Tuesday, September 26, 2006

யாரைக் கேட்டு?

பூங்கா விளம்பரம் எனது பட்டையில்?

தமிழ்மண பின்னூட்ட வசதிக்காகவும் pdf வசதிக்காகவும் என சேர்த்த பின்னூட்ட பதிவு பட்டையில் இப்பாழுது திடீரென பூங்கா என ஒரு விளம்பரப் படம்
புகுந்துள்ளது.

இதற்கான அறிவித்தலை தமிழ்மணம் ஏற்கனவே அறிவித்துள்ளதா?
எனது வீட்டில் உங்களை எனது வசதிக்காக அனுமதித்தாலும் எனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நானும் அறிய வேண்டுமல்லவா?

நாளை பிரபாகரன் வாழ்க எனவோ அல்லது தமிழ் ஈழம் வெல்க எனவோ அல்லது கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரமோ வரலாம்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் பட்டை அறிவித்தலில் தங்கள் சுதந்திரத்தை அறிவித்துகொள்வது நல்லது.

3 comments:

முகமூடி said...

பத்து நிமிடத்துக்கு முன்புதான் இதை ஒரு பதிவில் பார்த்துவிட்டு சென்று என் பதிவிலும் இது இருப்பதை பார்த்தேன். இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் கேட்டே விட்டீர்கள்.

இப்பொழுதெல்லாம் பதிவுகள் அவ்வளவு படிப்பதில்லையாதலால், இது குறித்த அறிவிப்பை தமிழ்மணம் வெளியிட்டிருந்தாலும் இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறேன். இல்லை fine prints disclaimer எதிலாவது இது பதியப்பட்டிருக்கலாம்.. எதுவுமே இல்லையென்றாலும், "(மக்கள் வரிப்பணத்துல இருந்துதான்னாலும்) இலவச அரிசி போடுறது நாங்க... பையில த/அ முத்திரை போடுவோம், முதல்வர் படம் போடுவோம், முதல்வருக்கு பிடிச்ச கவிஞர், நடிகர்னு போடுவோம், ஏன் மும்தாஜ் படம் கூட போடுவோம். அரிசிய வாங்கிகிட்டு மூடிகிட்டு போவியா" எனும் உடன்பிறப்புகள் வாழும் புண்ணிய பூமியில் இதெல்லாம் சகஜம்தானே என்று போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

Unknown said...

//நாளை பிரபாகரன் வாழ்க எனவோ அல்லது தமிழ் ஈழம் வெல்க எனவோ அல்லது கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரமோ வரலாம்.//

:-)))))))))

பட்டை அவிங்க பட்டை அதில என்ன வேணுமினாலும் வரலாம்.

மேலும் இப்படி அனாமத்தா கேள்வி கெட்கக்கூடாது :-) முறைப்படி அவங்க மன்றத்தில் முறையிடனும்

இது பற்றி அறிவிப்பு வந்தது. அதாவது பதிவர்கள் தங்களின் பதிவை பூங்காவில் சேர்க்க இதை அமுக்கி சம்பந்தம் கொடுக்கலாம்.

theevu said...

நன்றி முகமூடி கல்வெட்டு இருவரும் மிக நகைச்சுவையாகவே எழுதுகிறீர்கள்..கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

பட்டை பற்றிய விளக்கம் வந்துள்ளது..ஒரு வலைப்பதிவாளனின் கருத்தை கவனத்தில்கொண்ட தமிழ்மணத்தின் நாகரீகமான பதிலுக்கு நன்றி.

http://blog.thamizmanam.com/archives/54