புலம்பல்
பிரபாகரன் போருக்கு போகும்போது பொங்கி வடைமாலை சாற்றி போவதாக யாரோ இணையத்தில் கயிறு விட்டிருந்தார்கள்.
நல்ல போர் முடில் இருந்த எனக்கு இப்படி எல்லாம் கேட்க புளுகமாகவிருந்தது
யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி 5 ஆண்டு பொறுமையாகவிருந்து அது கடந்தும் ஒன்றும் நடக்காவிட்டால் பெரிய பிரளயமே உருவாகப்போகுது என அரசியல் இராணுவ ஆய்வுப் பொடிகள் வேறு நாளொன்று கோள் ஒன்று (இது வேறு கோள்) என கட்டுரைகள் போட்டு வேறு உசுப்பேத்தியிருந்தார்கள்.
எனவே நானும் எனது சுய புத்தியை கழட்டிவைத்துவிட்டு மரத்தில் அணிலேறவிட்ட கதைபோல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதைவிட இன்னொரு தளத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுடன் அப்படி ஒண்டும்
நடக்காது என்றாலும் சில நேரம் காகம் இருக்க பனம்பழம் விழுந்தாலும் விழலாம் என்றிருந்தது.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட எல்லா விடயத்தை விடவும் எதிர்பார்ப்பும் அப்படி இருந்தபடியால் அந்த கடைசி வசனம் மட்டும் சிலவேளை ஏதும் நடக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை தந்தது..
நானும் உச்சக்ககட்டதை ஒரு நிதர்சனம் வழியாகவோ யாழ் கொம் வழியாகவோ நேரடியாக அனுபவிக்கலாம் என நினைத்து நேற்று வேலைக்கு வேறு லீவு போட்டு நிண்டால் ஒரு அசுமாத்தத்தையும் காணவில்லை.
ஒரு சந்தேகத்தில் வீட்டிலும் கேட்டன் .
"இஞ்சேரப்பா இண்டைக்கு ஏதாவது பொங்கல் படையல் வைக்கக்கூடிய நல்ல நாளே"
"இல்லை வெள்ளிக்கிழமையெண்டால் நல்ல நாள்.ஆனால் அரிசியில்லை போய் வாங்கியாங்கோ "
சரி எல்லா எதிர்பார்ப்பும் வீணாய் போயிற்று எனது லீவும் போயிற்று.
கடைசி பனம்பழம் இருக்க ஒரு காகமாவது விழுந்திருக்கலாம்..
இவங்கள் பொடியளும் ஒரு அறிக்கையோடு ஏமாத்தி போட்டாங்கள்..
இனி என்ன ..
ஆய்வுப் பொடிகள் இதேன் ஒண்டும் நடக்கேவில்லை எண்டு எழுதுவாங்கள் தானே..அப்ப பாப்பம்
புலம்பல் தீவு.
12 comments:
1,2,3 testing
உதில வேற சில விசயங்கள் இருக்கு.
நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்கினது ஏப்ரல் 19.
3 கப்பல் அடிச்சதோட சூட்டோடு சூடா ரெண்டு விமானமும் விழுத்தி பெரிய திருவிழாதான்.
ஆனையிறவு பிடிச்சதும் ஏப்ரல் கடசிக்க தான்.
நாலு மாசம் கடைப்பிடிச்ச ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை முறிச்சதும் தீச்சுவாலையை முறியடிச்சு சிங்களவனுக்கு மரண அடி குடுத்ததும் 2001 ஏப்ரல் 24.
இப்ப உங்களுக்கு ஏதும் விளங்கியிருக்குமெண்டு நினைக்கிறன்.
சரி. அதைவிட்டாக்கூட வரலாற்றுப்புகழ்மிக்க மாமுனை (அல்லது குடாரப்பு) தரையிறக்கம் நடந்தது மார்ச் கடைசிக்க. கிட்டவாப் பாத்தா அதுதான் தோதா வருது.
இனி நம்பருகளயும் கூட்டிக்கழிச்சு ஒரு வழிபண்ணிப் பாத்தா ஏதும் தெரியும்.
உதுபற்றி ஆய்வுக்கட்டுரையொண்டு எழுதி்க்கொண்டிருக்கிறன். அதில இன்னும் விவரமாகச் சொல்லிறன்.
