Friday, June 08, 2007

மூத்த பதிவராகிய நான்

அண்மையில் 1944 ல் பிறந்த என்னை யார் அந்த மூத்த பதிவர் எனக் கேட்பதும் சாடை மாடையாக பின்னூட்டமிடும்போது மூத்த பதிவர் என விமர்சிப்பதும் கொஞ்சம் கூட நல்லாயில்லை.


நாடோடி மன்னனை(எம்ஜிஆர் படம் சரத் படமல்ல) முதல் நாள் முதல் show பார்த்த என்ன கிண்டலடிப்பதும்(முடிந்தால் சிவாஜி படம் முதல் நாள் முதல் show பார்த்து பதிவில் விமர்சனம் எழுத தில் இருக்கா?) யார் நீ மூத்த பதிவர் எனக் கேட்பதும் ரொம்ப ஓவராக உங்களுக்கே படவில்லையா?


ஒரு மூத்த பதிவருக்கு தமிழ்மணம் செய்யும் கைமாறு இதுதானா? அட்மின் இதை தட்டிக்கேட்க வேண்டாமா?இதை தட்டிக்கேட்க ஒருவருமில்லை.காசிக்கும் போக வழியில்லை.


ஆ ஊ எனன்றால் செய்வினை வைப்பதுபோல் க்ளாசிக்கல் லாங்கியூஜ் செந்தமிழில் ஒரு பதிவு எனது பெயரிலேயேவைத்து ஒரு வலைப்பக்கம் திறக்கிறீர்கள்.

இதை விட வேறென்ன உங்களால் செய்ய முடியும்?


என்னை மதித்து ஒரு சிலை வைக்கும் காரியத்திற்கு இது ஈடாகுமா?

தமிழில் வலைப்பதிவில் முதன் முதல் மண் தோன்றாக் காலத்து மூத்த பதிவர் நான் என்ற பெயரைநீங்கள் இருட்டடிப்பு செய்தாலும் நான் கவலைப்படமாட்டேன்.

நான் தான் இணையத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முதல் தோன்றிய முதல்வன்.

என் அப்பன் கொழுவிகுருநாதன் என் சாதனையை அறிந்து கொ(ல்)ள்வான்.

என் படத்தை தமது பதிவில் வெட்டியாய் உழைத்து ஒடாய் போனதற்காக படமாக போடும் அன்பர்கள் அதற்கு பதிலாக ஒரு பாயும் புலியோ அல்லது ஒரு புளியோ(ஓரு புளியமரத்தின் கதை) போட்டால் சந்தோஸமடைவேன்.

பெயர் கூட தேவையி்லலை.நான் ராம பக்தன் ராம்வோச்

எத்தனை நூலகம் தவழ்ந்து எகத்தனை பத்திரிகை மேய்ந்து எத்தனை பதிவு போட்டிருப்பேன்.எல்லா விதயமுமே பலனளிக்காமல் வேஸ்ற்.

அதனை விடுத்து மூத்த பதிவாளர் யார் எனக் கேட்பது ரொம்ப இன்ஸல்ட்.

சுடசுட எத்தனை பதிவுகள் இட்டிருப்பேன்..எல்லாமே ஓஸியில் வாசித்துவிட்டு சற்றுமுன் கூட இட்டிருந்தேனே..நான் சுடுவதும் பதிவதும்சுட்டுவதும் என்று எத்தனை பதிவுகள் ஐயா?

ஒட்டக்கூத்தரே என் வாசல் வழியாகத்தான் வெளியேறவேண்டும்

யார் அந்த மூத்த பதிவர் என கேட்டீரே ஒரு கேள்வி.

நான் மூக்கை நாசி என்றுதான் பின் நவீனத்துவமாக எழுதுவேன்.
அது உங்களுக்கு புரியாவிட்டால் அது எனது தப்பல்ல..எனக்கு இந்த கும்மி கோலாட்டம் பின்னூட்டம் எல்லாம் ஒத்து வராது. நான் தனீீீீீீ வழி. கிழக்கு வழி..


குத்தாட்டம் ஆடுவதற்கு உங்களுக்கு மூத்த பதிவர்தான் கிடைத்தனரா?

நாம் என்ன தீமை உங்களுக்கு செய்தோம்

பின்னூட்டமிட மறுத்தோமா..

கும்மியை ரசிக்க மறுத்தோமா?

என்னையா செய்தோம்?

மூத்த பதிவரை தேடி தேடி குமட்டில் குத்துகிறீர்களே...

Read More...

Tuesday, June 05, 2007

ஜூன் 15


ஆனி15

வலைப்பதிவருக்கு அன்று விடயதானம் நிறைய கிடைக்கும் நன்னாள்.அன்றைய தினம் ஆணி பிடுங்காமல் லீவு போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யலாமென உத்தேசித்திருக்கிறேன்.

அன்றைய திருநாளில் பல நாட்களாக செய்யாமல் விடுபட்டிருந்த உறுத்திகொண்டிருக்கும் நேர்த்திக்கடன்களை முடிக்கலாமென இருக்கிறேன்.குழப்பமென்னவெனில் எதனை செய்வது எதனை விடுவது ?

அன்றைய திருநாளில் பாற்காவடி எடுப்பதா அல்லது பாலபிசேகம் செய்வதா?

அல்லது கற்பூரமேத்தி தீபாராதனை செய்யும் பக்தர்களுடன் கலந்து கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொள்வதா?

இவ்வளவும் சரிவராவிட்டால் அல்லது கோயிலுக்குள் போக அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் அங்கப்பிரதட்ஷணம் செய்யலாமென முடிவு.

அரோகரா.

Read More...

Wednesday, May 30, 2007

நான் கஞ்சா அடிக்கப்போகிறேன்.

கஞ்சா கருப்பு ஆகிய நான் கஞ்சா அடிக்க இமயமலை செல்வதாக இருக்கிறேன்.அதுக்கேண்டா இமயமலை என்று கேட்கும் அறிவுக்களஞ்சியங்களின் குரல் எனக்கு அசரீரியாகக் கேட்காமலில்லை.இந்தியாவில் இமயமலையில் கஞ்சா அடித்தால் சட்டப்படி குற்றமில்லையாம்.எனவே எனக்கு கஸ்டம் வரும் காலங்களில் அல்லது அமைதி வேண்டின் இமய மலைக்கு செல்வதாக இருக்கிறேன்.

கொசுறு செய்தி்:-சோழ பாண்டிய மன்னர்கள் இமயமலைக்கு சென்றது கூட மிகைப்படுத்தப்பட்ட வரலாறு என்று மதன்ஜி அண்மையில் விகடனில் கூறியிருக்கிறார்.வரலாறு கொம்முடன் ஏதோ முரண்பாடாம்.

Read More...

Tuesday, May 29, 2007

Always Be Proud of Who We Are

Video பதிவு .முத்துசாமி கருப்பையா முனியாண்டி சின்னத்துரை from Malaysia.


utube வீடியோ பார்ப்பதில் சிக்கல்கள் வேகத்தடை இருப்பின் இந்த செயலியைSpeedBit Video Accelerator நிறுவினால் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.பரிந்துரை செய்யக்கூடிய செயலி

Read More...