Monday, April 24, 2006

விசுவரூபம்

அதிமுகவில் விசு.. No Comments.






போற போக்கில் எல்லாருமாக சேர்ந்து திமுகவை வெல்லப்பண்ணிவிடுவார்கள் போல் இருக்கிறது.

Read More...

தமிழ்நாட்டில் செம்படை


தமிழ்நாட்டில் எண்ணைக்கு பஞ்சமா?

ஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..



இதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலா?இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா?

பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)

Read More...

Friday, April 21, 2006

அதிமுக வெல்லும் தீவாரின் கருத்துக் கணிப்பு


லயோலா கருத்துக்கணிப்பு உளவுப்படை கருத்துக்கணிப்பு என வெளியாகும்போது தீவாரின் கருத்துக்கணிப்பு இது.

தமிழகத்தில் எந்த அனுதாப அலையும் இம்முறை வீசாவிட்டாலும் பல கூட்டணிகளை எதிர்க்கும் நோஞ்சான் திமுக என ஒரு அனுதாப அலையை உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள் போலிருக்கிறது.

எனினும்

கருணாநிதி டால்மியாபுரத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தென்ன இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாயிருந்தென்ன.. எம்ஜிஆர் தோஷம் இருக்கும்வரை இரட்டை இலைக்குத்தான் வெற்றி!

Read More...

Friday, April 07, 2006

நான் இனி என்ன செய்ய?



தம்பி திரைப்படத்தில் வரும் இந்த வரி போல்
தலைவர் பிரபாகரன் அவர்களும் சர்வதேசத்தை நோக்கி ஒருநாள் நான் இனி என்ன செய்ய என கேட்கும் நிலை உருவாகும் என்பது போல் தம்பி பட இயக்குனர் சீமான் விகடன் பேட்டியில் கூறியிருந்தார்.

சிங்களவர் தமிழர்களை பேயர்களாக நினைத்து தமது கட்டாக்காலித்தனத்தை அவிட்டு விட்டுள்ளனர்.புலிகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வந்து இழந்தது கூட.

திருமலையில் விக்னேஸ்வரன் அரசதுணைப்படைகளால் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் விடுதலைப்போராளிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மேலும் உச்சக்கட்டமாக திருமலை வன்முறையில், புலிகள் பலம் வாய்ந்து இருந்தும், தமிழர் பிரதேசத்திலேயே தமிழர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

திருமலை வன்முறை படங்கள் யாழிணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.



சர்வதேச அரசியல் இனி காணும். புலிகளே மக்களை காப்பாறறுங்கள்.

Read More...