Monday, August 27, 2007

எனக்கெதுக்கப்பூ டாக்டர் பட்டம்/நம்ம விஜய்க்கு ஒண்ணு கொடுப்பா






A.C.SanMugam சண்முகம் சார் நன்றி நன்றி.விஜய் மற்றும் விகடன் Boys புகழ் ச்சீய் சங்கருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்ததற்காக திரையுலகமும் வலையுலகமும் உங்களை நெஞ்சார வாழ்த்துகிறது.

யாரங்கே தீவு அண்ணனுக்கு ஒரு சோடா கொடு.

சோடா கொடுத்த தம்பிக்கும் எனக்கு கலைமாமணி விருது தந்த ஆஸ்திரேலிய வட்ட தல கானாபிரபா அவர்க்ளுக்கும் நன்றி கூறி டாக்டர் பட்டம் பெறும் சங்கர் மற்றும் வாள் விஜய்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி எனது சிற்றுரையை முடிக்கிறேன்.

புகைப்படம் விளக்கம்:-

திரைப்பட ரீ மேக்கில் மட்டுமல்ல புகைப்பட போஸ் ரீமேக்கில் கூட அசத்துவேன் எனக்கூறும் விஜய் அபிசேக் பச்சனின் போஸை காப்பிசெய்த

புகைப்படம் மேலே


செய்தி

கலைஞானி கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் ஒரு இன்ப அதிர்ச்சியை திரையுலகத்திற்கு கொடுத்தார் ஜேப்பியார். இவர் நடத்தும் அன்னை சத்யபாமா நிகர் நிலை பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பின் ஒவ்வொரு வருடமும் இந்த பல்கலைக்கழகம் திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகமும் திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க துவங்கியிருக்கிறது. இந்த வருடம் இந்த பட்டத்தை பெறுகிறார்கள் நடிகர் விஜயும், டைரக்டர் ஷங்கரும். இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 27-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பத்மபூஷண் சி.மாதவன் நாயர் இவர்கள் இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறார்.

திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க விஜயை தேர்ந்தெடுத்தது ஏன்? காதலுக்கு மரியாதை படத்தில் காதலை விட பெற்றோர்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை சொன்னதற்காகவும், லவ் டுடே, சிவகாசி போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த ரோல்களுக்காகவும்தான் என்றார் ஏ.சி.சண்முகம். அரசியல் அல்லாத நடுநிலையாளர் என்ற முறையிலும் அவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுகிறது என்றார். அதே போல் இதுவரை தமிழ்ப்படங்கள் எதுவும் செய்யாத சாதனையை செய்த சிவாஜி படத்தின் இயக்குனர் என்ற முறையில் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஷங்கரின் மற்ற படங்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டனவாம்.

இதற்கென்று ஒரு தேர்வுக்குழுவை அமைத்து பட்டம் பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இனி திரையுலகை சேர்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றார் ஏ.சி.சண்முகம்.

tamilcinema













Read More...

Thursday, August 23, 2007

வலைப்பதிவர் தேர்வு 2007 முடிவுகள்

வலைப்பதிவர்தேர்வு 2007 முடிவுகள் முதற்கட்டமாக வெளியேறத்தொடங்கிஉள்ளது.சுட சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டவண்ணம் உள்ளது.

விருது பெறுவோரும் விருதும்:-

மாலன்:-நன்னடத்தைக்கான பெயரிலி விருது

தமிழச்சி:"ஒண்டிக்கு ஒண்டி" செந்தில் விருது

மா சி சிவகுமார் சிறந்த மட்டுறுத்துனருக்கான வளர்மதி விருது

செந்தழல்ரவி - மொக்கராசு விருது.எனினும் இது எந்தநேரமும் அவரது நன் நடவடிக்கையை பொறுத்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டு ஓசை செல்லாவுக்கு வழ்ங்கப்படலாம்.

பொன்ஸ்- அடோப் போட்டொஷொப் தீவு விருது

பாலபாரதி:- அன்னப்பட்சி விருது(உயர் விருது) (பட்டறையில் அன்னம் வழித்து பதிவர்களுக்கு கொடுத்தமையினால்)

உண்மைத்தமிழன்: நான் அவனில்லை டோண்டு விருது

மோகனதாஸ்:-நக்கீரன் விருது

கொழுவி:- கலகக்காரனுக்கான கொண்டோடி விருது

பொட்டீகடை :-பாரிஸ் எலக்கிய சந்திப்பிலிருந்து சிபாரிசு செய்யப்பட்ட ஜூனியர் விகடன் விருது

ஓசை செல்லா :-சிறந்த அறிக்கைகளுக்கான சுப்பிரமணியசுவாமி விருது


மிகுதி அறிவிப்பு கலைஞர் டீவி ஓளிபரப்பில் பார்த்துக்கொள்க.

Read More...

Tuesday, August 21, 2007

அடோப் போட்டோசொப் போட்டியில் தமிழர் தெரிவு

உலகளாவிய ரீதியில் அடோப் போட்டோசொப் மென்பொருள் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு
வரப்பிரசாதம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அந்த நிறுவனத்தினர் நடாத்தும் புகைப்பட போட்டியில் நமது தமிழர் ஒருவரின் படமும் தேர்வுக்குள்ளயிருக்கிறது.


அந்த புகைப்படங்கள் இதோ.

புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கி பார்த்து கலைநயத்தை வியக்கவும்.





புகைப்பட மீள் பிரசுரிமைக்கு கண்டிப்பாக புகைப்படகலைஞரின் அனுமதி தேவை ,



தகவல் மொக்கராசு குழுமம்

Read More...

Saturday, August 11, 2007

எனது முதல் கைக்கூ கவிதை

இது எனது முதல் கைக்கூ கவிதை பார்த்து படித்து ஆதரவு தாருங்கள்படித்து இரசித்து பின்னூட்டம் தர மறந்து செல்லும் உள்ளங்களுக்கு முன்கூட்டிய நன்றி.

யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

கைக்கூ காப்புரிமை "தீவு"


பட்டறைக்குறிப்புச்சொற்கள்:- பாஸ்போட், நுண்அரசியல் ,நச், மொக்கை, தயிர்ச்சாதம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்99, தமிழ்100, இரவுக்கழுகு, மத்தியானக்கழுகு, கொரியா, திமுக, ஜெயாரிவி,மற்றும் இலிya's,Homer

Read More...