்மல்க, தழுதழுத்த குரலில் தான் செய்த பாவச்செயலுக்காக பாவமன்னிப்பு கோரினார்.

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகளவிலான குண்டுகளை வியட்நாமில் வீச தான் உத்தரவிட்டதைக் கூறி மனம் பேதலித்துப் பேசினார். அதன் பின்னர் நீண்டகாலம் மௌனமாக இருந்த வர் 1995 ஆம் ஆண்டு திரும்பிப் பார்க்கிறேன் என்ற நூலை எழுதினார்.

தற்போது படுக்கையில் கிடக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இந்த எண்ணங்கள் மனதிலே ஓடக் கூடும் எனில் நாம் முன்னைய வரலாறுகளோடு இணைத்து பார்க்கக் கூடும்.

வரலாற்றின் அடிப்படையில் கொலைகள் மற்றும் படுகொலைகள் என்பன எதிர்பார்த்த இலக்கை அடைய ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனை சிறிலங்கா அரசாங்கம் அறியாமல் இருப்பது குறித்து நாம் எதனையும் சொல்ல விரும்பவில்லை.

இனி தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய தகவல்களைத் தர விரும்புகிறோம்.

வடக்கு-கிழக்கு தகவல் புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ள தகவல் திரட்டில் இந்தப் படுகொலை விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

140-க்கும் மேற்பட்ட கொத்து கொத்தாக எங்கள் மக்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 20, 30, 40, 100, 250, 300 என்ற தொகைகளின் அடிப்படையிலும் ஊரின் பெயரிலுமாக எங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றில் பதியப்பட்ட படுகொலையாக 1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆம் நாள் அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்த தமிழ் மக்களை சிங்களத் தொழிலாளர்கள் கூரிய கத்திகளால் துண்டு துண்டாக வெட்டி எரித்த சம்பவத்தோடு எங்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் தொடங்கின.

1958 ஆண்டு மே இறுதி மற்றும் ஜுன் மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக பாணந்துறை கதிர்வேலாயுதக் கோவிலில் எங்களுடைய அர்ச்சகர் தார் ஊற்றி எரிக்கப்பட்டார்.

தார்சி விட்டாச்சி என்பவர் எமர்ஜென்சி 58 என்கிற நூலில் இந்தப் படுகொலை விவரங்களைத் தந்துள்ளார்.

1958 ஆம் ஆண்டு படுகொலையின் போது பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகளை இன்று நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

"தங்களுடைய சதைத் துண்டங்களை தாங்களே ருசி பார்க்கட்டும்- தங்களுடைய குருதி வழிவதை தாங்களே கண்ணால் பார்க்கட்டும்" என்று "அழகாக ரசித்து" அவர் கூறியதும் அதன் பின்னர் ஒருவருடத்திலே அவர் கொல்லப்பட்டதும் வரலாறு. அவரை யார் கொன்றார்கள் என்பது உலகத்துக்குத் தெரிந்த விடயம். நிச்சயமாக நாங்கள் இல்லை. அதனையும் எம்மீது போட்டிருப்பார்கள்.

இன்று அதேபோல அதே துண்டுடன் அதே சிரிப்புடன் இதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

1977ஆம் ஆண்டு கலவரத்தில் 1500-க்கும் மேற்பட்ட தமிழர்கள்

1983 ஆம் ஆண்டு வன்முறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் கொல்லப்பட்டனர்.

04.12.84 இல் மன்னாரில் படையினரது வெறியாட்டத்தால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை

31. 01.85 இல் மன்னாரில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

உலகத்தை இன்றும் உலுக்கும் 1987 ஆம் ஆண்டு சனவரி மாத முடிவில் கொக்கட்டிச்சோலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை

1990 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் சத்துருகொண்டானிலிருந்து புறப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் அடைக்கலம் புகுந்த மக்களை வாகனத்தில் ஏற்றி 226 பேரை சுட்டுப் படுகொலை செய்தது. அவர்களது பெயர்களை நாம் பதிவு செய்து வைத்துள்ளோம்.

1995 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானப் படையின் வெறியாட்டம். மிகக் குறுகிய நேரத்தில் மிகப் பெரியளவில் எங்கள் மக்கள் பலியெடுக்கப்பட்டனர். 155-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பொதுமக்களும் உடல் சிதறி துண்டு துண்டங்களாக கிடந்த படங்கள் இன்றைக்கும் அதிர்வூட்டக் கூடியவை.

இத்தகைய படுகொலைகளினூடாக எங்களினது வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் படுகொலைகளை எல்லாம் சிறிலங்கா இராணுவத்தினர் குறிப்பிட்ட கால அவகாசத்தை மேற்கொண்டு சாவகாசமாக செய்யப்பட்டவை.

இப்போது புலம்பெயர் மக்களுக்கான செய்தியை நாம் தெரிவிக்கின்றோம்.

புலம்பெயர் வாழ்க்கை வாழ்கின்ற மக்கள் எதற்கு அங்கு வாழ்கிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தனர்.

