Friday, November 11, 2005

என்னை முதன் முதலாக பார்த்தபோது

இந்தப்பாடலை பாடிக்கொண்டு 70 களில் யாழில் நகைச்சுவை நாடகத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள் இப்படி ஒரு என்றி கொடுப்பார்கள்

என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் என்று ஒருவர் பாட

மற்றவர் "இழுத்துப்போட்டு 2 உழக்கு உழக்க நினைத்தேன்" என பாடலை முறித்து இடையில் சொல்லுவார்.

அந்த நேரத்து பகிடி அது.

இப்ப ஏன் இது??

தினமலர் தீபாவளியிலிருந்து முதன் முதலாக பத்திரிகை வடிவில் இ பேப்பர் வெளியிடுகிறதாம்.




அந்த முதன் முதலாக என்பது மட்டும்தான் இடிக்கிறது..என்னத்தை சொல்ல..

தற்சமயம் நான் அறிய ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் சில மின் பத்திரிகைகள் பத்திரிகை வடிவத்திலேயே பார்க்க

தினக்குரல்
முழக்கம்
தமிழ்முரசு
ஒருபேப்பர்

Read More...

Thursday, November 10, 2005

ஆரம்பிச்சுட்டாங்கையா

‘கற்பு பற்றி துணிச்சலாக பேசிய குஷ்புவை கண்டித்த தமிழர்கள், தலை குனிய வேண்டும்’ என்று கூறிய சுகாசினிக்கு கண்டனம் குவிகிறது.

தமிழர்கள் தலைகுனிய வேண்டுமா? சுகாசினி பேச்சுக்கு கண்டனம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்

திருமணம் ஆகும்வரை பெண்கள் கன்னியாகத்தான் இருப்பார்கள் என நம்பும் ஆண்கள் முட்டாள்கள் என்று குஷ்பு கூறியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென குஷ்புவுக்கு ஆ த ர வ £ க சுகாசினி கிளம்பியிருக்கிறார். ‘‘குஷ்பு சொன்னது சரியான கருத்து. துணிச்சலாக கருத்து கூறிய அவரை இங்கே இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

குஷ்புவுக்கு எதிராக பேசிய தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழக மக்கள் அனைவரின் சார்பிலும் நான் குஷ்புவிடம் மன்னிப்புகேட்கிறேன்’’ என்று சுகாசினி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் சுகாசினி இவ்வாறு பேசியுள்ளார். இதே விழாவில் பேசிய குஷ்பு, ‘‘நான் சொன்னதில் தப்பு இல்லை. அப்படி சொன்னதற்காக நான் வெட்கப்படவில்லை. இன்னமும் என் கருத்து அதுதான்’’ என்று கூறினார்.

அவரை ஆதரித்து சுகாசினி பேசியதும் குஷ்பு அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்றி தெரிவித்தார்.

சுகாசினி பேசியதற்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், திரையுலகினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:


திருமாவளவன்: ‘என்னை கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்’ என்று சுகாசினி கூ றி யு ள் ள £ ர் . குஷ்புவைகண்டித்தவ ர்களைத்தான் சுகாசினி இப்படி கூறியிருக்கிறார். ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்புகேட்க இவர் யார்? தமிழர்கள் எல்லாரும் வெட்கித் தலைகுனிய « வ ண் டு ம் எ ன் று சு க £ சி னி கூறியிருக்கிறார்.

எந்த செயலுக்கும் வெட்கப் படாதவர்கள் இப்படி சொல்வதில் ஆச்சர்ய மில்லைதான். ஆனாலும், சுகாசினிதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஷ்பு செய்த சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்க சுகாசினி வேண்டுமானால் சிபாரிசு செய்யட்டும். அதில் முதல் ஆளாக கையெழுத்து போட தயாராக உள்ளேன். ஆனால், தமிழ் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால், குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலையை சுகாசினிக்கும் தமிழ் பெண்கள் ஏற்படுத்துவார்கள்.

தி.மு.க.பேச்சாளர் வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பூ, சுகாசினி ஆகியோர் தயாராகி விட்டனர். இவர்களை திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதை காட்டினால் அதை அவர்களால்தாங்கமுடியாது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன்: தமிழர்களை பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாக பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்பூவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சு க £ சி னி « ப சி யு ள் ள த £ க கருதுகிறேன்.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேசசிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு ª க £ ம் பு மு ¬ ள த் தி ரு ப் ப து உண்மைதான்.

