Monday, October 10, 2005

சென்னை டாக்ஸி

சென்னையில் கோல் ரா(டா)க்ஸிக்கான விளம்பரம் தென்பட்டது.சென்னயில் இப்படியான கோல் டாக்ஸிகள் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது.திரைப்படங்களிலும் பார்த்ததாக ஞாபகமில்லை

2 கிமீக்கு 30 ருபா எனவும் அதற்கு மேற்பட்ட கிமீ 10 ரூபா எனவும் இருந்தது.






தண்டையார் பேட்டையிலிருந்து விருகம்பாக்கத்திற்கு மினக்கெட்டு வந்து விருகம்பாக்கத்திலிருந்து வடபழனிவரை போய் வர ராக்ஸிகாராகளுக்கு கட்டுபடியாகுமா? அல்லது அதற்கும் மீட்டருக்கு மேல் என்று ஒரு தர்மம் இருக்குமா?

3 comments:

dondu(#11168674346665545885) said...

கிலோமீட்டருக்கு என்று நிர்ணயித்துள்ள 10 ரூபாயே எம்ப்டி ரிடர்னையும் மனதில் வைத்துத்தான் உருவாயிற்று. மேலும் அவர்கள் அப்படியே காலியாகத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். ஃபாஸ்ட் ட்ராக், பாரதி போன்ற டாக்ஸிகள் பயணிகளை ஓரிடத்தில் விட்டதும் அவர்களுக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து விட்ட இடத்திற்கு அருகாமையில் இருக்கும் வாடிக்கையாளர் வீடுகளுக்கு அனுப்புவார்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் காலி ஓட்டம் என்பதே இருக்காது. நான் முதலில் குறிப்பிட்ட ரேட் அப்போது லாபம்தானே.
மக்களுக்கு என்ன லாபம் என்றால் மீட்டருக்கு மேல் தர வேண்டியதில்லை. ஃபோன் செய்தால் வீட்டுக்கு வண்டி வரும். ஏறி அமர்ந்த பிறகே மீட்டர் போடுவார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் உதிர்க்கும் ஆசிர்வாதச் சொற்களை கேட்க வேண்டாம். என்ன சந்தோஷம்தானே. கால் டாக்ஸி பற்றி தனிப்பதிவும் போட இருக்கிறேன். அதில் இன்னும் விவரமாகக் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நன்றி dondu ayya விளக்கத்திற்கு.

உங்கள் ராக்ஸி பற்றிய தனிப்பட்ட பதிவை மேலும் அனுபவங்களுடனும் விபரங்களுடனும் எதிர்பார்க்கின்றேன்.

dondu(#11168674346665545885) said...

என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்