Sunday, September 11, 2005

1984 லிருந்து...

விடுதலைப்புலிகளின் மாதாந்த பத்திரிகையான விடுதலைப்புலிகள் இணையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தளமேற்றப்பட்டுள்ளது.இதில் விசேடம் என்னவெனில்..இதுவரை வெளிவந்த 20 வருடத்து இதழ்களும் (1984-...)இணையத்தில் பெறக்கூடியதாகவுள்ளது.

Image Hosted by ImageShack.us

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பாகவிருந்தாலென்ன சமாதான துருப்புகளாகவிருந்தாலென்னஅந்த அந்த அந்த காலத்தில் நடந்த சம்பவங்கள், முற்றுகைகள், கால வாரியான குறிப்புக்கள் யாவற்றையும் ஒரே இடத்திலேயே தரவுகளை எடுத்து கொள்ள கூடியதாகவுள்ளது.

இனி புலிசார் இணையம் என்று யாரும் வழங்கும் கோமாளித்தனமான குறிப்புகளை கருத்திலெடுக்கவேண்டிய தேவையும் வராது.

அனைத்து பத்திரிகைகளும் pdf வடிவில் இருப்பதால் இந்த செயலியை(foxit) இறக்கி பத்திரிகையை படித்துக்கொள்ளலாம்.acrobatreader ஐ விட மிக வேகமாக பக்கங்களை எடுத்துவரும். நிறையும் குறைவு.முயற்சித்துப்பாருங்கள்.

Read More...

Tuesday, September 06, 2005

முற்றுப்புள்ளி பிழை

கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதுபோல் தற்சமயம் வலைப்பூக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பண்ணுவதுகூடஒரு வீரதீரச்செயலாகிவிட்டது.

இந்த பின்னூட்ட வீரர்களின் திருவிளையாடல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.. பினாமிகள் போல் ஒருவர் பெயரில் இன்னொருவர் அசரீரி பொழிகிறார்.இவர்கள் பேசும் தேவபாசை எந்த வட்டார வழக்கு என்றும் புரிவதில்லை..தமது அரிப்பிற்கு மற்றவர்களை சொறிந்துவிடுகிறார்கள்.

தலித், பார்ப்பான், சிலோன்காரன், இந்தியாக்காரன் ,என்ற வட்டத்தை உடைத்து ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிய வலைப்பதிவை, அதன் வளர்ச்சியை ஒரு சில கக்கூஸ் சுவர் கிறுக்கிகள் மீண்டும் பாழாக்குவது வருத்தத்தைவிட கோபத்தையே ஏற்படுகிறது.
வலைப்பதிவுகள் இன்னும் வளர் நிலையிலேயே நிற்கிறது. சுடுநீரை ஊற்றி கருக்கிவிடாதீர்கள்.

வலைப்பதிவர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்குப் பதில் மன உளைச்சலை கொடுக்காதீர்கள்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்..

"வைக்கோல் பட்டடை நாய் தானும் தின்னாது மற்றவர்களையும் தின்னவிடாது "

பி.கு எழுதத்தூண்டிய பதிவு

Read More...

Wednesday, August 31, 2005

ஒழுக்கமற்றவர் இறைவன்

ஒழுக்கமற்றவர் இறைவனானால் என்றதொரு பதிவு யாழிலிருந்து வெளிவந்துள்ளது.எப்படி இப்படி ஒரு சிந்தனை வலைப்பதிவாளருக்கு எழுந்தது?அதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள்? அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா?..
என்னவோ மற்றவனுக்கு "பேப்பட்டம் "கட்டாதீர்கள்.

Read More...

Tuesday, August 30, 2005

தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..


சிலருக்கு வாயில் சனி தேவையான நேரம் வந்து அமர்ந்துவிடுகிறது.தங்கபச்சான் அந்த இரகம்.
என்னவோ சொல்ல நினைத்து என்னவோ சொல்லி எல்லோரிடமும் வாங்கி கட்டுகிறார்.லொஜிக்காக நினைத்துப்பார்த்தால் கூடதங்கர் அப்படி பேசியிருக்கமாட்டார்.அப்படி பேசியிருந்தாலும்கூட அந்த அர்த்தத்தில் பேசியிருக்கமாட்டார்.

யார் பேசியிருந்தாலும் ஒரு திரைப்படத்துறையில் இருப்பவர் அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கலைஞன் அப்படி அர்த்தத்தில் பேசியிருக்க வாய்ப்பு குறைவு.

மொத்தத்தில் தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..

Read More...