Wednesday, July 12, 2006

அவர் சொன்னார் இவர் சொன்னார்

பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை. டோன்டு சார் போல உதவி செய்ய எனக்கு மகரகுழைநாதன் துணையுமில்லை.எனவே பின்னூட்டங்களுக்கான மறுமொழித் தனிப்பதிவு..

//இரஜனி ராம்கி குதித்த குதியைப் பார்த்தனீங்களா? பிரபாகரனையெல்லாம் தேவையில்லாமல் இழுத்துப் பிறகு அந்தப் பதிவையே சந்தடியில்லாமல் தூக்கிவிட்டார்//

யாரோ சொன்னாங்க..

நல்லவேளை நான் பார்க்கவில்லை இல்லையெனில் அதற்கு என நான் புதிதாக பதிவு போடவேண்டி வந்திருக்கும்.


செந்தழல் ரவி ...

//நான்கூட ஒரு பதிவை ரஜினி ராம்கி சொல்லி தூக்கினேன்..அதாவத்ய் ரஜினி - சிவாஜி போட்டோக்கள்//

இணையப் பலம் இரஜனி இரசிகர்களுக்கு இன்னமும் புரியாதது வேடிக்கையே..ஒரு செந்தழல் இரவியை தூக்கச்சொன்னால் இன்னொரு வன்தழல் இணையத்தில் போடும் என்பது தெரியாததா? அல்லது
இணையத்தில் சிவாஜி போட்டோக்கள் அதனுடன் வராமல் நின்றுவிட்டதா?.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகை .ஸ்பெயினில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் இந்தப் படங்களை இரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என..செய்தி போட்டிருந்தது .படத்தின் தரத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது யாரோ யூனிட்டிலுள்ளவர்களே படத்தை எடுத்ததுபோலல்லவா இருக்கிறது..





G.Ragavan said...
//நடிகர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று நினைக்காத அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.//

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் திரைக்கலைஞர்களை காப்பாற்றும்போது அவர்களுக்காக இவர்கள் அணில் போல ஒரு சிறு குரல் கொடுத்தாலே இந்திய மட்டத்தில் அது சற்று கவனிக்கப்படும். பிரச்சனை விரைவில் தீர பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட இது போன்ற சில நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது.

நாகை சிவா said...

//நதி நீர் இணைப்பு திட்டம் தொடக்கப்பட்டு அதற்கு அவர் பணம் தராமல் இருந்தால், நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். அதை வரை அமைதி காணவும்//

ஆனானப்பட்ட தங்க கரண்டியில் உணவுண்ட பாகவதரிலிருந்து மாடியில் காரோடிய சந்திரபாபு வரையும் கடைசிக்காலத்தில் எப்படியிருந்தார்கள் என்பது வரலாறு சொல்லும்.எது எப்போ எப்படி நடக்கும் என்பதை யாரும் தீர்மானிக்கமுடியாது.நல்லது செய்வதை ஒத்திபோடக்கூடாது.தீயவற்றை ஒத்தி வைக்கலாம்.

எப்போ நதி நீர் இணைத்து எப்போ உதவி செய்து..

காலமாறறம்,, கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லச்செய்யும் .அதே காலம்தான் தாலியை தனது மகளுக்கு எடுத்து கொடுங்கள் என்று சொல்லவும் செய்யும்.உஙகளுக்கு தெரியாததா?

//சூப்ரிம் கோர்ட் சொல்லியே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. பாரதிராஜா, ரஜினி சொல்லி தண்ணீர் தர போகின்றார்களா?//

இதற்கு பதில் பகவத்கீதைதான் . கடமையை செய்....

சுப்ரீம்கோர்ட்டைவிட பலமாக ஒரு மாநில அரசு இருக்குமானால் அதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.


//Thamil said...

ரஜனிரசிகர்களுக்கு உண்மையில் மூளை இருந்தால் இனம் கண்டு கொள்வார்கள்.//

இரஜினி இரசிகர்கள் தமது தலைவரை விட செயலாளிகள்..அதற்கு சுனாமி செயற்பாடுகள் ஒரு உதாரணம்.அதை நாம் மறந்துவிடலாகாது.

புதுமை விரும்பி said...

