Wednesday, February 11, 2009

காங்கிரசுக்கு இனி ஆப்பு! கலைஞர் முதுகெலும்பு ஆப்பு ரேஸன் சக்ஸஸ்!!




ஈழத்தமிழர் பிரச்சனையில் மிக சிக்கலுக்குரியதாகவிருந்த பலராலும் விமர்சிக்கப்பட்ட
கலைஞரின் முதுகெலும்பு பிரச்சனை பல நிபுணத்துவமிக்க டாக்டர் குழுவினால்
ஆப்பு ரேஸன் செய்யப்பட்டு மீண்டும் நாம் எதிர்பார்திருந்த அந்த நாள் கலைஞர் கல்லக்குடி(டால்மியாபுர) போராட்ட வீரியுமுள்ள தமிழன் எமக்கு மீண்டும் கிடைத்துள்ளார்.

நன்றி முதுகெலும்பு நிபுணததுவர்களே

லேபிள்:-யானை தன் பலம் தானறியா

Read More...

Monday, February 02, 2009

முதுகு வலியிலிருந்து அவர் தப்பிக்க




இதற்குமுக்கிய காரணங்களாக திராவிட பரம்பரை அலகு காரணமாக சொல்லப்பட்டாலும் கலிபோர்ணியா பல்கலைகழக இறுதி ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே இந்த நோய்காரணிகளை கொண்டோர் அதிகம் பேர் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

முதலாவது இந்த முதுகு வலியை தவிர்ப்பதற்கு இதன் அடிப்படைக்காரணங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.


முக்கிய காரணிகளாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

1.முதுகுவலியால் அவதிப்படும் இன்னொருவர்(பெண்ணாககூட இருக்கலாம்) அடிக்கடி கொடுக்கும் பேதி மருந்தால் வருவது

2.இக்கட்டான சூழ்நிலையில் இருதலைக்கொள்ளி நிலையில் சில பல காரணங்களுக்காக சிலரை தமது கட்சியில் வேண்டா வெறுப்பாக அரவணைக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது வருவது

3.மக்களுக்கிடையில் ஏதோ காரணத்தால் பிரபலமாகவிருந்து அது தன்னிலை சறுக்குகையில் இறங்குமுகமாக மாறும்போது

4.தன் பலம் தனக்கு தெரியாது டெல்லி குளிரில் வேட்டியுடன் அலைவதால்

5.இந்தா வாறன் இந்தா உடனடியா போறன் என மற்றவர்களால் ஏமாற்றப்படுவதால்

6. அரசியல் கோமாளியாக சரத்பொன்சேகா போன்ற வீர தீர புருசர்களால் பரிகாசம் செய்யப்படுவதால்

7. சிலோனுக்கு வாறீயா என நக்கலாக ராஜபக்ச அழைத்ததால்

5. பதவி எனக்கு சால்வை வேட்டி கோமணம் என அடுக்குமொழி பேசியதால்


இப்படி அல்லது இதை விட மேலும் பல தொலைக்காட்சி குழும காரணங்களால் கூட வரக்கூடும்


இதற்கான ஒரே நிவாரணம் ஈழம் சித்திலெப்பை லேகியம்!.இன்றே வாங்கி உடனடியாக பாவியுங்கள்.

லேகியம் பாவிக்கும்போது கண்டிப்பாக காங்கிரஸ் உறவுமுறை கண்டிப்பாக இருக்குகூடாது.

உடனடி பலன் நிச்சயம்!!

லேபிள்:- முட்டாள் முத்துக்குமாரா ஏன்டா உனக்கு முதுகுவலி வரல்லை? :(

Read More...

Monday, January 26, 2009

தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான இழவுப்பத்திரிகை




அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே

பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.

தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

உங்களால் இன்னோரென்ன காரணங்களால் வரமுடியாத நிலமையாயின் முதலே சொல்லியனுப்புக.பிப்ரவரி 15 தான் வரமுடியுமாயின் நேரடியாக இடுகாட்டுக்கு வந்து எமது சொந்தங்களை தரிசித்து செல்லவும்.

நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.

இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.

இப்படிக்கு
தமிழ்ஈழ தேசம்
மற்றும்
இலங்கைதமிழர்

லேபிள்:- தொப்புள்கொடியும் அறுநாக்கொடியும்.

Read More...

Thursday, January 15, 2009

மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு

"பின்னர் ஒரு காலத்தில் மன்னராட்சி இல்லாத காலத்தில் போர்நிறுத்தம் செய்ய என வருபவர்களை ஈழத்து அரசு இதுபோன்று பழைய காட்சிகளை காட்டி மகிழ்விக்க " என கூறினான்.

மேலும் விபரங்களுக்கு இலங்கை உல்லாச பயணத்துறை

லேபிள்:-பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தல்




Read More...

Wednesday, January 14, 2009

Read More...