Saturday, April 28, 2007

இலங்கை வெல்லட்டும்.


இலங்கையை விளையாட்டில் ஆதரிப்பதால் ஈழத்திற்கு என்ன குறைச்சல்?


ஆஸ்திரேலியாக்காரர்களின் நக்கல் நையாண்டிக்கு ஆசிய இனத்தவரின் சார்பில் இலங்கை வெல்லவேண்டும்.


முரளியின் ஆஸ்திரேலியா கோபம் இன்னும் வெளிப்படவேண்டும்.தமிழனை நக்கலடிக்க யார் இந்த அவுஸ்திரேலியர்கள்?
பல ஆய்வாளர்களும் தமிழர்கள் இலங்கையை ஆதரிக்ககூடாது என்று எழுதுகிறார்கள்.


யார் இந்த இலங்கையர்கள்?

இவர்கள் வென்றாலோ அல்லது தோற்றாலோ ஈழத்திற்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.எந்த வெளிநாடும் அதனால் எமக்கு ஒன்றும் பண்ணப்போவதுமில்லை.பின் ஏன் இவர்களைப் பார்த்து மிரளுகிறார்கள்?தேசியத்தை நம்புவோர் தேசியத்தை மட்டும் நம்புங்கள்.


ஆஸ்திரேலியாவின் கொழுப்பை இலங்கை கரைக்கட்டும்.


இலங்கையின் கொழுப்பை ஈழம் கரைக்கும்.

15 comments:

Anonymous said...

ஞானசூனியமே! உன் ஆத்தாவை நெனைச்சு வேதனைப்படுகிறேன்.

Anonymous said...

இலங்கைத் தமிழனுக்கு அவுஸ்ரேலியா செய்யும் கொடுமையா அல்லது இலங்கை அரசு செய்யும் தீமை எது சார் அதிகம்? சிங்களவன் அடிச்சுமா உங்களுக்கு புத்தி வரயில்ல.

தமிழ்பித்தன் said...

இந்த அறிவு ஜீவிகளை எல்லாம் விட்டுட்டு நாங்கள் ஞானசூனியங்கள் எல்லாம் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்போம்
இவங்கள் எல்லாம் யானை தடவிய குருடர்கள் போல

கொழுவி said...

//நாங்கள் ஞானசூனியங்கள் எல்லாம் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்போம் //

அப்பச் சரி.. தாராளமா குடுங்கோ.. ஆனா சகுனம் பிழைத்த மாதிரி கிடக்கு. பிளந்து தள்ளுறாங்கள்

Anonymous said...

மகேல தமக்கு கிடைகிற காசில அரைவாசியை பாதுகாப்பு நிதிகு கொடுகிராராம்

இதற்கான ஒரு அடையாள எதிர்ப்பாகவாவது புறக்கணிக்க கூடாதா

theevu said...

//ஞானசூனியமே! உன் ஆத்தாவை நெனைச்சு வேதனைப்படுகிறேன். //

அதென்னங்க ஆ ஊ என்றால் உடனே ஆத்தாவை கூப்பிட்டுவிடுகிறீர்களே..நல்ல கல் தோன்றி முன் தோன்றா மூத்த கலாச்சாரம்.

களத்துமேடு said...

இரண்டாவது தடவையாக வெற்றிக் கிண்ணத்தை இலங்கை முத்தமிடும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
14 ஓவரில் 83/1 எனும் நிலையில் இருக்கும் இலங்கை 38 ஓவருக்குள் 282 ஓட்டத்தை எவ்வாறு தாண்டும்?

Anonymous said...

"அதென்னங்க ஆ ஊ என்றால் உடனே ஆத்தாவை கூப்பிட்டுவிடுகிறீர்களே..நல்ல கல் தோன்றி முன் தோன்றா மூத்த கலாச்சாரம்."

ஏனென்டா , ஆத்தாட்ட கேட்டாத்தான் தாத்தாகே நம அறியலாம்?

செயபால் said...

//தமிழனை நக்கலடிக்க யார் இந்த அவுஸ்திரேலியர்கள்?//

அட அது தானே?
தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளாமல், ஈழத் தமிழரைக் கூண்டோடு அழிக்காமல், சும்மா நக்கலடிக்க ஆர் இவர்கள். பொத்துக் கொண்டு கோவம் வரேல்லை ஆச்திரேலியர்கள் மீது?

வாழ்க தீவு. தொடருங்கள் உங்கள் பணியை.

Pot"tea" kadai said...

//ஆஸ்திரேலியாவின் கொழுப்பை இலங்கை கரைக்கட்டும்.//

தமாசு தமாசு...

நல்லா வெளையாடறவனுக்கு கொழுப்பு கம்மி தான் அப்பு...

எல்லா லங்கன்ஸ் வாயிலயும் இல்ல தூக்கி வெச்சிட்டானுங்க அவுஸ்திரேலியன்ஸ்...

