Wednesday, July 12, 2006

அவர் சொன்னார் இவர் சொன்னார்

பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொருமுறையும் நன்றி கூறி பின்னூட்டவரிசையில் முதலிடம் பெற்று அதற்கு என பிரத்தியேகமாக தர்ம அடி வாங்க விருப்பமில்லை. டோன்டு சார் போல உதவி செய்ய எனக்கு மகரகுழைநாதன் துணையுமில்லை.எனவே பின்னூட்டங்களுக்கான மறுமொழித் தனிப்பதிவு..

//இரஜனி ராம்கி குதித்த குதியைப் பார்த்தனீங்களா? பிரபாகரனையெல்லாம் தேவையில்லாமல் இழுத்துப் பிறகு அந்தப் பதிவையே சந்தடியில்லாமல் தூக்கிவிட்டார்//

யாரோ சொன்னாங்க..

நல்லவேளை நான் பார்க்கவில்லை இல்லையெனில் அதற்கு என நான் புதிதாக பதிவு போடவேண்டி வந்திருக்கும்.


செந்தழல் ரவி ...

//நான்கூட ஒரு பதிவை ரஜினி ராம்கி சொல்லி தூக்கினேன்..அதாவத்ய் ரஜினி - சிவாஜி போட்டோக்கள்//

இணையப் பலம் இரஜனி இரசிகர்களுக்கு இன்னமும் புரியாதது வேடிக்கையே..ஒரு செந்தழல் இரவியை தூக்கச்சொன்னால் இன்னொரு வன்தழல் இணையத்தில் போடும் என்பது தெரியாததா? அல்லது
இணையத்தில் சிவாஜி போட்டோக்கள் அதனுடன் வராமல் நின்றுவிட்டதா?.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகை .ஸ்பெயினில் உள்ள ஈழத்தமிழர்கள்தான் இந்தப் படங்களை இரகசியமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என..செய்தி போட்டிருந்தது .படத்தின் தரத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது யாரோ யூனிட்டிலுள்ளவர்களே படத்தை எடுத்ததுபோலல்லவா இருக்கிறது..





G.Ragavan said...
//நடிகர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என்று நினைக்காத அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.//

புலம் பெயர் ஈழத்தமிழர்கள் திரைக்கலைஞர்களை காப்பாற்றும்போது அவர்களுக்காக இவர்கள் அணில் போல ஒரு சிறு குரல் கொடுத்தாலே இந்திய மட்டத்தில் அது சற்று கவனிக்கப்படும். பிரச்சனை விரைவில் தீர பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட இது போன்ற சில நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது.

நாகை சிவா said...

//நதி நீர் இணைப்பு திட்டம் தொடக்கப்பட்டு அதற்கு அவர் பணம் தராமல் இருந்தால், நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். அதை வரை அமைதி காணவும்//

ஆனானப்பட்ட தங்க கரண்டியில் உணவுண்ட பாகவதரிலிருந்து மாடியில் காரோடிய சந்திரபாபு வரையும் கடைசிக்காலத்தில் எப்படியிருந்தார்கள் என்பது வரலாறு சொல்லும்.எது எப்போ எப்படி நடக்கும் என்பதை யாரும் தீர்மானிக்கமுடியாது.நல்லது செய்வதை ஒத்திபோடக்கூடாது.தீயவற்றை ஒத்தி வைக்கலாம்.

எப்போ நதி நீர் இணைத்து எப்போ உதவி செய்து..

காலமாறறம்,, கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லச்செய்யும் .அதே காலம்தான் தாலியை தனது மகளுக்கு எடுத்து கொடுங்கள் என்று சொல்லவும் செய்யும்.உஙகளுக்கு தெரியாததா?

//சூப்ரிம் கோர்ட் சொல்லியே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. பாரதிராஜா, ரஜினி சொல்லி தண்ணீர் தர போகின்றார்களா?//

இதற்கு பதில் பகவத்கீதைதான் . கடமையை செய்....

சுப்ரீம்கோர்ட்டைவிட பலமாக ஒரு மாநில அரசு இருக்குமானால் அதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.


