Monday, November 07, 2005

எப்படி? எப்படி?

எரிதங்கள் பின்னூட்டப்பெட்டிகளில் பதிலளிக்க செய்வது எப்படி?

யாராவது இந்த தொழில் நுட்பம் தெரிந்தால் தயை கூர்ந்து அறியத்தாருங்கள்.எனது பதிவும் அடிக்கடி தமிழ்மணத்தில் தொடர்காட்சிகளாக அரங்கேற உதவும்.:)

Read More...

Sunday, November 06, 2005

பசு நேசன்

இலங்கை அதிபர் வேட்பாளர் அதிரடி பிரசாரம் வீட்டுக்கு ஒரு பசு
10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார்.

இலங்கையில் வரும் 17-ந்தேதி அதிபர் தேர்தல். பிரசாரம் இப்போதே சூடு பிடித்துவிட்டது. தேர்தல் என்றால் வாக்குறுதி இல்லாமலா?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான விக்டர் ஹெட்டிகொட என்பவர் இலங்கை மக்கள் என்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் வீட்டுக்கு ஒரு பசுவை இலவசமாக தருவேன் என்று பிரசாரம் செய்து கலக்கி வருகிறார்.

அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்கள் நமக்கும் பசு உண்டா? இல்லையா? என்று பயப்படவேண்டாம்.

பசுவை வைத்துக் கொள்ள தொழுவம் ஏற்பாடு செய்து தந்தால் அவர்களுக்கும் பசு உண்டு. நான் தரப்போகும் பசு ஒவ்வொன்றும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார் ஹெட்டி கொட. இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டுக்கு ஒரு பசு தரும் ஐடியாவை கொண்டு வந்திருக்கிறேன்.

மிச்சமாகும் பாலை வெண் ணெயாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்கிறார் இவர். இந்த வேட்பாளர் 3500 பேர் பணிபுரியும் மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் என்பதுடன் பெரும் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்.http://www.newstamilnet.com/

Read More...

Saturday, November 05, 2005

இடறல்

தலைவர் பிரபாவின் பிறந்த நாளன்று பிறக்கும் சிசுக்களுக்கு வங்கிக்கணக்கு

திருமலை அரசியல்துறையினர் ஏற்பாடு

எதிர்வரும் 26ஆம் திகதி தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 51ஆவது பிறந்ததினமாகும். இதனையொட்டி திருகோணமலையில் அன்றைய தினம் பிறக் கும் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. விடு தலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறையினர் இத்தகவலைத் தெரி வித்தனர்.
தேசியத் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி திருகோண மலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிலையான வைப்புக்கணக்குகளும் நினை வுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
அன்றைய நாளில் பிறக்கும் சிசுக்களின் விவரங்களை திருமலை மாவட்ட வைத்தியசாலையிலும், பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடமும் உறுதிப்படுத் துமாறும் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்.http://www.uthayan.com

தீவின் கருத்து :-இது போட்டிக்கு திருவிழா செய்யும் கலாச்சாரமாக மாறாவிட்டால் சரி.:(

Read More...

Friday, November 04, 2005

மஜா ஜனங்களே

தீபாவளிக்கு படம் ரிலிஸாகி இத்தனை நாளாகியும் இன்னமும் பட விமர்சனம் நமது வலைப்பதிவாளர்கள் எழுதவில்லையே.என்னாச்சு...எல்லோரும் சந்திரமுகி இன்னொரு தடவை பார்க்க போயிட்டாங்களா???




Read More...