அட கொழுப்பு தாம்பா...

பாண்டிங்கை ஒரு மணி நேரம் காக்க வைத்து சைக் அவுட் ஆக்க முயன்ற ஜெயவர்தனேயையும் அவரது அணியையும் நாக் அவுட் செய்த அவுசுதிரேலியர்களுக்கு வ்வாழ்த்தோ வாழ்த்துக்கள்...

theevu said...

இலங்கை ஏன் வென்றிருக்கவேண்டும் ? எனஇறு கூடிய விரைவில் ஒரு பதிவு இடலாமென்று இருக்கிறேன்.

தங்களது கருத்தை தெரிவித்த நண்பர்கள் பொட்டிகடை களத்துமேடு தமிழ்ப்பித்தன் மற்றும் யாரோக்கள், கொழுவி, செயபால் ஆகியோருக்கு நன்றி.

-ஞானசூனியம் தீவு-

கொழுவி said...

சிறிலங்கா அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் வேட்கையை, சிறிலங்கா என்பது எமக்குரிய அரசன்று என்பதை, சிறிலங்கா என்பது ஒரு நாடில்லை என்பதை, நாம் அதை எமது அரசாக ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவே வேண்டும்.
துடுப்பாட்டத்திலும் அதைச் செய்தே ஆகவேண்டும். இது முக்கியமான சந்தர்ப்பம்.

அவுஸ்திரேலியா வெல்வதால் ஈழத்தவருக்கு எதுவுமில்லை. ஆனால் இலங்கை வெல்வதாலும் - இலங்கை வெல்ல உற்சாகமளிப்பதாலும் - வென்றால் அதைக் கொண்டாடுவதாலும் ஈழத்தவருக்குப் பாதகமிருக்கிறது.

இலங்கையில் யுத்தமொன்று நடப்பதையும் இனப்பிரச்சினையொன்று இருப்பதையும் மறந்து குதூகலிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சிங்களவர்களுக்குக் கொடுக்கக்கூடாதேன்பது முக்கியம்.
விட்டால், கொழும்பில் இறுதிப்போட்டியைச் சரிவரப் பார்க்கமுடியாமல் குழப்பிய புலிகளின் வான்படை மீதும் குற்றம் சொல்வீர்கள் போலுள்ளதே?
எண்ணெக் குதம் எரிகிறதோ இல்லையோ, ஒருமணிநேரமேனும் சிங்களவரை எரிச்சலையடைச் செய்ததுதான் வெற்றி. அதுவும் கிரிக்கெட் பார்க்க விடாமல் செய்ததுதான் வெற்றி. இதில்தான் யுத்தமொன்று நடப்பதே பலருக்கு ஞாபகம் வருகிறது.

1996 வெற்றி எப்படி அரசியலுக்குப் பயன்பட்டது?, இப்போதைய போட்டியும் இலங்கை அரசியலில் எப்படி பயன்படுத்தப்பட இருந்தது?, மகிந்த ராஜபக்ஷ ஏன் நேரடியாக போட்டியைப் பார்க்கப் போனார்?, இலங்கை வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்று சிந்தித்தால் புரியும்.
வாகரை, சம்பூர் வெற்றிகளுக்கு எவ்விதத்திலும் குறையாத ஒரு வெற்றியாகவே இவ்வெற்றியும் கொண்டாடப்படும். ஏன் இந்த ஒப்புவுமை என்றால், எப்படி சம்பூர் - வாகரை வெற்றிகள் மகிந்த அரசு தன்னைப் பாதுகாக்கவும் அரசியல் ரீதியில் தன்னைப் பலப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டனவோ, அதே நோக்கில்தான் இந்தத் துடுப்பாட்ட வெற்றியும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மகிந்த வேட்டியோடு பாட் கட்டிக்கொண்டு கையில் மட்டையோடு மைதானத்தில் நின்று படமெடுத்துப் போட்டிருப்பார்.

இலங்கை அணிக்குத் தமிழர்கள் ஆதரவளிப்பதும், அவர்கள் வென்றிருந்தால் தமிழர்களும் அவ்வெற்றியைக் கொண்டாடுவதும் உலகில் சிறிலங்கா அரசு இப்போது செய்துவரும் பரப்புரைக்கு வலுச்சேர்ப்பவை என்பதை உங்களைப் போன்றோர் உணரவில்லையா?
"அடடா! என்னமாதிரி ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்போல ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள்? சில புலிப்பயங்கரவாதிகள்தாம் இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்" என்ற கணிப்புத்தான் மற்றோரிடத்தில் ஏற்படும்.

உங்களோடு பழகும் வேற்றுநாட்டு நண்பர்களின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். அவர்கள் எப்படி இதைக் கருதக்கூடும்.