//Thamil said...

ரஜனிரசிகர்களுக்கு உண்மையில் மூளை இருந்தால் இனம் கண்டு கொள்வார்கள்.//

இரஜினி இரசிகர்கள் தமது தலைவரை விட செயலாளிகள்..அதற்கு சுனாமி செயற்பாடுகள் ஒரு உதாரணம்.அதை நாம் மறந்துவிடலாகாது.

புதுமை விரும்பி said...

//தீவு மன்னியுங்கள். தீவிரமாய் போய்க்கொண்டிருக்கும் வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து கலாய்ப்பதற்கு. செய்தி இதோ: இப்பொழுது முதலில் ஆடிய மகேந்திரன் தலைமையிலான "ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணி முதல் இன்னிங்க்ஸ்ல் 110 ரன்கள் எடுத்து declare செய்திருக்கின்றனர். அடுத்ததாக வந்த பாலமுருகன் தலைமையிலான "இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?" அணியினர் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 18 ரன்களில் captain பாலமுருகன் 11 ம் vice captain தீவு 7ம் அடித்த நிலையில் இருக்கின்றனர்.//

வாங்க சார் ..நானே எப்படா அவுட்டாவேன் என தவம் இருக்கையில் நீங்கள் வேறு..:)

பி.கு
நேரம் எடுத்து பின்னூட்டம் வழங்கிய அத்தனை சக பதிவர்களுக்கும் நன்றி கூறி உங்கள் பதிவுகளும் என்னை எழுதத் தூண்டும் பட்சத்தில் நேரமில்லையே என்று போகாமல் பின்னூட்டம் இடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.நன்றி.

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா? என்ற பதிவின் பின்னூட்டங்கள் இவை

Read More...

Tuesday, July 11, 2006

இலங்கை தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?

பதிவர் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிவு ஒன்று போட்டுள்ளார் .அதற்கு எனது மனப்பதிவு இது.






தமிழ் மரபணுக்களில் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை அதே அணுக்களில் வந்த தொப்புள்கொடிகள்தான் சொல்லவேண்டும்.

கமல் வெறுமனே முன்னர் நரசிம்மராவுடன் அரசியல் கதைத்ததை விட சுகாசினி விடயத்தில் வாயைத்திறந்து தனது கருத்தையாவது சொல்லியிருக்கலாம்.பேசாமலிருப்பது நடுத்தரவர்க்கத்திற்கு வேணுமானால் இராஜதந்திரமோ அல்லது ஆட்டோ தடுப்பாகவோ இருக்கலாம்.ஆனால் சகல தடுப்புச் சுவர்களையும் கொண்ட மனிதாபித உணர்வுகொண்ட இந்த பிரபலங்கள், மௌனிப்பதுதான் வேடிக்கை இவர்கள் வாயைத்திறக்காமலிருப்பதுதான் பிரச்சனையை பெரிதாக்குகிறது.

நெய்வேலிப்பிரச்சனை கன்னடம் சார் பிரச்சனை என்பதற்காக ரஜனி மௌனமானார் அதனால் பாரதிராஜா போக்கில் உடன்படவில்லை என்று யாவருக்கும் தெரியும் .

நதியிணைப்பு கோடிருபாய் எல்லாம் பழங்கதையாயிற்று.

இரஜனி இரசிகர்கள் நல்லவர்கள் வல்லவாகள் என்பதில் எனக்கும் உடன்பாடே நானும் ஒரு இரஜனி இரசிகனே..

ஈழத்தமிழர்கள் விடயத்தில் இரஜனி என்றுமே வாயைத் திறக்கமாட்டார் என்பது நிதர்சனமான ஒரு உண்மை.

ஆனால் அதற்காக நாம் ஒன்றும் இரஜனி படத்தை ஒன்றும் பார்க்காமல் இருந்தோ பகிஸ்கரித்தோ விடமாட்டோம் என நண்பர் ஒருவர் சொன்னார்.

