Thursday, June 14, 2007

சிவாசி ஓசியில் பார்க்க..






விடியக்காலை கருக்கலில் 3 மணி காட்சிக்கு முதல்நாள் இரவு 9 மணிக்கு எல்லாம் கியூவில் நின்று படம் பார்த்த இரசிக அனுபவங்கள் நிறையவே உண்டு.

அது அந்தக் காலம்


இப்ப என்னடாவெண்டால் காலம் மாறிப்போச்சு..ரெக்னிக்கல் பல கல் தூரம் முன்னேறிவிட்டது.

ஒன்லைன் புக்கிங் எண்டுறாங்கள் முதல் காட்சி எண்டுறாங்கள்.ஆனால
நாயுடு பாக்கிறார் தனுஸ் பாக்கிறார்.

இரசிகன் மட்டும் வழமைபோல் அண்ணாந்து பாக்கிறான்.


எல்லாவற்றையும் கபளீகரம செய்வதுபோல் இணையத்திலும் அந்தா வருது விரைந்து வருது என்று விளம்பரம் வேறு காட்டுறாங்கள்.இந்த திறத்திலை படத்தை தியேட்டரிலை போய் பாப்பம் எண்டால்

ஒரு 20 யூரோ வைத்தால் தான் சிவாசி படம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

கோடி கோடியாய் பணம் கொட்டி ஸ்பெயினில் மாடு பிடித்ததற்காக நான் ஏன் 20 யூரோ கொடுத்து பார்க்கவேண்டும்?

சந்திரமுகிக்கு எவ்வளவு பணம் செலவளித்தார்கள்?

ஏன் அது 800 நாட்கள் தாண்டி ஓடவில்லையா?அல்லது இது 800 கடந்து ஓடுமா?

இரஜினி நரைத்த தலையுடன் வந்தாலே கூட்டம் சேருமே..பிறகேன் இந்தச் செலவு?

சரி
நான் ஒருவன் மட்டும் தியேட்டருக்கு போவதானால் 20 யூரோ கொடுத்து பார்க்கலாம் வீட்டில் உள்ள
எல்லோரையும் அழைத்து சென்று இந்த விலைக்கு படம் பார்ப்பதானால் கடைசியில் மொட்டைதான்..(இரஜனி கூட படத்தில் மொட்டைதானாம்.)

பேசாமல் ஓஸியில் படம் க்ளியராகப் பார்ப்பதற்கு ஒரு வழி உண்டு.சத்யராசுக்கு பிடிக்காத வழி .

சண் ரீவியில் ரொப் 10 என்று கிட்டத்தட்ட படத்தில் 90 வீதமும் காட்டுவார்கள் .அப்போ பார்த்துக்கொள்வோம்.

படத்தில் சந்தேகம் வந்தால் இணையம் கைகொடுக்கட்டும்.

Read More...

Tuesday, June 12, 2007

ச்சும்மா.. ச்சொல்லாமலே அதிருதில்லே..

கோடி செலவழித்து கட்டுப்படுத்த இது சிக்குன் குனியாவுமில்லை. கோடிகளால் அளக்க இது சிவாஜி குனியாவுமில்லை.

இங்கே கொடி பிடி அங்கே சிகரம் வை என்று எந்த தலைவன் இவர்களுக்கு ஆணையிட்டான்?

கண்டங்கள் கடந்தும் கனவுகள் ஆர்ப்பரிக்கின்றனவே..

எது இவர்களை இப்படி அசைக்கிறது?




கனடாவில்



ஐநா முன்றலில் ஜெனீவா ( சுவிஸ்)

ச்சும்மா.. ச்சொல்லாமலே அதிருதில்லே..

கலந்துகொண்ட

பழ நெடுமாறன் உரை

அப்துல் ஜபார் உரை

சிவாஜிலிங்கம் உரை

நன்றி தமிழ்நாதம்

Read More...

Sunday, June 10, 2007

ஒப்பாரி

குற்றுயிரும் குலையுயிருமாக

மனிதாபிமானம் தெருக்களில்..


கடந்தும் ஏறியும்


துப்பியும் மிதித்தும்


மனிதர்களும் விலங்குகளும்


ஏன் நாட்களும் அவர்களை


கடந்து சென்றன.


மனிதாபிமானம் இறந்துவிட்டிருந்தவேளை பார்த்து

தேவதூதர்கள் விழித்தார்கள்.


நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.


ஒப்பாரிக் குரல்கள்

இப்போது எட்டுத்திக்கிலிருந்தும் ஒலிக்கின்றன.

-theevu-10.06.07

Read More...

அடுத்த படம் ரெடி

செய்தி இதுதான்.

புலிகள் திட்டம் எதிரொலி : அகதி முகாம்களில் பலத்த பாதுகாப்பு
ராமேஸ்வரம் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2007
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து தங்கள் அமைப்பில் ஆட்களைச் சேர்க்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதையடுத்து, அனைத்து முகாம்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தீவிர மோதல் நடந்து வருகிறது. இதில், விடுதலைப் புலிகள் தரப்புப் படையில் ஆட்கள் குறைந்த வண்ணம் உள்ளனர் என்பதால், தமிழக முகாம்களில் உள்ளவர்களை அணுக திட்டமிடப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிட்டியுள்ளது.

இந்நிலையில், உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இதனிடையே, மொத்தம் 105 முகாம்கள் தமிழகத்தில் உள்ளன என்பதும், கடந்த ஜனவரி 12-ம் தேதியில் இருந்து இலங்கையில் இருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 19,200 என்பதும் குறிப்பிடத்தக்கது.


(மூலம் - வெப்துனியா-yahoo tamil)

Read More...