வயாக்ரா ஜூஸ்
கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் (A)
மூலம் தமிழ்முரசு மாலைத் தினசரி
தமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்
எமது பலத்தை அறிந்து எமக்கும் ஓரு சீட்டை கோவையிலோ அல்லது காசிமேட்டு தொகுதியையோ தரும் கட்சிக்கு எமது பலத்தை நிருபித்து அந்தக் கூட்டணி கட்சியினரை ஆட்சிக் கட்டிலில் படுத்துவோம் என வபக சார்பில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தீவு இன்று பத்திரிகையாளர் மத்தியில் பரபரப்புபேட்டி ஒன்றை வழங்கினார்.
பேட்டியின் மேலதிக விபரம் கட்சி பலம் மற்றும் இதர விடயங்கள் யாவும் கொபசெ அவர்கள் வேலைக்குப்போட்டு வந்து வெளியிடுவார் .அதுவரை பத்திரிகைகள் உளவுப்பிரிவுகள் அமைதி காக்கும்படி கழக கண்மணிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
செந்தமிழ் காவலர்களின் தேர்தல் பேச்சை இட்லிவடை ஒரு சில உதாரணங்களோடு காட்டியுள்ளார்.
எனக்கு இதில் பெரிய ஆச்சர்யமென்னவென்றால் ஆட்டோ பயம், ஓட ஓட வாள்வெட்டு என தமிழக அரசியல் இருக்கும் என நினைத்தால் இந்த கருத்து சுதந்திர அரசியல் நன்றாகத்தானிருக்கிறது.
அவனவன் அகண்ட காவேரியிலிருந்து, ஒண்டிக்கு ஒண்டி வாரீயா என வீராப்புடன் பேசுமளவிற்கு தமிழக அரசியல் ஜனநாயக உரிமை இருப்பதை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.
சில விடயங்கள் தேவைக்கதிக வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றன என்பதற்கு(ஆட்டோ பயம்) இந்த தேர்தல் மேடைப்பேச்சுக்கள் உதாரணமாகவிருக்கின்றன.
Posted by theevu | Permalink | 4 comments
Posted by theevu | Permalink | 5 comments