இரவிசங்கர் சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டு ...
நமக்கெல்லாம் ஒரு பின்னூட்டம் வந்தாலே பெரிய காரியம்..
இந்த நிலமையில் நாற்பது என்று உயரெல்லை வேறு...சும்மா சும்மா வெறுப்பேற்றுவது என்று திட்டமிட்டு சதி நடக்கிறது.
வாழ்க வளர்க..
Read More...
Summary only...
பிரபாகரன் போருக்கு போகும்போது பொங்கி வடைமாலை சாற்றி போவதாக யாரோ இணையத்தில் கயிறு விட்டிருந்தார்கள்.
நல்ல போர் முடில் இருந்த எனக்கு இப்படி எல்லாம் கேட்க புளுகமாகவிருந்தது
யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி 5 ஆண்டு பொறுமையாகவிருந்து அது கடந்தும் ஒன்றும் நடக்காவிட்டால் பெரிய பிரளயமே உருவாகப்போகுது என அரசியல் இராணுவ ஆய்வுப் பொடிகள் வேறு நாளொன்று கோள் ஒன்று (இது வேறு கோள்) என கட்டுரைகள் போட்டு வேறு உசுப்பேத்தியிருந்தார்கள்.
எனவே நானும் எனது சுய புத்தியை கழட்டிவைத்துவிட்டு மரத்தில் அணிலேறவிட்ட கதைபோல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதைவிட இன்னொரு தளத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுடன் அப்படி ஒண்டும்
நடக்காது என்றாலும் சில நேரம் காகம் இருக்க பனம்பழம் விழுந்தாலும் விழலாம் என்றிருந்தது.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட எல்லா விடயத்தை விடவும் எதிர்பார்ப்பும் அப்படி இருந்தபடியால் அந்த கடைசி வசனம் மட்டும் சிலவேளை ஏதும் நடக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை தந்தது..
நானும் உச்சக்ககட்டதை ஒரு நிதர்சனம் வழியாகவோ யாழ் கொம் வழியாகவோ நேரடியாக அனுபவிக்கலாம் என நினைத்து நேற்று வேலைக்கு வேறு லீவு போட்டு நிண்டால் ஒரு அசுமாத்தத்தையும் காணவில்லை.
ஒரு சந்தேகத்தில் வீட்டிலும் கேட்டன் .
"இஞ்சேரப்பா இண்டைக்கு ஏதாவது பொங்கல் படையல் வைக்கக்கூடிய நல்ல நாளே"
"இல்லை வெள்ளிக்கிழமையெண்டால் நல்ல நாள்.ஆனால் அரிசியில்லை போய் வாங்கியாங்கோ "
சரி எல்லா எதிர்பார்ப்பும் வீணாய் போயிற்று எனது லீவும் போயிற்று.
கடைசி பனம்பழம் இருக்க ஒரு காகமாவது விழுந்திருக்கலாம்..
இவங்கள் பொடியளும் ஒரு அறிக்கையோடு ஏமாத்தி போட்டாங்கள்..
இனி என்ன ..
ஆய்வுப் பொடிகள் இதேன் ஒண்டும் நடக்கேவில்லை எண்டு எழுதுவாங்கள் தானே..அப்ப பாப்பம்
புலம்பல் தீவு.
Read More...
Summary only...