நான் துரோகி என முத்திரை குத்துவதற்குள் அவர் சொன்னார் இரஜனியின் அடுத்த படம் எல்லோரும் பார்த்து இன்புற அனைத்து இணையத் தளங்களிலும் மிக வேகமான முறையில் தரவிறக்கம் செய்து பார்க்ககூடியவாறு நல்ல தரத்துடன் வெளியிடுவோம் என்றார்.

நான் இராஜேந்தரகுமார் ஸ்ரைலில் ஙே என விழித்தேன்.

Read More...

Saturday, July 08, 2006

நீவிரும் கல்லெறியக் கடவீர்.

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.

5 வயதாயிருந்தாலென்ன 7 வயதாயிருந்தாலென்ன ஒருவனுக்கு இவன் தமிழன் மற்றவனுக்கு இவன் அகதி..வேறென்ன வித்தியாசம்..

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.



Read More...

Friday, July 07, 2006

விகடனில் பச்சான் பேட்டி

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரிகைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது?


அய்யா, ஈழ விடுதலைப் போராட்டத்தில் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும்,
எனக்கு ஒரு கருத்து இருக்கும்... அதை விடுங்க. ஆனா, உயிருக்குப் போராடி
பிள்ளைகுட்டிகளோட வந்து காப்பாத்துங்கன்னு கதறலோட கரை ஒதுங்குறானே நம்ம சகோதரன்...

அவனுக்கு நாம என்ன செய்யணும்னு ஒரு நிமிஷம் யோசிக்க வேணாமா?’’

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் யுத்த அபாயத்தால் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடற்கரைகளில் தினம்
தினம் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்து குவியும் துயரம் தொடர்கிறது.

இந்தச் சூழலில், வருகிற 8ம் தேதி சென்னையில் இது தொடர்பான அனைத்துக்
கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்
செயலாளர் தொல்.திருமாவளவன். அதற்கான ணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும்
இயக்குநர் தங்கர்பச்சான், தன் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சோகமும் கோபமுமாக...

‘‘அப்பா எங்கே இருக்கார்னு பிள்ளைக்குத் தெரியாது... பிள்ளை உயிரோட இருக்கானா
இல்லியான்னுகூட அம்மாவுக்குத் தெரியாதுன்னு இருபது வருடங்களுக்கு மேலா வலியே வாழ்க்கையா
உலகம் முழுக்கக் கிடக்காங்க ஈழச் சகோதரர்கள். அந்த அவல வாழ்க்கையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?


இங்கே இருந்து இருபது மைல் தூரத்தில் நம்ம சகோதரன் சாகிறானேங்கிற எந்த வலியும்
வருத்தமும் இல்லாம, நாம டி.வி. சேனலுக்குப் போன் போட்டு பாட்டுக் கேட்டு உட்கார்ந்-
திருக்கோம். எனக்கு அந்தச் சகோதரர்களின் வலி முழுசா தெரியும். காரணம், ஈழத் தமிழ்
சகோதரர்களின் வாழ்க்கையை மையமா வெச்சு ‘தாய்மண்’னு ஒரு திரைப்படத்தை இயக்க
நினைச்சிருந்தேன். அதுக்காக உலகம் முழுக்கப் போய் நூத்துக்கணக்கான அகதிகளைச் சந்
திச்சேன்.

இலங்கைக்கே போய் அந்த மக்களைப் பார்த்தேன். அந்தப் படம் மட்டும் இந்நேரம்
வந்திருந் தால், என் மக்களே திரண்டு பெருங்குரல் கொடுத்திருப்பாங்க. ஓங்கி ஒரே குரலா
ஒலிச்சிருக்கும். அந்த மாதிரி படைப்புகள் வராததுதான் தமிழனோட சாபக் கேடு.’’

‘‘ஏன் அந்தப் படம் இன்னும் ஆரம்பிக்கலை?’’

