தலைவர் பிரபாவின் பிறந்த நாளன்று பிறக்கும் சிசுக்களுக்கு வங்கிக்கணக்கு
திருமலை அரசியல்துறையினர் ஏற்பாடு
எதிர்வரும் 26ஆம் திகதி தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 51ஆவது பிறந்ததினமாகும். இதனையொட்டி திருகோணமலையில் அன்றைய தினம் பிறக் கும் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. விடு தலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறையினர் இத்தகவலைத் தெரி வித்தனர்.
தேசியத் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி திருகோண மலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிலையான வைப்புக்கணக்குகளும் நினை வுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
அன்றைய நாளில் பிறக்கும் சிசுக்களின் விவரங்களை திருமலை மாவட்ட வைத்தியசாலையிலும், பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடமும் உறுதிப்படுத் துமாறும் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்.http://www.uthayan.com
தீவின் கருத்து :-இது போட்டிக்கு திருவிழா செய்யும் கலாச்சாரமாக மாறாவிட்டால் சரி.:(
Read More...
Summary only...
தீபாவளிக்கு படம் ரிலிஸாகி இத்தனை நாளாகியும் இன்னமும் பட விமர்சனம் நமது வலைப்பதிவாளர்கள் எழுதவில்லையே.என்னாச்சு...எல்லோரும் சந்திரமுகி இன்னொரு தடவை பார்க்க போயிட்டாங்களா???
தமிழ்ப்பதிவுகள்
Read More...
Summary only...
காசியுடன் முரண்படுபவர்களுக்கான வழிகாட்டல்.
வலை பதியும் ஆனால் தமிழ்மணத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகாதவர்களை நாம் விலக்கி வைத்துவிடமுடியாது.
உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படாமல் ஆனால் மக்கள் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும்.
அதே நேரம் அங்கே பதியவெண்டும் இங்கே இதை கவனிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்ககூடாது.
தனிப்பட்ட தலையீடுகளோ அல்லது வேறு 3 மாத அல்லது 4மாத இடைவெளி என்ற பழு இல்லாமல் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட முறையின்படி இலகுவாக செய்யலாம்.
உங:கள: ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு இடத்தில்(சொல் உதவி
Voice on Wings)
தமிழ்ப்பதிவுகள் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்துவிடுங்கள் வேறு ஒன்றுமே பிரத்தியேகமாக பண்ணத்தேவையில்லை. (http://technorati.com/ல் அந்த வலைப்பக்கத்திற்கு போய் புதுப்பிக்கும்போது ஒவ்வொருமுறையும் அறிவிக்கவேண்டும்.இங்கு அது தேவையில்லை.)
தேதி வாரியாக நீங்கள் பதிந்து 20 நிமிடத்திற்கு முன்னதாகவே திரட்டி தரப்படும்.
இதுவே அந்த உரல் :-
http://search.blogger.com/?ui=blg&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+&scoring=dஇதனை உங்கள் விருப்பு பக்கமாக ஆக்கிகொள்ளுங்கள்.
இந்த உரலை தமிழ்மணத்தில் சேர்த்தாலே வலைப்பதிவிற்கு புண்ணியமுமாச்சு.சுமை இறக்கியதுமாச்சு..
முயன்று பாருங்கள்.
பி.கு அதற்காக இதை தமிழ்மணத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.தமிழ்மணம் ஒரு தனி மனிதனின் மொத்த உழைப்பு.தேடி தேடி புது உத்திகளை கையாண்டு நெறிப்படுத்திய ஒரு வலைப்பதிவனின் தேடல்.எனவே அதற்கென்று சில அனுகூலங்கள் இருக்கும்.
காசியின் முடிவுபற்றி தீவின் கருத்து.-
“நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல.”
தமிழ்ப்பதிவுகள்
Read More...
Summary only...
தமிழ்ப்பதிவுகள் ,இது ஒரு சோதனை முயற்சி வராதீங்க,தமிழ்ப்பதிவுகள்..
Read More...
Summary only...