Friday, April 07, 2006

நான் இனி என்ன செய்ய?தம்பி திரைப்படத்தில் வரும் இந்த வரி போல்
தலைவர் பிரபாகரன் அவர்களும் சர்வதேசத்தை நோக்கி ஒருநாள் நான் இனி என்ன செய்ய என கேட்கும் நிலை உருவாகும் என்பது போல் தம்பி பட இயக்குனர் சீமான் விகடன் பேட்டியில் கூறியிருந்தார்.

சிங்களவர் தமிழர்களை பேயர்களாக நினைத்து தமது கட்டாக்காலித்தனத்தை அவிட்டு விட்டுள்ளனர்.புலிகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வந்து இழந்தது கூட.

திருமலையில் விக்னேஸ்வரன் அரசதுணைப்படைகளால் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் விடுதலைப்போராளிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மேலும் உச்சக்கட்டமாக திருமலை வன்முறையில், புலிகள் பலம் வாய்ந்து இருந்தும், தமிழர் பிரதேசத்திலேயே தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

திருமலை வன்முறை படங்கள் யாழிணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.சர்வதேச அரசியல் இனி காணும். புலிகளே மக்களை காப்பாறறுங்கள்.

10 comments:

மதி கந்தசாமி (Mathy) said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மக்கள் முக்கியமாக தமிழர்கள் தொடர்ந்து வன்முறையில் இறந்தவண்ணம் இருக்கின்றனர். மூன்று வருடமாக வலையில் புலிகளின் செய்திகளை படித்தாலும் புலிகளின் நிலைப்பாடு புரியவில்லை யாராவது உண்மை நிலையை விளக்கமுடியுமா ?

theevu said...

//புலிகளின் நிலைப்பாடு புரியவில்லை யாராவது உண்மை நிலையை விளக்கமுடியுமா ? //புலிகளின் அடுத்த செயல்பாடு பற்றி ஒருவருக்கும் சரியாக கூறத்தெரியவில்லை.

இது பலமா பலவீனமா தெரியாது.

ஆனால் தேசியத்தலைவரின் இந்த மௌனம் எதிரிகளுக்கு எப்போதும் ஆபத்தானதாகவே முடிந்திருக்கிறது.

சாத்தன் said...

//புலிகளின் அடுத்த செயல்பாடு பற்றி ஒருவருக்கும் சரியாக கூறத்தெரியவில்லை.
//
அதெண்டா உண்மைதான்.
யாழ்ப்பாணத்தை ஆமி பிடிக்கேக்க, வன்னிக்கு ஓடிவந்துகொண்டே "பேச்சுவார்த்தை எண்ட கதைக்கே இடமில்லை. அடிதான் எங்கட வழி" எண்டு அறிக்கை விட்டாங்கள்.

மகிந்தர் வந்த உடன எல்லாம் பிசகப்போகுது எண்டு நினைச்சமாதிரியே ஒருமாதம் அவங்கட கூத்துத்தான். பிறகு நல்லபிள்ளையள் மாதிரி வந்து ஜெனிவாவில கதைச்சாங்கள். அரசதரப்பு ஆக்கள் வெறியில போனவங்களோ எண்டு சந்தேகம் வாற அளவுக்கு கொழும்பில உளறித்தள்ளின பிறகும் பேசாம இருந்தாங்கள். அடுத்த சுற்றிலயும் முதல் கதைச்சதையே கதைப்பம் எண்டு ஒருத்தரும் எதிர்பாக்காத விசயத்தைச் சொன்னாங்கள்.

பிறகு பாத்தா வேற பிளானோட நிக்கிறாங்கள் போலகிடக்கு. உப்புப்பெறாத பிரச்சினைக்கு கடற்பயணத்தை நிப்பாட்டிப்போட்டாங்கள். கொழுவிறதெண்டே முடிவெடுத்துப்போட்டாங்கள். இப்ப தனிவிமானத்துக்கு ஓமெண்டு சொன்னபிறகும் சத்தம்போடாம நிக்கிறாங்கள். என்ன நசலைப்பிரட்டப் போறாங்களோ தெரியேல. இரணைமடுவிலயிருந்து நேர ஜெனிவாவுக்குப் போறதுதான் பிளான்போல.

