Sunday, March 12, 2006

அமைதிப்பூங்கா

செந்தமிழ் காவலர்களின் தேர்தல் பேச்சை இட்லிவடை ஒரு சில உதாரணங்களோடு காட்டியுள்ளார்.

எனக்கு இதில் பெரிய ஆச்சர்யமென்னவென்றால் ஆட்டோ பயம், ஓட ஓட வாள்வெட்டு என தமிழக அரசியல் இருக்கும் என நினைத்தால் இந்த கருத்து சுதந்திர அரசியல் நன்றாகத்தானிருக்கிறது.

அவனவன் அகண்ட காவேரியிலிருந்து, ஒண்டிக்கு ஒண்டி வாரீயா என வீராப்புடன் பேசுமளவிற்கு தமிழக அரசியல் ஜனநாயக உரிமை இருப்பதை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.

சில விடயங்கள் தேவைக்கதிக வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றன என்பதற்கு(ஆட்டோ பயம்) இந்த தேர்தல் மேடைப்பேச்சுக்கள் உதாரணமாகவிருக்கின்றன.

4 comments:

Voice on Wings said...

தமிழகத்த அமைதிப்பூங்கான்னெல்லாம் குறிப்பிட்டு என்ன கிச்சு கிச்சு மூட்டாதீங்க, தீவு :) அடியாட்களோடு உலா வரும் அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அவர்களுக்கு ஆட்டோ பயமெல்லாம் கிடையாது. அதெல்லாம் பொதுமக்களுக்குத்தான். நாராயண் நிழலுலகத்தைப் பற்றி விரிவாக எழுதினார். அதன் வன்முறை, சட்டத்தை ஏய்க்கும் போக்கு ஆகியவற்றாலெல்லாம் யாருக்கு ஆபத்து? எந்த ஆதிக்கப் பின்புலமுமில்லாத பொதுஜனத்திற்குத்தான். அவர்களின் குரல்வளையை நெரித்து, அவர்களை மீளாத அச்சத்தில் வைத்திருப்பதற்குத்தான். உ-ம், ஒரு blade துப்பும் ஆசாமி எதிரிலிருந்தால் என்னால் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்க முடியாது, சகலத்தையும் மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஜெயலலிதாவுக்கு எதிராக public interest litigation போட்ட வக்கீலுக்கு (விஜயன்?) ஏற்பட்ட நிலைமை தெரியுமா? அது போல் எவ்வளவோ உதாரணங்களுண்டு.

Voice on Wings said...

சந்திரலேகா என்ற IAS அதிகாரியின் முகத்தில் acid வீசிய அவலத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர் பிறகு சுப்பிரமணிய சாமியோடு இணைந்ததைப் பற்றியெல்லாம் எனக்கு விமர்சனமுண்டு. ஆனால், அதிகார சக்திகளோடு ஒத்துழைக்காதவர் ஒரு IAS அதிகாரியாக இருந்தாலும், அவர் முகம் ஆசிட் வீசி அலங்கோலமாக்கப்படும் என்ற 'அமைதியான' நிலையில்தான் இருக்கிறது தமிழகமும் அதன் ஜனநாயமும்.

Voice on Wings said...

பேருந்திலிருந்த மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவத்தை இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் தமிழகத்தில் பிறந்த பாவத்தைத் தவிர வேறெதையும் (அதாவது ஆதிக்க சக்திகளை எதிர்ப்பது, போன்ற பாவங்களெதையும்) செய்யவில்லை.

theevu said...

நன்றி விங்.

விஜயன் ,ஆடிட்டர் மற்றும் பல விடயங்களைப்பற்றி கேள்விப்பட்டதாலேயே இந்த பேச்சாளர்களுக்கு எவ்வளவு துணிவு என நினைத்தேன்.

குண்டு கல்யாணம் போன்றவர்களுக்கெல்லாம் பெரிதாக ரெளடிகள் துணையிருக்கும் என நினைக்கவில்லை.சிலவேளைகளில்
கட்சிகளுக்குள்ளேயே நீ என்னைப் பற்றி மேடையில் எதுவானாலும் பேசு நானும் உன்னைப்பற்றி பேசுவேன் கண்டுக்கப்படாது என ஒரு கனவான் ஒப்பந்தமிருக்கிறதோ தெரியாது:)

-theevu-