22 ம் திகதி முடிஞ்சாலும் இரண்டு வாரக் காலக்கெடு உள்ளதே.. கூட்டிப் பாருங்கோ.. 22 + 14 = மார்ச் 8
8 ந்திகதி பிரபாகரன்ர நம்பர். வற்றாப்பளையில 7ந் திகதி பொங்கல். 8ம் திகதி அடி.
//கடந்த சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பன் புலிகளின் பொறுமை பற்றி ஒரு கருத்தைக் கூறியிருந்தான். அப்போது நான் அதை நம்பாமல் உதாசீனம் செய்தேன். என் நண்பன் சொன்னது என்னவெனில், தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//
//என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//
உமக்கு இப்படியான என்னோட்டம் வர இந்த பிண்ணுட்டத்தை படித்தது ஒரு காரனமா? இதற்கு முதல் இந்த பின்னூட்டத்தை படித்து இருக்கிறீரா?
அடடே இது நம்ம வெற்றி எழுதிய பின்னூட்டமாச்சே.. அதெப்படி இங்கு வந்தது..)
ரெண்டாவது பின்னூட்டம் போட்ட ஆய்வாளர் அனானிதான் நான்.
அதில ஒரு சின்னப்பிழை நடந்துபோச்சு.
மூண்டாம் கட்ட ஈழப்போர் எண்டு வந்திருக்க வேணும். நாலாம் கட்டம் எண்டு வந்திட்டுது.
திரு்ததி வாசியுங்கோ.
அதுசரி கொழுவியைத் தவிர மற்றாக்கள் ஏன் அனானியா வாறியள்?
அநாநியள் குப்பன் சுப்பன் எண்டு ஏதாவது ஒரு பெயருடன் வந்தால் எனக்கு மேற்கோள் காட்டி கதைக்க சுகமாக எல்லோ இருக்கும் .கவனத்தில் எடுங்கோ..
Anonymous said...

இது அனானியாக வந்த குப்பனின் கேள்வி:-))
Anonymous said...
ரெண்டாவது பின்னூட்டம் போட்ட ஆய்வாளர் அனானிதான் நான்.
அதில ஒரு சின்னப்பிழை நடந்துபோச்சு.
மூண்டாம் கட்ட ஈழப்போர் எண்டு வந்திருக்க வேணும். நாலாம் கட்டம் எண்டு வந்திட்டுது.
திரு்ததி வாசியுங்கோ.
அதுசரி கொழுவியைத் தவிர மற்றாக்கள் ஏன் அனானியா வாறியள்?
நீர் எதற்கு அனானியாக வாரீரோ அதற்காகத்தான். கேல்வி கேட்கவேண்டும் ஆனால் நண்பர்களின் முகத்தை முறிக்ககூடாது அதற்காத்தான்:-))
அனானியா வாறாக்களின்ர கருத்தை நான் ஏற்கமாட்டன்.
பின் வாங்கிலிருந்து
வற்றாப்பளையில பொங்கிறதை விட காவடி எடுத்தால் ஈழத்தவர் பெரும் சைவப் பழங்கள் எண்டதை நிருபிக்கலாம். தலைவர் தயைகூர்ந்து ஆராயவும்
Anonym
//சிங்களவனுக்கு மரண அடி குடுத்ததும் 2001 ஏப்ரல் 24.//
அப்ப இனி சித்திரை வரும்வரை இந்த ஆய்வுக்காரர்களை அனுபவித்துதான் ஆக வேண்டுமா?
ஆனால் நீங்கள் சொல்லும் கணக்கு நல்ல ஒற்றுமைதான்.
கொழுவி
//வற்றாப்பளையில 7ந் திகதி பொங்கல். 8ம் திகதி அடி. //
9ம் திகதி விருவிழாவா?:)
வெற்றியின் ஆய்வு நான் பார்த்திருக்கவில்லை.ஆனால் பலர் இதே கருத்தைத்தான் கூறியிருந்தார்கள்.
//வற்றாப்பளையில பொங்கிறதை விட காவடி எடுத்தால் ஈழத்தவர் பெரும் சைவப் பழங்கள் எண்டதை நிருபிக்கலாம்.//
நாங்கள் தூக்கு காவடிதான் எடுப்போம்:)
Post a Comment