

இலங்கையை விளையாட்டில் ஆதரிப்பதால் ஈழத்திற்கு என்ன குறைச்சல்?
ஆஸ்திரேலியாக்காரர்களின் நக்கல் நையாண்டிக்கு ஆசிய இனத்தவரின் சார்பில் இலங்கை வெல்லவேண்டும்.
முரளியின் ஆஸ்திரேலியா கோபம் இன்னும் வெளிப்படவேண்டும்.தமிழனை நக்கலடிக்க யார் இந்த அவுஸ்திரேலியர்கள்?
பல ஆய்வாளர்களும் தமிழர்கள் இலங்கையை ஆதரிக்ககூடாது என்று எழுதுகிறார்கள்.
யார் இந்த இலங்கையர்கள்?
இவர்கள் வென்றாலோ அல்லது தோற்றாலோ ஈழத்திற்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.எந்த வெளிநாடும் அதனால் எமக்கு ஒன்றும் பண்ணப்போவதுமில்லை.பின் ஏன் இவர்களைப் பார்த்து மிரளுகிறார்கள்?
தேசியத்தை நம்புவோர் தேசியத்தை மட்டும் நம்புங்கள்.
ஆஸ்திரேலியாவின் கொழுப்பை இலங்கை கரைக்கட்டும்.
இலங்கையின் கொழுப்பை ஈழம் கரைக்கும்.
Read More...
Summary only...

ஆசிய ரசிகர்கள் கொண்டாட்டம்
உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகள் வெளியேறிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள 4வது ஆசிய அணி இலங்கை பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆசிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெளியேறியதால் வெறுப்படைந்த ரசிகர்கள், உலகக் கோப்பை போட்டியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். முதல் அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இலங்கை, அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம் ஆசிய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
இலங்கை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நியூசி. அணியுடனான அரை இறுதியின் போது, இலங்கை அணிக்கு அந்நாட்டு ரசிகர்களுடன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களும் உற்சாகமாக ஆதரவு அளித்தனர்.
கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் போட்டி தொடங்கி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஸ்டேடியம் அமைதியாகவே இருந்தது. ஜெயவர்த்தனே விளாசத் தொடங்கியதும், ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். சகலவிதமான வாத்தியக் கருவிகளுடன் ரசிகர்கள் உற்சாகக் கூக்குரல் எழுப்பி, இலங்கை வீரர்களை ஊக்குவித்தனர்.
இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து விளம்பர நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பைனல் நெருங்கிவிட்ட நிலையில் உலகக் கோப்பை போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா விளையாடாததால், நள்ளிரவு வரை கண்விழித்துப் பார்க்கத் தயாராக இல்லாத இந்திய ரசிகர்கள் கூட இலங்கை விளையாடும் பைனலை ஆர்வமுடன் ரசித்துப் பார்க்க தயாராகிவிட்டனர். உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பரவிக் கிடப்பதால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி பல நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
dinakaran.TN
Read More...
Summary only...
எச்சரிக்கை;- தொழில்நுட்ப பதிவு. விலகிப் போகவும் . (A)
இது ஒரு மொக்கைப்பதவிவாக இருந்தாலும் சில சமயம் வாற விசரை தணிக்க இந்த பதிவுகள் சில வேளை உதவலாம்.
எனவே அவ்வப்போது விசர் வாற நேரங்களிலோ அல்லது பௌர்ணமி நாட்களிலோ இனி பதிவு போட உத்தேசித்துள்ளேன்.
கோழி கூவி குயில் பாடி மழை வந்து மயில் ஆடி காலை யாகி மாலையாகி எல்லாம் முடிந்தாப்பிறகுதான் இந்த google reader தமிழ்மணத்தை அழைத்து வருகிறது அதற்குள் நான் நேரடியாகவே தமிழ்மணத்தில் பதிவுகள் பார்த்தாயிற்று.பேந்து எதற்கு இந்த கூகிள் றீடர்?
Read More...
Summary only...

வி.புலிகளால் முதன் முதலாக பரீட்சிக்கப்பட்ட ஒரு சில அடிகளே பறந்த முதல் விமானம்.இந்திய அமைதிப்படையின் காட்சிப்பொருளாக...
படம் காண்க.
இன்றைய செய்திக்கு இந்தப் படம் பொருத்தமாகவிருக்கும் என்பதால் இந்தப் பதிவு.மற்றும்படி
சயந்தனின் தமிழனின் பறப்பு முயற்சிகள்
உள்ள கருத்துத்தான் எனதும்
Read More...
Summary only...