‘‘ஏங்க, என்ன சொல்றீங்க? இங்கே பெரியாரைத் திரைப்படமாக்கவே தயாரிப்பாளர்
கிடைக்கலீங்க. பொறுக்கி, ரௌடி, தாதா, சமூக விரோதியைக் கொண்டாடுற படங்களை
மட்டும்தானே இப்போ எடுத்திட்டிருக்காங்க. எங்கே பார்த்தாலும் எட்டு கொட்டாயிலேயும் அந்
தப் படங்கள்தானே ஓடுது! துருப்- பிடிச்ச நம்ம சிந்தனையையே மறுபடி உயிர்ப்பித்த, நம்ம
சமூகத்துக்கே பகுத்தறிவு ஒளிகாட்டிய பெரியாரைப் படமா எடுக்கப் பணம் போட ஆள்
இல்லைங்க. பெரியாரா நடிக்கக்கூட அந்த உணர்- வுள்ள சத்யராஜ்தான் ஆர்வமா வந்தார்.
நாகம்மை, மணியம்மையா நடிக்க ஒரு கதாநாயகியும் வர மாட்டேங்கிறாங்க. இதுதான்
இங்கே நிலைமை.

உலகம் முழுக்க எல்லா மொழிகளிலும் அவங்க வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தைச்
சொல்ற திரைப்படங்கள் இருக்கு. நாமதான் வரலாறே இல்லாம எழுபது வருஷமா
படமெடுத்துட்டு இருக்கோம். தமிழகம் முழுக்க 55 ஆயிரம் அகதிகள் இருக்காங்க. ஒவ்-
வொருத்தருக்குள்ளேயும் எவ்வளவு கதைகள் இருக்கு. அதை ஏன் ஒரு படைப்பாளிகூட
உண்மையான சினிமா- வாக்கலை? வரலாற்றையும் பண்பாட் டையும் ஒதுக்கிட்டு குத்துப்
பாட்டு, அருவா, துப்பாக்கிச் சண்டைன்னு போனா யாருக்கு நஷ்டம்?’’

‘‘இலங்கை போய் வந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...’’


‘‘அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு வசதியான நல்ல வாழ்க்கை வாழறோம்னு
தெரிஞ்சுதுங்க.
மின்சாரம் கிடையாது. சாலை கிடையாது. மருத்துவம் கிடையாது. விவசாயம் கிடை யாது.
செழித்து வளர்ந்த மண் இப்ப கந்தக பூமியாக் கிடக்கு. எங்கே பார்த்தாலும் பள்ளம் பள்ளமா
இருக்கு. ‘இங்கேதான் பள்ளிக்கூடம் இருந்துச்சு, இங்கே- தான் நூலகம் இருந்துச்சு’ன்னு
பள்ளங்களையாக் காட்டுறாங்க.

ஒரு கவிஞனோட வீட்டுக்குப் போனேன். பத்துக்கு எட்டு சைஸ் அறையில் 13 பேர் வாழ
றாங்க. ஒரே ஒரு விளக்கு இருக்கு. அந்த வெளிச்சத்தில் ஒவ்வொ ருத்தரா வந்து தன்
முகத்தைக் காட்டி, அறிமுகப்படுத்திக்கிறாங்க. ஒரு குட்டிப் பையன் மட்டும் எழுந்து
வராமல் அப்படியே படுத்துக்கிடந்தான். விளக்கை எடுத்துட்டுப் போய்ப் பார்த்தா, கையும்
இல்லை, காலும் இல்லை. ‘கண்ணி வெடியில் சிக்கிட்டான்’னு சொல்றாங்க. அய்யோ..!

அப்பிடியே எனக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சுங்க. அந்தக் குடும்பத் தில் மட்டும் இப்படி
மொத்தம் ஆறு பேர் ஊனமா இருக்காங்க. இப்படி ஒவ்வொரு வீட்டிலேயும் மரணம்.
விதவிதமான துயரம்.


அவங்களுக்கும் நம்மைப் போல பெரியாரும் காமராஜரும்தான் ஆதர்சம்.
பாரதியைத்தான் கொண்டாடுறாங்க. முருகனைத்தான் கடவுளா கும்பிடுறாங்க. ஆனா, பயங்கரமான
வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்காங்க. அப்படித் துன்பப்பட்டு வர்றவங்களுக்கு நாம என்ன
செய்றோம்?


