Friday, July 13, 2007

ரமணி என்கிற பெயரிலிக்கு

வணக்கம்.

தோண்ட தோண்ட புதையல் கிடைப்பது உங்களுக்கு மட்டுமே சாத்தியம். கூகிளாண்டவனே... முத்துகுளிக்க உங்களிடம் ட்ரெயினிங் எடுக்கவேண்டும்.

வாழ்த்துக்கள்.

முதன் முதலில் ஆதாம் ஏவாள் அப்பிள் என்று ஆரம்பித்து சண் ரீவி வரை பரவிய இந்த வருத்தம்(நோய்) இணையம் வரை பாய்வது ஒன்றும் புதிதான ஒரு விடயமல்ல.

இப்படி ஒரு கேள்விக்கணையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு போகும் திசை
மிக ஆர்வமூட்டகூடியதாகவிருக்கிறது.


யார் யார் முதல் முதல் என்பதை விட தமிழிணைய விடயங்களை அறிந்த ஒருவர் மூலம் சில வரலாற்று தகவல கிடைப்பது மகிழ்ச்சியே.

நிறைய புதிய விடயங்கள் அறிந்துகொளளக்கூடியதாகவிருக்கிறது.

இணையத்ததில் தோண்ட தோண்ட நோண்ட கத்தி கடப்பாரை ரமணிக்கு வழங்குபவர்களுக்கு (நான் உட்பட) நெஞ்சார நன்றிகள்.

printout எடுத்து வாசிக்க கதை தொடர்கதையாகி இராமாயணமாகி அனுமர் வாலாகி நீண்டுகொண்டே போகிறது.

கருத்து சொல்லும் மூத்த பதிவர்கள் ஒருவரையும் கூட காணமுடியவில்லை.

கருத்து சொன்னால் முதல் முதல் பின்னூட்டமிட்ட மூத்த பதிவர் என்ற பெயர் கூட கிடைக்கலாம்.

ரமணியின் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழலின் பின்னூட்டம் 100 ஐ தாண்டி பல விடயங்கள் வெளிக்க உதவட்டும்.

பி.கு மொட்டை பாஸ் கவனிக்க..இது வரலாற்றுப் பதிவு.

அன்புடன்
தீவான்.

7 comments:

-/பெயரிலி. said...

அண்ணை தீவார்
அடியைக் கிடியை வாங்கித் தராதயும். நான் ஓரமா தியேட்டர் படங்கு ஓட்டைக்குள்ளால அப்பப்ப மறைபடாமலிருக்கேக்க காட்சியக் கண்ட ஆள்மட்டுமே. உள்ளுக்குள்ளை படத்தில நடிச்சவை எத்தனை பேரோ சத்தம் போடாமலிருக்கினம். அவையள் பேசுறதுதான் முறையும் முழுதுமாயிருக்கமுடியும். வாழைப்பூவடகத்துக்கு இலுப்பைப்பூச்சக்கரை பரவாயில்லையெண்டுதான் நான் கரண்ட் கம்பியெண்டு தெரிஞ்சும் காலைவச்சனான். "தமிழிணைய விடயங்களை அறிந்த ஒருவர் மூலம்" எண்டுறது மகாவில்லங்கமான சொற்றொடரும் சரியில்லாததும். தோண்டினதெல்லாம் கூகுலாண்டவர், வெப்பார்சீவம்மா குடுத்த வரம்; ஆக, உத்தேசமாய்த் தேடவேண்டியதெங்கை எண்டுமட்டும் ஒளிச்சுப்பாத்ததை வச்சு ஒப்பேத்திக்கொண்டிருக்கிறன். ஆரும் பழசு என்ரை கழுத்த முறிக்கமுன்னால், உந்த "தமிழிணைய விடயங்களை அறிந்த ஒருவர் மூலம்" எண்டதைக் கழட்டிப்போடும் அப்பன். உது பச்சைப்பிழையான தகவல்.... அதை ஆதாரத்துடன்தான் அடிச்சுச்சொல்லுறன்.
பிகு.: தீவான் எண்டுறது உந்தமாதிரி வாலிலை கட்டி மற்றவன்ரை ஊரெல்லாம் நெருப்பு வானம் முட்டப் பத்த வைக்கிற பதிவுபோடுறதால வந்த காரணப்பெயரோணை? இல்லை சும்மா கேட்டன் ;-)

theevu said...

//தீவான் எண்டுறது உந்தமாதிரி வாலிலை கட்டி மற்றவன்ரை ஊரெல்லாம் நெருப்பு வானம் முட்டப் பத்த வைக்கிற பதிவுபோடுறதால வந்த காரணப்பெயரோணை? //

அப்ப என்னை கொழுவியெண்டுறியளோ:)

கொழுவி said...

may I come in..?

Anonymous said...

இப்ப july எல்லோ? தீவு விடாதீங்கோ. வேண்டுமெண்டால், வாறவருசம் பாப்பம்

theevu said...

//may I come in..? //
கதவை திறந்துகொண்டு வரவா எண்டால் என்ன மாதிரி?
எங்கை கன காலமாய் காணவில்லை? தொழில் மந்தம் போலிருக்கிறது.
:)

//இப்ப july எல்லோ? தீவு விடாதீங்கோ. வேண்டுமெண்டால், வாறவருசம் பாப்பம் //

அனானி சத்தியமாய் இந்த வரிகள் விளங்கவில்லை.எந்த செக்சன் பின்னூட்டம் இது?

Anonymous said...

may எப்படியப்பு இனி இந்தவருசம் மே ஐ கம் இன் எண்டு அடக்க ஒடுக்கமாக் கேட்டாலும் வரும். அதுதான் விடவேணாம். வேணுமெண்டால் வாறவருசம் வாரச்சொல்லுங்கோ எண்டனான்

Anonymous said...

பெயரிலி ரமணீதரனை சட்னிவடை போட்டு வெளுத்து கட்டி இருக்கான். போய் படிச்சு பாருங்கோ தீவு.