"உங்களுக்கு ஒரு காலம் வரும்- விடுதலையை முற்றுப்பெறுவதற்கான கடைசிப் பணியை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தோம்.

எந்த இடத்தில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் சரி- கூடுகிற இடங்களில் அது பேரூந்து அல்லது தொடரூந்து நிலையங்கள், பணிமனைகள், உணவகங்கள் என்று எந்த இடமாக இருந்தாலும் இந்தப் படுகொலைகளின் நினைவுகளைக் கொண்டு அந்த மக்களிடத்தில் அதிர்வையூட்டி அந்த அரசுகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எங்கள் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளானது உலகத்தில் இதுவரை செய்யப்பட்ட படுகொலைகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

21 ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தப் பகுதியில் நாளாந்தம் நடத்தப்படுகிற சம்பவங்கள் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில் மிகப் பெரிய பரப்புரையை- உலகின் மனசாட்சியை உலுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

இரண்டாம் உலகப் போரின் படுகொலைகளை பிக்காசோ ஓவியத்துக்கூடாக எப்படி வெளிப்படுத்தி உலகத்தை உலுக்கினாரோ-

அதைப் போல தமிழ் மக்களினது படுகொலைகளை ஒழுங்குபடுத்தி ஒரு ஓவியமாக வரைந்து வைக்கலாம்- புகைப்படங்களாக வைக்கலாம்.

புகைப்படக் கண்காட்சிகளை வீதியோரங்களில் நடத்தி மக்களின் மனதை ஈர்க்கலாம்.

இந்தப் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்திகளைத் தாங்கி ஊர்வலமாகச் சென்று உலக மக்களினது மனசாட்சியை உலுக்கலாம்.

இத்தகைய புதிய முறைகளில் புலம்பெயர் நாடுகளில் வாழுகிற தமிழ் மக்கள் தாங்கள் வாழுகிற நாடுகளது நமக்குச் சாதகமாக்கி திசை திருப்ப முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு உலகத்துக்கு வந்துள்ளது. இப்போதைய சூழல் மிக மிக சாதகமான சூழல். இது நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்பதையும் நினைவில் நாம் கொள்ள வேண்டும்.

சிங்களப் பேரினவாதியாக மாறிவிட்ட புத்திஜீவி என்று சொல்லப்படுகிற மகிந்தரின் ஆலோசகராகிய ஜெயான் ஜயதிலக்க அண்மையிலே ஒரு கட்டுரையில் சிங்கள தேசம் என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"ஆயிரம் வெட்டுக்களால் ஒரு படுகொலை" என்ற தலைப்பில்

"இன்று புலிகளுக்கு எதிராக நாங்கள் செய்கிற எதிர்த்தாக்குதல்கள்- நிச்சயமாக தமிழ் மக்களை வதைக்கக் கூடாது- அவர்கள் மீது கொலைகளை நிகழ்த்தக் கூடாது. அவ்வாறு நிகழ்த்தினால் எங்களுடைய நோக்கம் திசைமாறிவிடும். உலகம் ஒருபொழுதும் எங்களுக்கு ஆதரவாகச் செயற்படாது. அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் திரும்பிவிடும் என்கிற அபாயம் உள்ளது" என்கிறார்.

ஆகவே தமிழ் பேசும் மக்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

அவரது கட்டுரையின் கடைசிப்பகுதியில், புலிகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புப் போரைத் தவறி சிங்களம் கைக்கொண்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

"நாங்கள் இந்த சண்டையை பிடிக்கும் போது அது வழிதவறி- ஒரு இனக்குழுமத்தின் மீதான- ஒரு மதம் சார்ந்த- பேரினவாத அடிப்படையிலான ஒரு கருத்தை உருவாக்கக் கூடிய- இனத்தின் மீதான போராக இதை நாங்கள் இதை மாற்றினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவுக்கான தளத்தை முற்றாக இழந்துவிடுவோம்.

உலக அபிப்ராயத்தை இழந்துவிடுவோம்- பிரதேச ரீதியாக(இந்தியா) ஆதரவை இழந்துவிடுவோம்-அதுமட்டுமல்ல இறுதியில் போரையே இழந்துவிடுவோம்" என்கிறார்.

சிங்களம் போரை இழப்பதற்கான அனைத்துப் பணிகளிலும் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

நாங்கள் அவர்களுடன் நேரடியாக மோதி அவர்களது போரை இழக்க வைக்கப் போகிறோம்.

அதே நேரத்தில்-

எங்கள் புலம்பெயர் மக்கள்

பரப்புரைப் போரினூடாக சிங்களத்துக்கு இதுவரை உலகம் கொடுத்த ஆதரவை முற்றாக இழக்கச் செய்வதற்கான பணிகளில் ஈடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றார் க.வே. பாலகுமாரன்.

-puthinam-

Read More...

படம் பார் பாடம் படி

சில நினைவூட்டல்கள்..சில புகைப்படங்கள்














memorial stone of M G Ramachandran



























Read More...