அவங்க ‘அண்ணா’ன்னு கூப்பிடும்போது அப்பிடியே எனக்கு உயிரே நடுங்குது.

அவங்க கஷ்டத்தைப் போக்க என்ன பண்ணியிருக்கோம்?
அங்கே இன்னும் கலை உயிரோடு இருக்குங்க. ஒரு கண்ணு இல்லை, கை இல்லை...
அதோட குறும்படங்கள் எடுக்கிறாங்க. படம் பார்த்தீங்கன்னா, நெஞ்சை அடைக்குது. எப்பவுமே ஒடுக்கப்பட்ட
இனத்தி லேர்ந்துதான் வீரியமான கலைகள் பிறக்கும். பேரழிவுகளைச் சந்திச்ச யூத இனத்திலேர்ந்துதான் ஸ்டீஃபன்
ஸ்பீல்பெர்க் வந்தார். அப்படி இனிமே ஈழத் தமிழர்கள் வருவாங்க.

எந்த தொழில்- நுட்ப வசதியும் இல்லாம அவங்க எடுக்கிற படங்களைப் பார்த்தால்தான், நம்ம லட்சணம்
நமக்கே புரியுது.

இங்கே தமிழ்நாட்ல எல்லாம் இருக்கு. மாத்தி மாத்தி மண்டையைக் குழப்ப, ஆளாளுக்கு ஒரு
சேனல் வெச்சிருக்கான். நாலு ஷோ சினிமா ஓடுது. கோயில் திறக்கிறதுக்கு முன்னாடி சாராயக்
கடை திறந்துடுறான். எப்பவும் செல்போன்- லயே அநா- வசியமா பேசிட்டு அலையு- றான்.
அப்புறம் எப்படி நல்ல விஷயத்- தைச் சிந்திப்பான்? சூடுசொரணை இல்லாத ஒரு தமிழ்ச்
சமூகத்தை உருவாக்கிட்டு இருக்கோம். இது ஈழத் தமிழ்ச் சகோதரர்களை நாம் அரவணைக்க
வேண்டிய நேரம் மட்டுமில்லை, அவர்களிடமிருந்து கத்துக்க வேண்டிய நேரமும்கூட!’’

‘‘ஈழத் தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டின் மீடியா, இலக் கியம், கலைத் துறை, அரசியல்-
வாதிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?’’

‘‘ஐயோ, போங்க! படகு கவிழ்ந்து 60 ஈழத் தமிழர்கள் இறந்தார்கள்ங்கிறது இங்கே ஒரு
சின்ன செய்தி, அவ்வளவுதான்! யாரு பொண்டாட்டியை யாரு வெச்சிருக் கான், இன்னிக்கு
என்ன கள்ளக் காதல் கொலை, கஞ்சா கேஸ் என்னாச்சு, எந்தக் கோயிலுக்குள்ளே யார்
போனாங்கன்னு வேறு எதைப் பத்தியும் சிந்திக்கவிடாம, மக்களைத் தவறான முறையில்
ஊடகங்கள் வழி நடத்துது.


ஈழத்தில் இவ்வளவு பிரச்னை நடக்குதே... எந்த ஒரு தொலைக் காட்சியிலாவது ஈழத் தமிழர்
பிரச்னை பற்றி அரை மணி நேரம் காட்டறாங்களா? ஒரு சமூகத்தின் மிகப் பெரிய
பிரச்னையைப் பேசாத ஊடகங்கள் அந்தச் சமூகத்துக்கே துரோகம் செய்கிறதுன்னுதானே
அர்த்தம்? எப்போ பார்த்தாலும் ஏதாவது நடிகர், நடிகைகிட்டே போய், ‘யாரைக்
காதலிக்கிறீங்க, எப்போ கல்யாணம்?’னு இதே கேள்விகள்- தான். ஈழப் பிரச்னை பத்திக்
கேளுங்க. கேக்கணுமா இல்லியா?


