Friday, October 21, 2005

கொல்லவல்ல கொல்லவல்ல!

காசியுடன் முரண்படுபவர்களுக்கான வழிகாட்டல்.

வலை பதியும் ஆனால் தமிழ்மணத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகாதவர்களை நாம் விலக்கி வைத்துவிடமுடியாது.
உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படாமல் ஆனால் மக்கள் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும்.

அதே நேரம் அங்கே பதியவெண்டும் இங்கே இதை கவனிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்ககூடாது.

தனிப்பட்ட தலையீடுகளோ அல்லது வேறு 3 மாத அல்லது 4மாத இடைவெளி என்ற பழு இல்லாமல் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட முறையின்படி இலகுவாக செய்யலாம்.


உங:கள: ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு இடத்தில்(சொல் உதவி Voice on Wings) தமிழ்ப்பதிவுகள் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்துவிடுங்கள் வேறு ஒன்றுமே பிரத்தியேகமாக பண்ணத்தேவையில்லை. (http://technorati.com/ல் அந்த வலைப்பக்கத்திற்கு போய் புதுப்பிக்கும்போது ஒவ்வொருமுறையும் அறிவிக்கவேண்டும்.இங்கு அது தேவையில்லை.)

தேதி வாரியாக நீங்கள் பதிந்து 20 நிமிடத்திற்கு முன்னதாகவே திரட்டி தரப்படும்.

இதுவே அந்த உரல் :-

http://search.blogger.com/?ui=blg&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+&scoring=dஇதனை உங்கள் விருப்பு பக்கமாக ஆக்கிகொள்ளுங்கள்.

இந்த உரலை தமிழ்மணத்தில் சேர்த்தாலே வலைப்பதிவிற்கு புண்ணியமுமாச்சு.சுமை இறக்கியதுமாச்சு..

முயன்று பாருங்கள்.

பி.கு அதற்காக இதை தமிழ்மணத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.தமிழ்மணம் ஒரு தனி மனிதனின் மொத்த உழைப்பு.தேடி தேடி புது உத்திகளை கையாண்டு நெறிப்படுத்திய ஒரு வலைப்பதிவனின் தேடல்.எனவே அதற்கென்று சில அனுகூலங்கள் இருக்கும்.

காசியின் முடிவுபற்றி தீவின் கருத்து.-
“நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல.”

4 comments:

Boston Bala said...

Thanks for the URl pointer.

Voice on Wings said...

//நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல//

இதற்கு என்ன பொருள்? :)

உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது. ஆனால் வசந்தனின் பதிவுகளை இப்பட்டியல் கண்டு கொள்ளவில்லையே? உ-ம், அவரது இந்தப் பதிவு 'தமிழ்ப்பதிவுகள்' என்ற தேடுச்சொல்லை உள்ளடக்கியிருந்தாலும் Blogger searchஇல் தென்படவில்லை. அதுதான் ping / அறிவிப்பு செய்வதன் பலன், திரட்டப்படும் நிச்சயம் இதனால் உறுதி செய்து கொள்ளப்படுகிறது. Ping செய்யாத நிலையில் தேடுபொறிகள் (technorati or google) தாமாகவே நம் பதிவை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், இது சில சமயம் நடக்காது போகும் வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறது, மேலே குறிப்பிட்ட உதாரணத்திலிருந்து.

பலராலும் மாற்று ஏற்பாடுகள் முயற்சிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

Anonymous said...

தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உள்ளன. முதலில் உயிரெழுத்துக்கள் எவையெனப் பார்ப்போம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
அடுத்து மெய்யெழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் உருவாகும். அவ்வாறு 216 உயிர்மெய்கள் உள்ளன. அத்தோடு குறைவான பாவனையிலுள்ள ஆய்த எழுத்து என்ற ஒன்றையும் வைத்துள்ளோம். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன.

அடுத்த வகுப்பில் உயிர்மெய்களை எவ்வாறு எழுதுவது என்று பார்ப்போம்

Dharumi said...

வந்தேன்;குதி அறிந்து குத்தினேன்; மீண்டும் வருவேன்.