Tuesday, April 25, 2006
Monday, April 24, 2006
விசுவரூபம்
அதிமுகவில் விசு.. No Comments.
போற போக்கில் எல்லாருமாக சேர்ந்து திமுகவை வெல்லப்பண்ணிவிடுவார்கள் போல் இருக்கிறது.
Posted by theevu | Permalink | 3 comments
தமிழ்நாட்டில் செம்படை
தமிழ்நாட்டில் எண்ணைக்கு பஞ்சமா?
ஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..
இதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலா?இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா?
பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)
Posted by theevu | Permalink | 5 comments
Friday, April 21, 2006
அதிமுக வெல்லும் தீவாரின் கருத்துக் கணிப்பு
லயோலா கருத்துக்கணிப்பு உளவுப்படை கருத்துக்கணிப்பு என வெளியாகும்போது தீவாரின் கருத்துக்கணிப்பு இது.
தமிழகத்தில் எந்த அனுதாப அலையும் இம்முறை வீசாவிட்டாலும் பல கூட்டணிகளை எதிர்க்கும் நோஞ்சான் திமுக என ஒரு அனுதாப அலையை உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள் போலிருக்கிறது.
எனினும்
கருணாநிதி டால்மியாபுரத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தென்ன இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாயிருந்தென்ன.. எம்ஜிஆர் தோஷம் இருக்கும்வரை இரட்டை இலைக்குத்தான் வெற்றி!
Posted by theevu | Permalink | 5 comments