கட்டிங்கா? ஷேவிங்கா? ஒரு தசாவதாரக்கேள்வி
தொழிலதிபர் தீவாகிய நான் ஏதோ பூவிற்கும் புஷ்பத்திற்கும் போக தமிழ்மணத்தில்
தங்குபவர்களுக்காக ஒரு லாட்ஜூம் டவுசர் கிழிபவர்களுக்காக ஒரு தையல்கடையும் போட்டு தொழில் செய்துவருவது முன்னைய எனது பதிவுகளிலிருந்து தாங்கள் அறிந்ததே.
பருவத்தே பயிர் செய் என்ற முன்னோர் வாக்குக்கிணங்க தேவை கருதி
மோனிக்காலவின்ஸ்கி சுருட்டு படையப்பா சுருட்டு போன்ற வரிசையில்
குசேலர் என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.
தாங்கள் தங்கள் வலைப்பதிவர் சகிதமாக வந்து சிறப்பிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.
பி.கு
இங்கு வேலை செய்பவர்கள் அநானியாக வேலை செய்வதால் முடி வெட்டுபவரின் பெயர் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வருபவர்களுக்கு விசேட சலுகை
இவ்வண்ணம்
தொழிலதிபர் தீவு
”உங்கள் திருப்தியே எங்கள் திருப்பதி”
லேபிள்: தாடிவாலா ரஜனி கமல் ,சினிமா ,புனைவுகள்