மாறாக, சிறிலங்கா அணிக்கான தமிழர்களின் எதிர்ப்பு என்பது மற்றோரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு செயலும்கூட. இலங்கையில் நடப்பது சிலரின் தனிப்பட்ட பிரச்சினையில்லை; இனப்பிரச்சினைதான் என்ற புரிதலையாவது அது மற்றோரிடத்தில் ஏற்படுத்தும். ஏன் சிறிலங்கனாக இருந்தும் இவர்கள் தமது நாட்டு அணியை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியும் அதற்கான பதிலைத் தேடும் ஆர்வமும் அவர்களிடத்தில் வரும்போது அது எமது தரப்புக்குரிய பரப்புரைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் இணையச் செய்தித்தளங்கள் அவ்வப்போது உருப்படியான கட்டுரைகளையும் வெளியிடுவார்கள்.
துடுப்பாட்டம் தொடர்பில் வெளிவந்த மிகமுக்கியமான கட்டுரை இது.
இதை ஏற்கனவே வாசித்திருப்பீர்கள்.
ஆனால் மீண்டும் வாசித்துத் தெளிவுபெறும்படி கேட்டு அவ்விணைப்பு இங்கே.

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

theevu said...

நன்றி கொழுவி.

ஒருவரது கருத்துக்கு எப்படி எதிர்கருத்து மிகவும் நாகரீகமான முறையில் எழுதுவதென்பது உங்கள் எழுத்து நடையை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

ராஜபக்ஸய அம்மானை பொடியள் மூச்சுகூட விட அவகாசம் கொடுக்கிறாங்கள் இல்லை என்பது அந்தாளே புலம்பியது உலகம் தெரிந்தது.

அவர் துடுப்போடு போஸ் கொடுத்தாலென்ன ஜெயசூர்யாவுக்கு முத்திரை வெளியிட்டாலென்ன சிங்களவனுக்கு தேசிய எழுச்சி வந்துதால்தானென்ன..

யாழ்ப்பாணத்தை பிடித்து சந்திரிகாவிற்கு வெற்றி ஓலை கொடுத்து அதில் கொக்கரித்த சிங்கள தேசியத்திற்கு பின் என்னவாயிற்று என்பது வரலாறு.அதை விட புதிதாக மகிந்தவால் இனி ஒரு show காட்டமுடியாது.
நோகாமல், வருந்தாது இருப்பவனுக்கு தேசிய உணர்ச்சி வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.அவன் கடைசிவரை சம்பளம் வாங்கும் படைவீரனாகவே இருப்பான்.


ராஜபக்ஸவை புலிகள் தேர்தலில் வெல்லப்பண்ணியது அப்போ பிழையா?

அது ஒரு தந்திரம்.

அது பொல் இலங்கை இப்போ வென்றிருந்தால் இன்னும் சில காட்சிகள் அரங்கேறியிருக்கும்.

மகேலே பாதுகாப்பு நிதிக்கு பணம் கொடுத்திருப்பான்.
புத்தபிக்குகள் இன்னும் சற்று கூடுதலாக சிங்கள தேசிய பிரீத் ஓதி இருப்பார்கள்.

எமது புலம் பெயர் மக்களுக்கு அப்போதாவது சற்று சூடு சொரணை சற்று ஞாபகப்படுத்தப்பட்டிருக்கும்.எந்த ரீவியாவது பத்திரிகையாவது இலங்கை வென்றது என ஒரு கட்டுரை அல்லது பேட்டி போடும்போது அல்லது கொழும்புத்திருவிழா பற்றிய செய்தி வெளியிடும்போது எமது பிரச்சனையையும் மையப்படுத்தி ஒரு செய்தி போட்டிருப்பார்கள் .

எல்லாம் போச்.

Anonymous said...

"சிறிலங்கா என்பது எமக்குரிய அரசன்று என்பதை, சிறிலங்கா என்பது ஒரு நாடில்லை"

கொலுவி அப்ப எதுக்கு சிங்கள அரசுட பொருட்கள பாவிக்குறீங்க?

இத்தனைக்கும் தமிழரை பிரதினிதுவம் படுத்துற பாராளுமண்ற உறுப்பினர்கள் சிங்கள பாராளுமண்றத்திலதான் அங்கம் வகிக்குறாங்க

தனிநாட்ட பிரகணப்படுத்திவிட்டு போரிடலாமே

ஹயோ ஹயோ வடிவேல் சொல்லுரதுபோல சின்னப்பிள்ளதனமா இருக்குங்க

Anonymous said...

THEEVU READ IT: YOU DID NOT MAKE ANY MISTAKE. YOUR MOTHER AND SCHOOL MADE MISTAKE."Six youths were killed in a firefight with the Sri Lanka Navy (SLN) Sunday morning at 10:00 a.m. during a cordon and search operation in Velani in the islets of Jaffna, sources in Jaffna said. The incident occured close to the Mudippillaiyar Temple in Velanai west."