ஊடகங்கள் இப்படின்னா, கலைத் துறை இன்னும் மோசம். ஈழத் தமிழர்களை நகைச்சுவைக்
காட்சிக்கு தான் இவங்க பயன்படுத்துவாங்க. இல்லைன்னா அங்கேயிருந்து ஒரு பெண்
வர்றா, அவளுக்குக் காதல்... இல்லேன்னா, பிரச்னை என்னன்னே புரியாம மேம்போக்கா
எதையாச்சும் எடுக்குற- து... என்னங்க நடக்குது இங்கே?


அப்புறம் நம்ம நடிகர்கள். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்கிற நடிகர்கள் இதுவரைக்-
கும் இந்தப் பிரச்னையில் என்ன பண்ணி இருக்காங்க?

இந்த மாதிரி எரிகிற பிரச்னையில் உங்க அணுகுமுறை என்ன? அதைச் சொல்ல வேண்டாமா?
நீங்க அனுபவிக்கிற வசதி வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் கொடுத்ததில்லை. உலகம் முழுக்க இருக்கிற ஈழத்
தமிழர்களும் கொடுத்ததுதானே?

மண்ணை இழந்து அடக்கப்பட்டு, அவமானப்பட்டு, கேவலப்பட்டு தன் உயிரையே உருக்கி அவன் சம்பாதிக்கிற பணத்தை ஆளாளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பிடுங்கிட்டு வர்றீங்கள்ல... அப்போ அவங்களுக்கு ஒரு
கஷ்டம்னா, அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்க வேண்டியதும் உங்க பொறுப்பா,
இல்லியா?


இப்போ இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே
உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க
பங்கெடுக்கணுமா, இல்லையா?

ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும்
எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய மக்கள் பலம் இருக்கு. ஏன் பேச
மாட்டேங்கிறாங்க? ஒவ்வொருத்தருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கணும். சமூகப்
பிரச்னையோட தங்களை இணைச்சுக்கணும். சும்மா மார்லன் பிராண்டோ நடிப்பைப் பத்தி
சிலாகிச்சா மட்டும் போதுமா?

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரி- கைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய- மலைக்கும், ஓய்வெடுக்க வெளி- நாட்டுக்கும்
போனா நாங்க எங்கே போறது?

மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா? கார்கில்ல போர்னா தமிழ்நாட்டில் இருந்து ஏராளமா நிதி கொடுக்கிறோம், குஜராத்ல பூகம்பம்னா நிதி கொடுக்கிறோம், கோயில்ல அன்னதானம்னா நிதி கொடுக் கிறோம்... எல்லாம்
நல்ல விஷயம்தான்!

அதெல்லாம் போல இதுவும் ஒரு பெரிய பிரச்னை. உயிர்ப் போராட்டம்.
உதவி பண்ண வேண்டாமா? நம் உணர்வைக் காட்ட வேண்டாமா? ஈழத் தமிழர்களுக்காகப்
பேசுங்க. அகதி முகாம்களுக்குப் போய்ப் பாருங்க. அதுதான் மனிதாபிமானம்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போராட்டம் நடத்துறார்.
தோழர் தொல்.திருமாவளவன் கூட்டம் போடுறார். ஆனால், எல்லோரும் ஒண்ணு சேர
வேண்டாமா? அரசியல் பகைமை, கோபங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு
நெருக்கடியான சூழலில் ஒரே குரலில் பேசலைன்னா, அப்புறம் எதுக்குப் பொதுவாழ்க்கை?
இதோ, வர்ற 8&ம் தேதி சென்னை மயிலை மாங்கொல்லையில் தோழர் திருமா அனைத்துக்
கட்சிக் கூட்டம் போட்டிருக்கார். இதைத் திருமா நடத்தினா என்ன, யார் நடத்தினா என்ன...
விஜயகாந்த்தே நடத்தினால்தான் என்ன? அங்கே எல்லோரும் வாங்க. மத்திய அரசுக்கு
இந்தப் பிரச்னையின் வீரியத்தைப் புரியவைப்போம்.

