Thursday, February 01, 2007

கும்மியடிக்க ஆட்கள் தேவை

சர்வதேச தரத்திலுள்ள பல நாடுகளில் கிளைகளுள்ள கம்பனிக்கு கும்மியடிக்க ஆட்கள்

தேவை.இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பில்லை.கும்மியடித்தலில் முன் அனுபவம்

இல்லாவிட்டாலும் பின் பாட்டு ஒத்து ஊதுதல் கடலை போடல் போன்ற துறைகளில் உங்களுக்கு ஏற்கனவே

அனுபவமிருந்தால் அது ஒரு முன் அனுபவமாகக் கருதப்படும்.

ஈழத்தவராக இருப்பின் குதிரை ஓடல் ,தலை மாற்றல் .காவடி தூக்கல் போன்றவை முன்
அனுபவமாகக் கொள்ளப்படும்.

விண்ணப்பம் செய்யும்போது அல்லது நேர்முகத் தேர்வின்போது தெரிந்திருக்கவேண்டிய சில
விடயங்கள்.

1.-முதலாளி தனது சொந்தச் செலவில் தனக்கு சூனியம் செய்யும்போது அவருக்கு
உறுதுணையாக செயற்பட்டு அவருடன் சேர்ந்து கும்மியடித்தல் வேண்டும்.

2.கும்மியடிக்காத ஆனால் கும்மிக்கூத்து பார்த்து இரசிக்கும் கலைஞர்களை பரம விரோதிகளாக

நேசிக்கும் மனப்பான்மை வேண்டும்.

3. கும்மியடித்தலில் ஒரு சோர்வு நிலை ஏற்படும்போல் தோன்றினால் வீராச்சாமி அவதாரம்

எடுத்து ஒரு பதிவு போட்டுவிடவேண்டும்.

4. வேலையா கும்மியா என்ற ஒரு சவால் அலுவலகத்தில் தோன்றும்போது கும்மிக்கே முதலிடம்

கொடுக்கவேண்டும்.

5.ஆழ்ந்த தரமான பதிவுகளுக்கு கும்மியடித்து அதனை தமிழ்மணத்தில் முன்னுக்கு கொண்டுவரும் வீணான வேலைகளுக்கு
போகக்கூடாது.

6. பின்னூட்ட கயமை போன்ற சொற்தொடர்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்ககூடாது.

நேர்முகத் தேர்வு தி நகரில் ஏதாவது ஒரு ஐயங்கார் தெருவிலோ அல்லது முதலியார் தெருவிலோ நடக்க சாத்தியம் உண்டு.

7 comments:

Anonymous said...

கும்மி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ரவி said...

மே ஐ கம் இன் ??

ரவி said...

மோகனுக்கு அடுத்ததா நான் போட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிட முடியாதுன்னு சொல்லிட்டார்...இங்கே அந்த பின்னூட்டத்தை போட்டுக்கறேன்..அப்போ நான் தனிப்பதிவு போட தேவை இல்லாம போச்சு...

ரவி said...

மோகன் தாஸுக்கு நான் அன்போடு போட்ட பின்னூட்டம்...

///

ஓய் பையா... அந்தம்மா அவ்ளோ நீளமா பதிவு போட்டிருக்காங்கன்னா நீ ஏதாவது குட்டி கலாட்டா செய்திருப்பே... அவங்க பதிவை முழுசா படிக்காமல் உனக்கு பின்னூட்டமும் போட்டாச்சு...முதலில் ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க இருக்கும்னு நினைச்சேன்... பிற்குதான் தெரிஞ்சது அவங்க மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குன்னு... அவங்களை முதலில் கண்வின்ஸ் செய்யவும், முடிந்தால் மன்னிப்பு கேட்கவும்...இளைஞர்கள் நாம் முன்வந்தால் ஒன்னும் தப்பில்லை...ஒன்னும் கொறஞ்சிறாது. இனிமேல் நீங்களே முடிவு எடுக்கவும்...

;)

///

theevu said...

நான் ஏதோ எழுதப்போக இங்கு வேறு ஏதோ நடந்துகொண்டிருக்கிறது.
யாவும் சுபமாக முடியட்டும்.

செந்தழல்.
வலைப்பதிவர் சந்திப்பு இனிதாக முடிய வாழ்த்துக்கள்.சந்திப்பில் இட்லி வடை உண்டா?:)

Anonymous said...

இரண்டாவது கமெண்டை கொஞ்சம் ரிமூவ் பண்ணுங்க ப்ளீஸ்...அது யாரையோ புன்படுத்துவது போல் இருப்பதாக தெரிகிறது...