January 30, 1948 எமது அகிம்சை வழியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட மகாத்மா காந்தியை கோட்சே என்னும் கொள்கைவாதி சுட்டு கொன்றான்.இதனை கண்டித்து
மாபெரும் கண்டனப்பேரணி ஒன்று மெரினா பீச் காந்தி சிலையருகே நாளை (2008)நடாத்தப்படவிருக்கிறது.அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொள்வீர்.
லேபிள்:- சீமான் அமீர் கைது, விலாங்குமீன், டால்மியாபுர வீரன் கல்லக்குடி கலைஞர்.
Read More...
Summary only...

ஏதாவது புரிகிறதா?48 மணித்தியாலத்தில் கிளிநொச்சி எனறு சொல்லி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.ஒன்றையும் இலங்கை அரசாங்கம் புடுங்கியதாகத் தெரியவில்லை.
இப்பொழுது 2 வாரங்களுக்குள் இலங்கை யுத்த நிறுத்தம் செய்யவேண்டும் இல்லையேல் என ஒரு தீர்மானம் தமிழக கட்சிகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்படி எத்தனையோ பார்த்துட்டோம் .இதை பார்க்கமுடியாதா என்ன?
லேபிள்:-குருவி,காகம்,நரி,புலி
"மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும் மீறுவோர் எவர் என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை உலகம் தீர்மானிக்கும்" -பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்-



Read More...
Summary only...

புதிதாக ஒருவருக்கு எழுத்துலக சூப்பர் ஸ்டார் பதவி லக்கியால்
வழங்கப்பட்டுள்ளது. சுஜாதாவிற்கு இருந்தபோதும் இறந்தபோதும் கிடைத்த கெளரவம் இன்னொரு எழுத்தாளருக்கு நான் வாழும் நூற்றாண்டில் கிடைக்குமா என்பது சந்தேகமே..
லக்கி சாருவிற்கு வழங்கிய விருது பற்றிய தனது கருத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.
நிற்க
இனி முன்கதைச்சுருக்கம்
""லக்கிலுக்""
//
//10:44 AM me: வணக்கம் சார் :-)
10:46 AM Charu: yes tell me
me: இணையத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் அவ்வப்பொது சந்திக்கிறார்கள்.
இப்போது ஒவ்வொரு சந்திப்பிலும் நீங்கள் தான் ஹாட் டாபிக் :-)
நாளை கூட ஒரு சந்திப்பு சென்னையில் நடக்கிறது.
ஓய்வாக இருந்தால் வாருங்கள்!
10:47 AM http://muralikkannan.blogspot.com/2008/09/4.html - இந்த சுட்டியில் விவரங்கள் இருக்கிறது!//
அன்புடன்
லக்கிலுக்
//
இதற்கு நமது எழுத்தாள சூப்பர் ஸ்டார் என்ன கொல்லுறாரெண்டால்
// ஐயா, எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா, நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா//
எனவே பதிவுலக மக்களே அடுத்த பதிவர் சந்திப்புக்கு அண்ணனை கட்டாயம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆட்டோவில் சென்று நேரில் அழையுங்கள்.(வெத்தலை பாக்கு தாம்பாளம் வாழைப்பழம் உபயம் ஸ்பான்ஸர் தமிழ்மணம்)
முடியாதவர்கள் கலைஞரின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமான தந்தியை கையிலெடுங்கள்
தந்திகள் சாருவை நோக்கி பறக்கட்டும்
தந்திகள் அழைப்பிதழ் பாணியில் அமைந்தால் மிகவும் சிறப்பு
தந்திகள் அனுப்பமுடியாதவர்கள் வழமைபோல வைகோவின் சிறப்பு ஆயுதமான கடிதம் எழுதலை கையாளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தண்ணீர் அடித்து உண்ணாவிரதமும் இருக்கலாம்.
பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாருசாரே!!
லேபிள்:-தண்ணீர் காட்டல் தந்தி அடித்தல் எழுத்தாளன் ஞானி வாழ்க
Read More...
Summary only...
நானும் மகர ஜோதியில் ஐக்கியமாகிறேனா என்று பார்க்க ஒருடெஸ்டிங் பதிவு.
லேபிள்:-திருவள்ளுவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
Read More...
Summary only...