நடிகை மனோரமா: முதல்வரும் ஒரு நடிகைதான். அவரும் குஷ்பு சொன்னது த வ று எ ன க் கூ றி யி ரு க் கி ற £ ர் . முடிந்துபோன விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். நான் படித்தவள் கிடையாது. எய்ட்ஸ் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.


கவிஞர் மேத்தா: குஷ்பு, விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி, கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அ ¬ ண க் க ப £ ர் ப் ப து த £ ன் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது. இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.


இயக்குநர் கேயார்: குஷ்பு பேசியதும் சுகாசினி பேசியதும் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை வரவேற்க முடியாது. காரணம் கண்ணகி வா-ழ¢ந்த நாடு இது. விளம்பரமே இல்லாமல் இருப்பதைவிட தவறான விஷயங்களை பேசி இப்படிப்பட்ட விளம்பரமாவது கிடைக்கட்டுமே என அவர்கள் விரும்புகிறார்கள்.

http://www.tamilmurasu.in/2005/nov/10/2.pdf

Read More...

Wednesday, November 09, 2005

செல்லெல்லாம் மாணிக்க செல்லாகுமா?

செல்லிடத்தொலைபேசி தொலைந்தால் என்னாகும்? இன்றைய வலைப்பதிவில் பதிவர் ஒருவர் விபரமாக எழுதியுள்ளார்.தமிழக நண்பர்கள் கட்டாயம் படித்து அறிவுறுக..

செல் மலிந்தது போல் வேறொன்றும் இவ்வளவு விரைவாக கெதியாக மலிந்ததில்லை.எனினும் செல் காணாமல்போனால் துலையுது சனி என்று கவலைப்படாமல் இருக்கமுடியாது.இது பற்றி எல்லாளன் ஒரு பதிவு முன்னர் இப்படி எழுதியிருந்தார்.

"கைத்தொலைபேசியில் மட்டும் அனைத்து இலக்கங்களையும் வைத்திருக்காதீர்கள்.

கிட்டத்தட்ட 300பேரின் இலக்கங்களுக்கு நான் இனி எங்கு போவது?
இப்போது தான் மூன்று சேர்ந்திருக்கிறது. இனியும் சேரும் என்று நம்புகிறேன்."

எனவே செல்லும்போது செல் கவனம்.



Read More...

Monday, November 07, 2005

எப்படி? எப்படி?

எரிதங்கள் பின்னூட்டப்பெட்டிகளில் பதிலளிக்க செய்வது எப்படி?

யாராவது இந்த தொழில் நுட்பம் தெரிந்தால் தயை கூர்ந்து அறியத்தாருங்கள்.எனது பதிவும் அடிக்கடி தமிழ்மணத்தில் தொடர்காட்சிகளாக அரங்கேற உதவும்.:)

Read More...

Sunday, November 06, 2005

பசு நேசன்

இலங்கை அதிபர் வேட்பாளர் அதிரடி பிரசாரம் வீட்டுக்கு ஒரு பசு
10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார்.

இலங்கையில் வரும் 17-ந்தேதி அதிபர் தேர்தல். பிரசாரம் இப்போதே சூடு பிடித்துவிட்டது. தேர்தல் என்றால் வாக்குறுதி இல்லாமலா?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான விக்டர் ஹெட்டிகொட என்பவர் இலங்கை மக்கள் என்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் வீட்டுக்கு ஒரு பசுவை இலவசமாக தருவேன் என்று பிரசாரம் செய்து கலக்கி வருகிறார்.

அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்கள் நமக்கும் பசு உண்டா? இல்லையா? என்று பயப்படவேண்டாம்.

பசுவை வைத்துக் கொள்ள தொழுவம் ஏற்பாடு செய்து தந்தால் அவர்களுக்கும் பசு உண்டு. நான் தரப்போகும் பசு ஒவ்வொன்றும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார் ஹெட்டி கொட. இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டுக்கு ஒரு பசு தரும் ஐடியாவை கொண்டு வந்திருக்கிறேன்.

மிச்சமாகும் பாலை வெண் ணெயாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்கிறார் இவர். இந்த வேட்பாளர் 3500 பேர் பணிபுரியும் மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் என்பதுடன் பெரும் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்.http://www.newstamilnet.com/

Read More...