//தீவு மன்னியுங்கள். தீவிரமாய் போய்க்கொண்டிருக்கும் வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து கலாய்ப்பதற்கு. செய்தி இதோ: இப்பொழுது முதலில் ஆடிய மகேந்திரன் தலைமையிலான "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணி முதல் இன்னிங்க்ஸ்ல் 110 ரன்கள் எடுத்து declare செய்திருக்கின்றனர். அடுத்ததாக வந்த பாலமுருகன் தலைமையிலான "இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணியினர் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 18 ரன்களில் captain பாலமுருகன் 11 ம் vice captain தீவு 7ம் அடித்த நிலையில் இருக்கின்றனர்.//

வாங்க சார் ..நானே எப்படா அவுட்டாவேன் என தவம் இருக்கையில் நீங்கள் வேறு..:)

பி.கு
நேரம் எடுத்து பின்னூட்டம் வழங்கிய அத்தனை சக பதிவர்களுக்கும் நன்றி கூறி உங்கள் பதிவுகளும் என்னை எழுதத் தூண்டும் பட்சத்தில் நேரமில்லையே என்று போகாமல் பின்னூட்டம் இடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.நன்றி.

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா? என்ற பதிவின் பின்னூட்டங்கள் இவை

5 comments:

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை.//

இதுக்கெல்லாம் அசரலாமா? சொல்லறவங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. நீங்க அடிச்சு ஆடுங்க. :D

ஜெ. ராம்கி said...

I have already explained why the said post was made and why it was removed from my blog. I don't like to repeat the same which may affect the Srilankan Tamils who are not at all concerned with this issue.

I just conveyed the request message from Shivaji Team not to publish the unauthorised stills. Everbody knows that it's not possible to keep it for so long and our intention is not to spend full time to prevent those things also.

In both these case, my stand is same as like what u have quoted.

பகவத்கீதைதான் . கடமையை செய்....

வசந்தன்(Vasanthan) said...

//இணையப் பலம் இரஜனி இரசிகர்களுக்கு இன்னமும் புரியாதது வேடிக்கையே..ஒரு செந்தழல் இரவியை தூக்கச்சொன்னால் இன்னொரு வன்தழல் இணையத்தில் போடும் என்பது தெரியாததா? அல்லது
இணையத்தில் சிவாஜி போட்டோக்கள் அதனுடன் வராமல் நின்றுவிட்டதா?.//


இதில் நான் முரண்படுகிறேன். இணையத்தில் வராமல் நின்றுவிடாது என்பதற்காக முயற்சியே எடுக்காமல் இருக்கச் சொல்வது பைத்தியக்காரத்தனம். இது சிவாஜி விசயத்தில் மட்டுமன்றி எந்த விசயத்துக்கும் பொருந்தும்.
ராம்கி முன்பு எழுதி பின் அழித்த பதிவிற்கூட, இணைத்தளத்தில் சந்திரமுகியைத் தடுக்க வேண்டுமென்ற அவரின் ஆவலுக்கு நான் உடந்தையே. அந்த விசயத்தில் என் ஆதரவு அவருக்குண்டு. ஈழத்தமிழர்களே பெரும்பாலும் இதைச் செய்கின்றனர் என்ற கருத்திலும் உடன்பாடே. அந்தப்பதிவில் பிரச்சினை வந்த இடம் வேறு. அதைவிடுவோம்.

லக்கிலுக் said...

///பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை. ///

அப்படிப் போடுங்க அருவாளை.... சூப்பர்....

ரவி said...

என்ன சொல்ல...அவர் சொன்னார் - இவர் சொன்னாருன்னு ஒரு புதிய ஸ்டைலை தமிழ் இணையத்தில் புகுத்துறீங்க...

இது எதுல போயி முடியப்போகுதோ ??

என்னது - ரஜினி ராம்கி சொன்னதுக்கு என்னோட கருத்தா ?

நானும் அவர் சொன்னவுடனே நாம ஏதோ வயலேஷன்ல ஈடுபடுறோமோ என்ற குற்ற உணர்ச்சியோட தூக்கிட்டேன்..

அதுக்கு அடுத்த நாள் காலையில் எங்க அம்மா தினத்தந்திய கொண்டுவந்து கொடுக்கிறாங்க...பார்த்தா

நான் கஷ்டப்பட்டு (?!!) அப்லோட் செய்து பின் டெலீட் செய்த படம்...

நொந்து நூலாகி - நூடுல்ஸ் ஆகிட்டேன்...

அப்புறம் எந்த இணைய தளத்தை திறந்தாலும் அந்த படங்கள் தான்...

நான் கூட நினைச்சேன்...இந்த படங்கள் வெளிவந்தா படத்துக்கு இன்னும் விளம்பரம் தானே - ஏன் ராம்கி வரிந்து கட்டுறார் என்று...

என்னமோ போங்க.. :) :)

<< ராம்கி - கோச்சுக்காதீங்க - சும்ம்ம்மா>>