சிறப்பு வலைப்பதிவு
அநேகமாக சில வலைப்பதிவுகளைப்பார்த்தால் மெச்சத்தோன்றும்.தமது உணர்வுக் கலவையை அல்லது சில ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருப்பார்கள்.ஆ என்று படித்துவிட்டு ஆச்சர்யப்படத்தோன்றும்.அந்த கட்டுரைக்கேற்ப பின்னூட்டமிட தகுதி வராது.முடிந்தால் ஒரு தரமானது என ஒரு புள்ளடி போட்டுவிட்டு நகர்ந்து விடுவேன் .ஆனால் கட்டுரையின் பாதிப்பு சில நாட்களுக்கு இருக்கும்.
ஒரு பதிவில், பின்னூட்டமிட்டஒருவர் அமலாசிங் என்று நினைக்கிறேன் திருச்சியில் ஒரு பஸ் ரூட் சொல்லி அந்த பஸ்ஸில் தினசரி நடப்பதை சொல்லியிருந்தார் .என்னவோ அது சற்று நம்பமுடியாமல் வேதனையாகவிருந்தது.பல நாடகள் அந்தக்கருத்து மனதை மறக்கவிடாது இப்படியுமா என சினக்கவைத்தது
இன்று மதி அது போல் மற்றவர்கள் தொடத்தயங்கும் ஒரு பதிவை இட்டிருக்கிறார்.அதன் தரம் கருதி அதற்கு என்னால் பின்னூட்டமிடமுடியவில்லை அதனால் இங்கு அதைப்பற்றி பதிகிறேன்.தமிழகப் பத்திரிகைகள் இதுபோன்ற கட்டுரைகளை இணையத்திலிருந்து எடுத்து மறுபிரசுரம் செய்தல் வேண்டும்
யாழிலும் நாமும் எமது கல்லூரிப்புருவத்தில் சேட்டைகள் செய்துள்ளோம்.ஆனால் அது ஒருபோதும் பாலியல் வன்முறையாக இருந்ததில்லை.
0 comments:
Post a Comment