Monday, October 06, 2008

பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாரு சாரே!!தந்தி அடிப்போம் வாரீகளா?புதிதாக ஒருவருக்கு எழுத்துலக சூப்பர் ஸ்டார் பதவி லக்கியால்
வழங்கப்பட்டுள்ளது. சுஜாதாவிற்கு இருந்தபோதும் இறந்தபோதும் கிடைத்த கெளரவம் இன்னொரு எழுத்தாளருக்கு நான் வாழும் நூற்றாண்டில் கிடைக்குமா என்பது சந்தேகமே..

லக்கி சாருவிற்கு வழங்கிய விருது பற்றிய தனது கருத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.

நிற்க

இனி முன்கதைச்சுருக்கம்


""லக்கிலுக்""
//

//10:44 AM me: வணக்கம் சார் :-)
10:46 AM Charu: yes tell me
me: இணையத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் அவ்வப்பொது சந்திக்கிறார்கள்.
இப்போது ஒவ்வொரு சந்திப்பிலும் நீங்கள் தான் ஹாட் டாபிக் :-)
நாளை கூட ஒரு சந்திப்பு சென்னையில் நடக்கிறது.
ஓய்வாக இருந்தால் வாருங்கள்!
10:47 AM http://muralikkannan.blogspot.com/2008/09/4.html - இந்த சுட்டியில் விவரங்கள் இருக்கிறது!//

அன்புடன்
லக்கிலுக்
//
இதற்கு நமது எழுத்தாள சூப்பர் ஸ்டார் என்ன கொல்லுறாரெண்டால்

// ஐயா, எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா, நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா//எனவே பதிவுலக மக்களே அடுத்த பதிவர் சந்திப்புக்கு அண்ணனை கட்டாயம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆட்டோவில் சென்று நேரில் அழையுங்கள்.(வெத்தலை பாக்கு தாம்பாளம் வாழைப்பழம் உபயம் ஸ்பான்ஸர் தமிழ்மணம்)

முடியாதவர்கள் கலைஞரின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமான தந்தியை கையிலெடுங்கள்

தந்திகள் சாருவை நோக்கி பறக்கட்டும்

தந்திகள் அழைப்பிதழ் பாணியில் அமைந்தால் மிகவும் சிறப்பு

தந்திகள் அனுப்பமுடியாதவர்கள் வழமைபோல வைகோவின் சிறப்பு ஆயுதமான கடிதம் எழுதலை கையாளலாம்.

விருப்பமுள்ளவர்கள் தண்ணீர் அடித்து உண்ணாவிரதமும் இருக்கலாம்.


பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாருசாரே!!


லேபிள்:-தண்ணீர் காட்டல் தந்தி அடித்தல் எழுத்தாளன் ஞானி வாழ்க

8 comments:

matharasi said...

//தந்தி அடிப்போம் வாரிகளா//

பாரின் தண்ணி இருக்கு அடிப்போம் வாரிகளா எண்டு கேளுங்கோ.ஓடி வந்துட்டு போறார்..அதோடை இன்னொன்றையும் கொடுத்தால் கட்டாயம் சிரிச்சண்டு வருவார்

சயந்தன் said...

வெத்தலை பாக்கு தாம்பாளம் வாழைப்பழம் //

அண்ணை இதெல்லாம் தேவைப்படாது அவருக்கு :)

அத விடுங்க நமக்கெதுக்கு?
ஆமா உங்க வலைப்பதிவில 2 லட்சம் hits வந்துவிட்டதா?
வந்தா சொல்லுங்க
5 நட்சத்திர விடுதியில் தடல்புடலா கொண்டாடிடலாம். அமர்க்களமா..

அதுக்கு அவரை கூப்பிடுங்க.. கண்டிப்பா வருவார். அத விட்டுட்டு காந்தி செலக்கு பக்கத்திலயா...

செந்தழல் ரவி said...

வாருங்கள் தீவு.

ரொம்ப நாளாக ஆளை கானோம் ?

போருக்கு போயிருந்தீரா ?

நாமக்கல் சிபி said...

எனக்கென்னவோ நாம எல்லாரும் சேர்ந்து ஒருத்தரை பெரிய ஆளாக்கிட்டு இருக்கிறோம்னு தோணுது!

வால்பையன் said...

வெறும் வாய்க்கு அவல் கிடச்ச மாதிரி
வெறும் பதிவுக்கு சாரு கிடச்சிட்டாரா

கலக்குங்க

Anonymous said...

ஞானி மட்டும் எப்படி பந்தா பண்ணாமல் வந்தாரு?

பொடியன்-|-SanJai said...

:))

theevu said...

//செந்தழல் ரவி
வாருங்கள் தீவு.

ரொம்ப நாளாக ஆளை கானோம் ?

போருக்கு போயிருந்தீரா ?//


போருக்கு போயிருந்தீரா ? :)
முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில் தெரியும் என்பார்கள்.அதுக்கெல்லாம் கொஞ்சம் தைரியம் வேண்டும்.நமக்கு சரிப்பட்டு வராது.