வெறிநாய் க்கு முடிவு கட்ட தெருநாய்களை அடித்துக் கொல்வது
பூனைப்பதிவு பன்றிப்பதிவு போல இது ஒரு நாய்ப்பதிவு.இதற்குள் யாரும் உள் குத்து தேடாதீர்கள்.
வெறிநாய் கடியில் இருந்து தப்பிக்க தெரு நாய்களை அடித்துக் கொல்வது சரியா, தவறா என்று கேட்டதற்கு Ôசரிதான்Õ என்று 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தவறு என்பது 20 சதவீதம் பேரின் கருத்து. நாய்க்கடியில் இருந்து தப்ப, தெரு நாய்களை ஒழிப்பது சரியா, தவறா என்று தெரியவில்லை என்று 7 சதவீதம் பேர் கூறினர். ஒரு சதவீதத்தினர் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.
நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுவைக்காரர்கள் போலிருக்கிறது. அங்கே தெருநாய்களை அடித்துக் கொல்ல 85 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மாநில சராசரியைவிட 13 சதவீதம் அதிகம். கோவையிலும் இதை 84 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். இப்படிச் சொன்னவர்கள் திருச்சி (78%), நெல்லை (75%), நாகர்கோவில்(72%), சென்னை, மதுரையில் தலா 71 சதவீதம்.
சேலத்தில் மிகக் குறைவாக 47 சதவீதத்தினர் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அங்கே தெரு நாய்களைக் கொல்வது தவறு என்போர் 40 சதவீதம். இது மாநில சராசரியைவிட 20 சதவீதம் அதிகம். தவறு என்பவர்கள் புதுச்சேரியில் மிகக் குறைவு. 8 சதவீதம் மட்டுமே. மதுரை (27%), நாகர்கோவில் (26%), நெல்லை (23%), திருச்சி (17%), சென்னையில் (16%), வேலூர் (14%).
வெறிநாய் கடியைத் தவிர்க்க தெருநாய்களைக் கொல்லலாமா என்று தெரியவில்லை என்று அதிகம்பேர் சொன்னது வேலூரில். 24 சதவீதத்தினர் இதைத் தெரிவித்தனர். அடுத்து சேலத்தில் 13 சதவீதம் பேர் இதைக் கூறினர். இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பாதவர்கள் சென்னையில்தான் அதிகம். 9 சதவீதம்.
தெருநாய்களைக் கொல்வது சரி என்றவர்களில் ஆண்கள் 71 சதவீதமும், பெண்கள் 72 சதவீதமும் உள்ளனர். கொல்வது தவறு என பெண்களைவிட (18%), ஆண்கள் (22%) அதிகம் பேர் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/daily/2007/may/16/jannal.asp
2 comments:
உயிருக்கு மரியாதையே இல்லப்பா:-(
Wow! :)
Post a Comment