திருமா என்னிடம் கூட்டம் சம்பந்தமா பேசினார். ரஜினியில் தொடங்கி திரையுலகில்
முக்கியமானவங்க எல்லோருடைய தொலைபேசி எண்களையும் அவருக்குக் கொடுத்தேன்.
‘நானே அழைக்கிறேன். அவங்க எல்லோரும் வரட்டும்’னார். எல்லோரும் வாங்க. உங்க
ரசிகர்களையும் வரச் சொல்லுங்க. சினிமா, அரசியல் கூட்டம்னா அடிச்சுப் பிடிச்சுக்
கூடுறோமே... இங்கே எல்லோரும் வாங்க. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ், சீனாவின்
தியான்- மென் சதுக்கங் களில் போராட்டக் காலங்களில் கூடிய கூட்டம் மாதிரி லட்சக்கணக்
கான பேர் திரண்டு, தமிழ் இனத்தின் ஒற்றுமையைச் சொல்வோம்.

முப்பதாண்டு காலமா அனைத்தையும் இழந்து அடக்குமுறையில் சிக்கி, அநாதைகளாக,
அகதிகளாக அலைந்து திரியும் நம் சகோதரர்களின் கண்ணீரை, மத்திய அரசுக்கும் உலகுக்கும்
புரியும்படி எடுத்துப் போவோம். கூட்டத்துக்கு வரமுடியா தவங்க, குறைந்தபட்சம் பிரதமருக்கு
ஒரு தந்தியாவது அனுப்பலாம். இந்த நேரத்திலும் இதைச் செய்யலைன்னா அது தமிழ்
இனத்துக்கு நாம செய்கிற துரோகம்!’’


‘‘இது சாத்தியம்தானா?’’


‘‘இப்பிடியே இருந்தா, தமிழ் இனத்தையே தடம் தெரியாம அழிச்சிடுவாங்க. நம் நதிகளை
எடுத்துக்கங்க. காவிரியை கர்நாடகம் பிடிச்சு வெச்சிருக்கு. முல்லைப் பெரியாறு விஷயத்தில்,
கேரளா பிரச்னை பண்றாங்க. பாலாறுக்குக் குறுக்கே அணை கட்ட ஆந்திரா முயற்சி பண்ணுது.
இங்கே ஓடுற தாமிரபரணியை வெளி- நாட்டு குளிர்பான நிறு- வனங்கள் நாசம் பண்- றாங்க.
ஒரு நதியைக்கூட தமிழன் உருப்படியா காப்பாத்த முடிய- லியே... இதெல்லாம் எதனால?
நம்மகிட்டே ஒற்றுமை இல்லை. மயக்கத்திலேயே திரியுறான் தமிழன். கிரிக்கெட்ல தோத்தா,
ஜெயிச்சா கூடிக் குடிக்கிற சமூகமா ஆகிட்டோமே!

அரசியல் கட்சிகளிடமே பொது நல விஷயங்களில் ஒற்றுமை இல்லை. அப்புறம் மக்களிடம்
எப்படி வரும்? நதிநீர் பங்கீட்டில் துவங்கி, ஈழத் தமிழர் பிரச்னை வரை அத்தனை கட்சித்
தலைமையும் ஒண்ணா நிக்கணும். அப்போதான் தமிழன் உருப்படுவான்’’ என்கிற தங்கர்,
பக்கத்திலிருக்கும் பெரியார் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு நிமிர்கிறார்.

‘‘இதை விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமான சண்டையா பார்க்காம, ஒரு இனம்
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இருக்க இடமின்றி அலைகிறதேங்கிற மனிதாபிமானத்தோட
எல்லாரும் பாருங்க. அகதிகளா இல்லை, நம்ம சகோதரர்களா அவங்க வாழ்க்கையை
மீட்டெடுத்துத் தர வாங்க. இல்லைன்னா, வருங்காலம் நம்மை மன்னிக்காது!’’

\ ராஜுமுருகன்,
படங்கள்: பொன்.காசிராஜன்

நன்றி
http://www.vikatan.com/av/2006/jul/16072006/av0201.asp
http://www.thamilnaatham.com

Read More...