அங்க என்னடாண்டா ஆமி சனத்துக்கு கிளைமர் வச்சு அடிக்கத் தொடங்கீட்டான். கண்காணிப்புக்குழுதான் பாவம்.

ஆதவன் said...

படித்த, நாகரீகமான, பண்பாடும், இராணுவ பலமும் உள்ள தமிழர்களால் கண்காணிப்புக்குழுவின் முன்னிலையிலும் அவர்களுக்கு முக்கியமான வேறு எந்த நாட்டினருடைய மேற்பார்வையிலும் கிளிநொச்சியிலோ அல்லது கொழும்பிலோ பேச்சுவார்தை நடத்த முடியதா ?
(இங்கு பேச்சுவார்த்தை அவசியமா என்பது வேறு விடயம்)

சாத்தன் said...

கிளிநொச்சிக்கு நான் ஓ.கே. கொழும்புக்கெண்டா சரிவராது. இதமாதிரி சிங்களவனும் கிளிநொச்சிக்கு மாட்டன் எண்டுவான். போறபோக்கில சந்திரமண்டலத்தைக் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

புலியளின்ர கேள்வியே பேச்சு அவசியமா எண்டதுதான். வெளிய கேக்கப் பயப்படுறாங்கள். ஆனா சிங்களவனுக்கு பேச்சுத் தேவைப்படுது எண்டு நினைக்கிறன்.

theevu said...

சாத்தன் said...

//புலியளின்ர கேள்வியே பேச்சு அவசியமா எண்டதுதான். வெளிய கேக்கப் பயப்படுறாங்கள். ஆனா சிங்களவனுக்கு பேச்சுத் தேவைப்படுது எண்டு நினைக்கிறன்.//

இன்று
நடந்த புத்தூர் சம்பவத்தை
பார்தால் சிங்களவர்க்கும் பேச்சு தேவையில்லைபோலிருக்கிறது.

ஆதவன் said...

இன்றய நிலையில் சிங்களவர்களால்
நிட்சயமாக சமாதானம் கிடக்கப்போவது இல்லை.

//ஆனால் தேசியத்தலைவரின் இந்த மௌனம் //
எனக்குப் புரியவில்லை

Anonymous said...

யாழ்ப்பாணத்தில் ஒரு வளர்ந்த ஆணுக்கு ஒரு ஆமிக்காரன் இருக்கிறான்.
//புத்தூரில் இராணுவம் வெறியாட்டம்: 5 அப்பாவி மக்கள் படுகொலை!//
புலிகளை எதிர்க்கும் மற்றய கூட்டங்கள் புலி என்று கூறி இருக்கும் தமிழ் ஆண்களை கொல்கிறார்கள்.
எப்படியானாலும் தமிழ் இளைஞர்கள் செத்துப்போவது சிங்களவனுக்கு கொண்டாட்டம்
ஜெனிவாவுக்குப் போய் என்ன செய்யப்போறாங்கள்.
நான் இங்கு ஒரு கிணத்துத் தவளையாகக் கத்திக்கொண்டு இருக்கிறேன்

theevu said...

//ஜெனிவாவுக்குப் போய் என்ன செய்யப்போறாங்கள்.
நான் இங்கு ஒரு கிணத்துத் தவளையாகக் கத்திக்கொண்டு இருக்கிறேன் //

உங்கள் கத்தல் கேட்டுவிட்டதோ தெரியாது.ஜெனிவா பேச்சுக்கள் நாட்டில் அமைதியில்லாமலிருப்பதால் தமிழ்செல்வன் அதனை இரத்து செய்துள்ளார்.