சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..
வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என் குடும்பத்தை மட்டும் விலக்கியா வைத்துவிடும்? இப்போது போனால்தான் உண்டு என்று என் நண்பர்கள் சொன்னதை நம்பி குடும்பத்துடன் கிளம்புகிறேன். வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் மங்கிப்போன நிலையில் சென்னையை நம்புவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.
ஒரு 4 கிராம் பவுண்
பார்க்க ஒரு கலர் ரீவி
வீட்டுக்கு ஒரு கோமாதா.
மகனுக்கு ஒரு கணனி.
.இலவச அரிசி வீடு
தேடிவரும் ரேசன் கடைப்பொருட்கள்...
இவ்வளவும் ஓரிடத்தில் கிடைப்பதற்கு நான் சென்னையென்ன நிக்காராகுவாவே செல்லத்தயார்.
எங்கள் குடும்பத்தில் 3 வாக்குச்சீட்டுக்கள்.
வாக்காளர் சீட்டில் இல்லாவிட்டாலும் எமது வலைப்பதிவு நண்பர்கள் யாராவது உதவி செய்தால் 3 பேரும் 3கட்சிகளில் எதுக்கென்றாலும் வாக்குப்போட்டு மினிமம் கியாரண்டியாவது பெற்றுக்கொள்வோம்.
நங்கநல்லூர் தொகுதியாயின் விசேடம்.அங்குதானே நமது எல்லோரும் அறிந்த வலைப்பதிவின் சுழியாகிய டோன்டுசார் இருக்கிறார்..பக்கபலமாக இருப்பார்.ஜமாய்த்துவிடலாம்.
வலைப்பதிவாளர்களே உதவுங்கள்.
Read More...
Summary only...
எனக்கும் அன்னியன் பினனூட்டமிட்டிருந்தார்.
இது பற்றி பல காலமாகவே சந்தேகமிருந்தது.எழுத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்றால் மாறி மாறி எழுதப்படுகிறது.
தமிழில் இதற்கு ஏதும் விதி இருக்கிறதா?
அந்நியன் என்று எழுதுவது சரியா?அன்னியன் என்று எழுதுவது சரியா?
Read More...
Summary only...
கலைஞர் மகன் முக முத்துவிற்கு ஜெ 5 இலட்சம் உதவி .இன்றைய செய்தி.
மற்றைய செய்தி. மோதிரம் தட்டல் புகழ் தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் தகப்பனுக்கு (தாமரைக்கனி) கொள்ளி வைக்ககூட ஜெ யின் அனுமதியைகோரிய உத்தமபுத்திரன் இப்போது திமுகவிற்கு....என்ன உலகமடா...
..அட்ரா சக்கை எண்டானாம் அம்மன் கோயிலிலை புக்கை எண்டானாம்...
Read More...
Summary only...
நேற்று தொலைக்காட்சியில் அந்த தாயின் கதறலை காட்டினார்கள் .அந்த தகப்பனை இழந்த குழந்தைகள்..இதன் வேதனை இழப்புக்கள் ஈழத்தவனுக்கு நன்று புரியும்
நேற்று நொந்ததை இன்று பதிவாய் சாத்தாங்குளத்துக்காரர் பதிவாயிருக்கிறார்.மகிழ்ச்சியாயிருக்கிறது.
இந்தியா ஒரு வல்லரசு நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதில் ஒரு அமெரிக்கா போல் இயங்கவேண்டும் .
இலலாவிட்டால் நானொரு இந்தியன் என்று அந்த மக்கள் பெருமையாக சொல்வதில் அர்த்தமில்லாது போய்விடும்.
Read More...
Summary only...