Monday, July 16, 2007

ரஜனி கோவணாண்டி மென்ரல்

சில சமயங்களில் பதிவை விட பின்னூட்டங்கள் மிக ஆழமாகவும் நகைச்சுவையுணர்வை கொண்டதாகவும் இருக்கும்.

பலமுறை நினைப்பதுண்டு இவைகளை ஏன் மீள் பதிவாக போட்டு மற்றையோர்க்கும் தெரியப்படுத்தக்கூடாது என.. .இன்று தென்றலின் பதிவில்
எனை கவர்ந்த சிரிப்பு வரச்செய்த பின்னூட்டம் ஒன்று.

ஏற்கனவே இரஜனி பற்றிய கோவணாண்டியின் கட்டுரையை போட்டு தென்றல் செல்வேந்திரன் உட்பட எல்லோரிடமும் அர்ச்சனை வாங்கிக்கொண்டுஇருக்கும் நேரத்தில் பொட்டிக்கடை வந்து ஊட்டிய பின்னூட்டமான

ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன் அவனிடம் ப்ரமாதமான நடிப்பை எதிர்பார்ப்பதே தவறு...நீங்கள் வேறு எதையோ அல்லவா எதிர்பார்க்கரீர்கள்

அதற்கு

தென்றல் said...
வாங்க, Pot"tea" kadai!/ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன்.../

Shh..hh.... கொஞ்சம் மெதுவா பேசுங்க... இதலாம் சத்தமா சொல்லக்கூடாது...

:)

பி.கு 1:-அவங்க பக்கத்திலிருந்து அவர்களை கேட்காமல் அவர்களது பின்னூட்டத்தை உருவி தனியாக பதிவு போடல் காப்புரிமை மற்றும் தனிப்பட்ட நபரது சொந்த கருத்து பாதுகாப்புரிமையை மீறுமா எனத் தெரியவில்லை.

பி.கு2
மாலன் பெயரிலி கவனிக்க..வலைப்பதிவுலகத்தில் யாரோ பின்னூட்டத்தை எனது வலைப்பதிவாக வரலாற்றில் முதன் முதலாக பதிந்துள்ளேன்.
பதிந்த திகதி 15.07.07 கி.பி நேரம்: உஙகளது நாட்டு நேரம். கவனத்தில் எடுக்கவும்.:)

Read More...

Friday, July 13, 2007

ரமணி என்கிற பெயரிலிக்கு

வணக்கம்.

தோண்ட தோண்ட புதையல் கிடைப்பது உங்களுக்கு மட்டுமே சாத்தியம். கூகிளாண்டவனே... முத்துகுளிக்க உங்களிடம் ட்ரெயினிங் எடுக்கவேண்டும்.

வாழ்த்துக்கள்.

முதன் முதலில் ஆதாம் ஏவாள் அப்பிள் என்று ஆரம்பித்து சண் ரீவி வரை பரவிய இந்த வருத்தம்(நோய்) இணையம் வரை பாய்வது ஒன்றும் புதிதான ஒரு விடயமல்ல.

இப்படி ஒரு கேள்விக்கணையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு போகும் திசை
மிக ஆர்வமூட்டகூடியதாகவிருக்கிறது.


யார் யார் முதல் முதல் என்பதை விட தமிழிணைய விடயங்களை அறிந்த ஒருவர் மூலம் சில வரலாற்று தகவல கிடைப்பது மகிழ்ச்சியே.

நிறைய புதிய விடயங்கள் அறிந்துகொளளக்கூடியதாகவிருக்கிறது.

இணையத்ததில் தோண்ட தோண்ட நோண்ட கத்தி கடப்பாரை ரமணிக்கு வழங்குபவர்களுக்கு (நான் உட்பட) நெஞ்சார நன்றிகள்.

printout எடுத்து வாசிக்க கதை தொடர்கதையாகி இராமாயணமாகி அனுமர் வாலாகி நீண்டுகொண்டே போகிறது.

கருத்து சொல்லும் மூத்த பதிவர்கள் ஒருவரையும் கூட காணமுடியவில்லை.

கருத்து சொன்னால் முதல் முதல் பின்னூட்டமிட்ட மூத்த பதிவர் என்ற பெயர் கூட கிடைக்கலாம்.

ரமணியின் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழலின் பின்னூட்டம் 100 ஐ தாண்டி பல விடயங்கள் வெளிக்க உதவட்டும்.

பி.கு மொட்டை பாஸ் கவனிக்க..இது வரலாற்றுப் பதிவு.

அன்புடன்
தீவான்.

Read More...

Wednesday, July 04, 2007

Rain TRain Go Away rain or train?









ஸ்ரேயா rain ஸ்ரேயாவா train ஸ்ரேயாவா என சந்தேகம் வந்தது.யாரை சந்தேகம் கேட்கலாம்?அதற்கென இப்போ தமிழ் ஆங்கில சந்தேகம் கேட்பதற்கென சிறில் அலக்ஸ் ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறார்.அங்கு இந்த


train or rain எது சரி என சந்தேகத்தை கேட்டுடலாமா?

rain ஸ்ரேயா சலனப்படம் ஒன்று

train ஸ்ரேயா சலனப்படம் ஒன்று




பி.கு விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் கோயில் ஒன்றுக்கு தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய ஓதுவார்கள் தேடப்படுகிறார்கள்.மறு அறிவித்தல் வரும் வரை காத்திருக்கவும்.



Read More...

Thursday, June 28, 2007

மொக்கை போடு போடு ராச

பதிவெழுதி கன காலமாகிவிட்டது.ஓரிரு கேள்விகள் உள்ளது யாராவது பதில் தாருங்கள்.தூயாவினகேள்வியான ்
மொக்கைன்னா என்னா என்று கேட்டதற்கு படம் கீறி குறிப்பு கொடுத்து விளக்கோ விளக்கு என்று விளக்கியவர்கள் இதற்கும் கருணை காட்டவேண்டும்.

தமிழ் வலைப்பதிவில் சமீப காலமாக ஆணி பிடுங்குதல் என ஒரு சொற்தொடர் பிழங்குகிறது.அதனுடன் தொடரும் கருத்தை பார்க்கும்போது அதிக வேலைப்பழு என புரிந்துகொள்ளமுடிகிறது..இப்படியா வரும்?

ஏன் அதற்கு ஆணி பிடுங்கல் ஆணிக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?


மற்றைய கேள்வி.

முன்னர் கவுண்டர் படங்களிலெல்லாம் ஒரு நாய்ப்பாசை இருக்கும்.இப்ப வடிவேலு காலத்திற்கு பின்னர்
நாதாரி என்ற சொல் அடிக்கடி வருகிறது.அப்படி என்றால் என்ன?முன்னர் இப்படி ஒரு சொல் கதையிலோ
பத்திரிகைகளிலோ கேள்விப்படவில்லை.இது எந்த வட்டாரப்பேச்சு?

இப்ப இது இரண்டும்தான் தலையாய கேள்வி மற்றையவை அப்பப்போ வரும்.

Read More...